காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் – இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) பைத்துல்மால் சார்பில் கடந்த இரண்டாண்டுகளில் வழங்கப்பட்டுள்ள கடன் & உதவித்தொகையாக சுமார் 22 லட்சம் ரூபாய் – தேவையுடையோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகத்தால் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகையாக 3 லட்சத்து 46 ஆயிரத்து 800 ரூபாயும்,
குடிசை கட்ட 84 ஆயிரத்து 22 ரூபாயும்,
மருத்துவம் & சிறுதொழில் உதவித்தொகையாக 7 லட்சத்து 78 ஆயிரத்து 74 ரூபாயும்,
தங்க நகையை ஈடாகப் பெற்று, வட்டியில்லாக் கடனாக 9 லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாயும்
என மொத்தம் 21 லட்சத்து 91 ஆயிரத்து 396 ரூபாய் – தேவையுடையோருக்கு வழங்கப்பட்டள்ளது.
இந்த பைத்துல்மால் பிரிவு 1990ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, நகரில் கருத்து வேறுபாடுகளின்றி – தகுதியுடைய அனைவருக்கும் இன்றளவும் சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
K.S.முஹம்மத் யூனுஸ்
|