பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா – தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், உடல் நல விழிப்புணர்வு நிகழ்ச்சி காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
ஆரோக்கியமான மக்கள்.. சர்வலிமையான தேசம் என்ற முழக்கத்துடன் மாபெரும் விழிப்புணர்வு பிரசாரம் சர்தூத்துக்குடி மாவட்டம் சர்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக 17/12/17 ஞாயிற்றுகிழமை காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்த பிரச்சார இயக்கத்தின் பேரணி மாலை 4.20 மணிக்கு சர்மகாத்மா காந்தி நினைவு ஆர்ச்சில் துவங்கி கடற்கரையில் நிறைவுற்றது.
இந்த நிகழ்ச்சி சர்தூத்துக்குடி மாவட்ட சர்பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் A.செய்யது பாசுல் சமீர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சர்சிறப்பு அழைப்பாளராக சர்ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் உயர்திரு M.சிவலிங்கம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
தூத்துக்குடி சர்ஜிம் மாஸ்டர் R.K ராமன், சர்மாற்றுத்திறனாளிகள் சங்கம் மாவட்ட நிர்வாகி காயல் M.I.முஹம்மது தீபி அவர்கள், சர்திருச்செந்தூர் சர்ஜிம் மாஸ்டர் S.ஜெகன் அவர்கள், T.லிங்கம் சமூக ஆர்வலர் அவர்கள், சர்புதிய விடியல் பத்திரிக்கையின் துனை ஆசிரியர் M.S.அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
சர்தூத்துக்குடி மாவட்ட சர்SDPI கட்சி மாவட்ட தலைவர் M.ஷேக் அஸ்ரப் அலி ஃபைஜி அவர்களும், சர்SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சர்காயல் H.சம்சுதீன் அவர்களும், தேசிய மாணவர் அமைப்பான சர்CFI யின் மாவட்ட தலைவர் M.ரூமான் அவர்களும், சர்பாப்புலர் ஃப்ரண்ட் காயல்பட்டினம் நகர நிர்வாகி K.நிஸார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆரோக்கியத்தை வலியுறுத்தி கராத்தே / யோகா / ஜிம்னாஸ்டிக் / சிலம்பு போன்ற வீர விளையாட்டுகள் பொதுமக்களுக்கு டெமோ செய்து காண்பிக்கப்பட்டது. திரளாக மாணவர்கள் / குழந்தைகள் / பெண்கள் / சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் இறுதியாக வீர விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
K.நிஸார்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காயல்பட்டினம் நகர பொறுப்பாளர்)
|