மரியாதைக்குரிய லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹசன் காக்கா அவர்களே, அன்று நீங்கள் கொடுத்த உற்சாகம் எங்களால் மறக்க முடியாது. குவைத் காயல் நல மன்றம் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.
செய்தி: 2ஆவது பைப்லைன் திட்டம் குறித்து விவாதிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசர கூட்டம்! காரசாரமான வாக்குவாதங்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றம்!! வீடியோ காட்சிகள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒரு பெண் என்று கூட பார்க்காமல் அராஜகம் பண்ணி இருக்கின்றார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
சகோதரி ஆபிதாவின் நிலையை நினைத்தால் மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. நல்லவர் என்று நம்பிய ஒரு உறுப்பினரும் அற்ப துனியாவிற்கு விலை போய்விட்டாரே என்பதை நினைக்கும்போது கோபமாக இருக்கின்றது.
ஐக்கிய பேரவையும் அந்தந்த ஜமாத்களும் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்று புரியவில்லை.
செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் ஊர் பொதுமக்கள் ஜும்ஆ பள்ளிகளிலிருந்து திரண்டு சென்று ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
1. தாழ்வாரம் - பண்டைய காயல் வீட்டில் உள்ள ஒரு பகுதி
2. எண்ட ஈரக்கொள - பிள்ளைகளை கொஞ்சும் வார்த்தை
3. முற்றம் - வீட்டின் ஒரு பகுதி
4. கலயம் - சில வருடங்களுக்கு முன்னால் வரை, கல்யாண விருந்தில், தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்பட்ட மண்குவளை
5. செரட்டாப்பை - சிரட்டையில் செய்யப்பட அகப்பை
6. கரம்bபாட்டல் – Flask
7. காக்கைக்கும் கல்லாபருந்துக்கும் கல்யாணம் - வெயிலடிக்கும்போது மழை பெய்தால், சிறுவர்கள் இந்த வரியை பாடுவார்கள். பல வருடங்களுக்கு முன்னாள் வரை உள்ள பழக்கம் இது.
8. கீச்சாம்புள்ளை - விளையாட தெரியாத சிறுவர்களை, சும்மா பேருக்கு சேர்த்துக்கொள்வார்கள். இது அவர்களைக்குறிக்கும் சொல்.
9. தொட்டாச்சிவிங்கி - தொட்டாச்சினுங்கி என்பது காயலில் இவ்வாறு மாறிவிட்டது
10௦. ஆவுலாதி – புகார்
11. பொரிக்கீஞ்சட்டி - பொரிக்க பயன்படும் சட்டி
12. லெப்ரி – Umpire
13. அத்துக்கார் - அப்துல் காதர்
14. மம்த்துக்கார் - முகமது அப்துல் காதர்
15. வியாத்துமா - பீவி பாத்திமா
16. மெய்த்துக்கார் - முஹியத்தீன் அப்துல் காதர்
17. உட்டனா புடிச்சனா - அதிரடி ஆட்களை இந்த அடைமொழியை வைத்து குறிப்பிடுவார்கள்
18. அஞ்சு மாவு - ஒரு வகை இனிப்பு உணவு
19. வெல்லரியாரம் - கல்யாண வீட்டில் தயாரிக்கப்படும் பண்டம்
20. இருட்டு கசம் - கும்மிருட்டு
அன்பு சகோதரர் ஹிஜாஸ் மைந்தன் என்கிற ராபிய மணாளன் என்கிற M.N.L.முஹம்மது ரபீக் அவர்களுக்கு. தங்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. காயல் மண்ணும், காயல் தமிழும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் எனது பத்து வயது முதல் காயல் பட்டணத்திற்கு வெளியேதான் வசித்து வருகிறேன். பல நாடுகளுக்கும் சென்றிருக்கின்றேன். ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத ஒரு மகிழ்ச்சி, விடுமுறையில் ஊருக்கு வரும்போது ஏற்படுகின்றது. அது ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. உங்களின் கட்டுரையை
படித்தவுடன், காயலில் கழிந்த எனது சிறுவயது நிகழ்வுகளும், சிறுவயதில் நான் பேசிய/கேட்ட காயல் பேச்சுக்களும் சுகமான நினைவுகளாக மனதில் நிழலாடின. அதன் காரணமாகவே, எனக்கு தெரிந்த வார்த்தைகளை பதிவு செய்தேன்.
இந்த தலைமுறை குழந்தைகள், நமதூர் தமிழை எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று
தெரியவில்லை. விடுமுறையில் ஊர் வரும்போது, எனது மகன் என் உம்மா லாத்தாவோடு பேசும்போது, ஒரு குழப்பமே நடக்கும். அவர்கள் பேசும் நிறைய வார்த்தைகள் என் மகனுக்கு புரியாது. அப்போதெல்லாம், அவர்கள் பேசும் வார்த்தைகளை, நான் என் மகனுக்கு புரிய வைப்பேன். எனக்கு நினைவில் உள்ள மீதமுள்ள வார்த்தைகளை கீழே கொடுத்துள்ளேன். நாம் எங்கு சென்றாலும், நமதூர் தமிழை மறக்க கூடாதென்பது எனது அவா. உங்கள் பதிவுகளை படித்திருக்கின்றேன். உங்கள் பதிவுகளும் எழுத்து நடையும் நன்றாகவுள்ளது. உங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
1. வாங்கடா, காசு மாலை, ஒட்டியாணம் - தங்க ஆபரணங்கள்
2. பிச்சாட்டை, ப்ரஹண்டம் - மன உளைச்சல்
3. சம்பளங்கொட்டி உக்கார் - காலை மடக்கி தரையில் சாதாரணமாக உட்காருவது
4. கடயும் - இந்தச்சொல் கிடையாது என்கிற சொல்லுக்கு எதிர்ப்புறம். குழந்தைகள் இந்தச்சொல்லை பயன்படுத்துவார்கள்.
5. Pபைனி - பதநீர்
6. பனாட்டு - ஒரு வகை இனிப்பு பண்டம்
7. துண்டு தேங்கா – முழுத்தேங்காயை இரண்டு பாதியாக உடைத்து, சிரட்டையிலிருந்து தேங்காயை முக்கோன வடிவில் துண்டு துண்டாக வெட்டி எடுத்து கடைகளில் விற்பனை செய்வார்கள்
8. தmeez – ஒழுக்கம்
9. அந்திஸ் – பண்பு
10. நெரப்பமாக - திருப்தி அளிக்கும் வகையில்
11. குமிசமாக - குவியலாக
12. கஞ்சி கடைவது - கேலி செய்வது
13. கழுத பெரட்டுறான், பெரளி பண்றான் - சிறுவர்கள் சேட்டை பண்ணுவதை இவ்வாறு சொல்வார்கள்
14. சந்தனக்குச்சி – ஊதுவத்தி
15. தலவாணி – தலையணை
16. மெத்தை - மாடி, படுக்கை
17. மரூண்டி – மருதாணி
18. குடுத்த மண் - ஆற்று மணல்
19. சோத்த வாடா - சிகப்பு நிறமுடைய பொரியல் பண்டம்
20. கலியா - வாடா மற்றும் சமோசாவிற்கு உள்ளே வைக்கப்படும் பதார்த்தம்
21. கோப்பு - கல்யாணமான புதிதில் மாப்பிள்ளையை கிண்டல் செய்ய பெண் வீட்டார் பயன்படுத்தும் யுக்தி
22. பஞ்சாயத்து போர்டு - நகராட்சி மன்றம்
23. ஹவுழ் - பள்ளி வாசலில் வுழு செய்யுமிடம்
24. கல் Bபேக்கு - கால் பந்தாட்டத்தில் defender சிறப்பாக விளையாடினால் இவ்வாறு சொல்வார்கள்
25. தொட்டி வேட்டி - மூட்டு வேஷ்டி
26. கிடுவு - தேங்காய் மர இலை
27. அமலாகி விட்டாள் - பெண் பிள்ளை பெரியமனுஷி ஆவதை இவ்வாறு கூறுவார்கள்
28. கரட்டு வலக்கு - விடாப்பிடியாய் இருப்பவரை இவ்வாறு சொல்லுவார்கள்
29. மிஸ்கீன் – ஏழை
30. சப் – வரிசை
31. வெளம்பு - கல்யாணம் போன்ற வைபவங்களில் சாப்பாடு பரிமாறுவது
32. முன்கர் நகீர் - அதிகம் கேள்வி கேட்பவர்
33. ராளி – lorry
34. நாசுவத்தி -பல வருடங்களுக்கு முன்னால், காயலில் பிரசவர்த்திற்கு பயன்படுத்தப்பட்ட நர்ஸ்
35. வண்ணான், வண்ணாத்தி - துணி துவைக்கும் தொழில் செய்யும் ஆண், பெண்
36. வெல்லாம்புடி, ஷீலா, பாறை, ஐல, கெண்ட - மீன் வகைகள்
37. கானாங்கருத்தான் கருப்பட்டி பாச்சான் - காயல் பழமொழி
38. நாளைக்கு பெருநாள், நம்மளுக்கு நல்லது, கட்டக்கோழி அறுப்போம், கப்ப கப்ப திம்போம் - பெருநாளுக்கு முந்திய இரவில், சிறுவர்கள் மகிழ்ச்சியில் பாடும் வரிகள்
39. ஓட்டப்பல் சுப்பையா, ஒரு எடத்துக்கும் போவாதே, அப்பம் வாங்கி திங்காதே, அடிபட்டு சாவாதே - பல் உடைந்து இருக்கும் சிறுவர்களைப்பார்த்து சக சிறுவர்கள் கிண்டலாக பாடும் வரிகள்
40. நாறங்கி - தாழ்பாள்
6. மாமா நாட்டி - மாமாவின் மனைவி
7. பண்டம் கிண்டம் இருக்குதா - பண்டம் எதாவது இருக்குதா
8. ஃபாஸு - பரிட்சையில் தேர்ச்சி பெறுவது
9. ஃபைலு - பரிட்சையில் தோல்வி அடைவது
10. சூரத்து - தோற்றம்
11. அதபு – பண்பு
12. அதாபு - தொந்தரவு
13. பைத்தானம் - பருப்பில் செய்யப்பட குழம்பு
14. கொய்யோ முறையோ - கூச்சல் குழப்பம்
15. நாசுவன் - முடி வெட்டுபவர்
16. பல் தீட்டு - பல் துலக்கு
17. தப்புவது - துணி துவைப்பது
18. உம்மா போ-பெண்கள் தங்களுக்கிடையில் பேசும்போது ஆச்சர்யமான விசயங்களைக்கேட்டால், இந்த சொல்லைப்பயன்படுத்துவார்கள்
19. வலா ஹவ்ல வலா குவ்வத்த - ஆச்சர்யமான் விசயங்களை கேள்விப்பட்டதும், வயதான பெண்கள் இவ்வாறு சொல்வார்கள்
20. மோதியப்பா - மோதினார்
21. ஆலிமிசா - ஆலிம், இமாம்
22. கை மலிஞ்சான் சாமான் - விலை குறைவான பொருள்
23. தோழாப்பா - வாப்பாவின் நெருங்கிய தோழர்
24. தோழிமா - உம்மாவின் நெருங்கிய தோழி
25. உண்டகலயம் - இறைச்சியில் செய்யப்படும் வடை
26. முத்து மாமா - உம்மாவின் சகோதரர்களில் மூத்தவர்
27. முத்தாச்சி - உம்மாவின் தங்கைகளில் மூத்தவர்
28. பாங்கு - பள்ளி வாசலில் செய்யப்படும் தொழுகை அழைப்பு
29. டங்கா - பள்ளி வாசலில் பாங்குக்கு முன்னாள் அடிக்கப்படும் முரசு
30. தராவியா - தராவிஹ் தொழுகை
36. கோக்காலி - மிகப்பெரிய ஸ்டூல்
37. கட்டுமானம் - கட்டிடப்பணி
38. சபர் – பயணம்
39. கலாம் கதீர் / மீட்டர் - அதிகம் பேசுபவர்
40. ஒசுவாஸ் பாத்திமா - பாத்ரூமில் அதிகம் நேரம் இருப்பவர்
41. சிரியார்க்கு இன்பங்காட்டாதே, சேனைக்கு புளி ஊத்தி ஆக்காதே - வயசான கம்மாக்கள் பயன்படுத்தும் பழமொழி
42. கூட்டஞ்சோறு - பிக்னிக் செல்லுதல்
43. தளவாட சாமான் - சமையல் பாத்திரங்கள்
44. பரணி - பழங்காலத்து காயல் வீடுகளில் சாமான்கள் வைக்க பயன்படும் பகுதி
45. போக்கு, முற்றம், தலவாசல் - வீட்டில் உள்ள பகுதிகள்
46. ஏல் கல், குச்சி கம்பு, ரைட்டா ராங்கா, பூ பறிக்க வருகிறோம், கிளியாந்தட்டு - இருபது முப்பது வருடங்களுக்கு முன்னாள் காயல் சிறுவர்களின் விளையாட்டுக்கள்
47. கம்யூட்டர் – கம்ப்யூட்டர்
48. ஆபாக்கள் - முன்னோர்கள், பெரியோர்கள்
49. உடுப்பு - கல்யாண வைபவத்தில் ஒரு பகுதி
50. ஒன்னுதடக்க ஒன்னு, தன்னுதடக்க தடி - காயலில் பயன்படுத்தப்படும் பழமொழி
51. அத்துட்டு பிச்சிட்டு வர்றான் - சிறுவர்கள் சேட்டை பண்ணுவதை இப்படி சொல்லுவார்கள்
52. சீப்பனியம் - கல்யாண வீட்டில் தயாரிக்கப்படும் பண்டம்
53. சாக்கோட்டி - குழந்தை உண்டாகி இருக்கும் பெண்கள் வாந்தி எடுக்கும்போது இவ்வாறு குறிப்பிடுவார்கள்
54. சல்லாமை - நோய்
55. திட்டு வாசல் - திண்ணையில் உள்ள வாசல்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross