Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:46:33 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameJaved Nazeem
PlaceChennai
Approved Comments23
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
23
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: உ.பி.யில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கருதப்பட்டவரை அடித்துக் கொன்றவர்களைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Javed Nazeem (Chennai) [10 October 2015]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 41962

"மாட்டிறைச்சி உண்டவரை" என்பது தவறு. "மாட்டிறைச்சி உண்டதாக கருதப்பட்டவரை" என்பது தான் சரி. பரிசோதனை முடிவுகளில் அவர் உண்டது ஆட்டிறைச்சி தான் என அறியப்பட்டது.

http://goo.gl/mycqRO

[Administrator: செய்தி திருத்தப்பட்டது. நன்றி.]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பல ஆண்டுகளுக்கு பிறகு நகரில் பெருவாரியானவர்களுக்கு ஒரே தினத்தில் ஹஜ் பெருநாள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Once in a Blue Moon
posted by Javed Nazeem (Chennai) [16 September 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41860

இறைவனுடைய நாட்டத்தில், முழுமையான மனமாற்றம் வரும் வரை இது போன்ற தற்காலிக நிகழ்வுகளில் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.

இன்றைக்கு காயலில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் அதான் ஒலிக்கிறது. ஆனால் ஒரு கால கட்டத்தில் அப்படி இல்லை - ஒவ்வொரு பள்ளிக்கும் வித்தியாசமான நேரம் இருந்தது. மார்க்க மேதைகள் இறை அச்சத்துடன் கூடி ஒரு முடிவு எடுத்தார்கள் - அது இன்று வரை தொடர்கிறது. ஆனால் இன்று ஒவ்வொருவரும் எனக்கு தான் மார்க்கம் அதிகம் தெரியும் என்று காட்டிக் கொள்ளவே முற்படுகிறோம். இறைவன் காக்க வேண்டும்.

மேலே படிக்க: https://goo.gl/y1XIVC


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நிராதரவாக இறந்த இளைஞரின் உடல் 19 மணி நேர அலைச்சலுக்குப் பின் ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் நல்லடக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Javed Nazeem (Chennai) [10 September 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41824

இது போன்ற உணர்வு ரீதியான விஷயங்களில் விலாவாரியாக செய்திகளை வழங்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உண்மைக்கு புறம்பில்லாமல், தேவையான தகவல்களை மட்டும் வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: kayalpatnam.com இணையதளம் தொழில்நுட்ப பிரச்சனை சரி செய்யப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Welcome back :)
posted by Javed Nazeem (Chennai) [21 July 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41378

Happy to see the website back. I consider this website as a milestone in KPMs history and we have crossed the stage of just sharing local info like weddings, deaths etc. long back. Most of the info - especially, special news items on DCW etc - are records which are born out of meticulous work and needs to be preserved and made available. All these are made possible by limited, service minded resources. Having said all that, more than a days downtime is certainly a concern which I hope will be addressed accordingly..

இந்த கருத்து எங்க பதியணும்னு தெரில - அதனால கேபிள் கட்டான எடத்துல பதிஞ்சிருக்கேன். குத்து மதிப்பா ஒத்து வருதில்ல? வெப்சைட் டௌன் ஆனது பத்தி ஒரு நியூஸ் போடலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அதிகம் இல்லை ஜெண்டல்மென், 1000 லிட்டர் தண்ணீர் 50 பைசா தான்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..To Shaik Abdul Cader
posted by Javed Nazeem (Chennai) [02 May 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 40326

"வஞ்சப்புகழ்ச்சி" என்கிற வார்த்தை இங்கே நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது - நேரடி அர்த்தம் கொள்ள வேண்டாம். முன் பின் வரிகளை சேர்த்து படித்தால் புரியக் கூடும். புண்படுத்தும் / குறைகூறும் நோக்கம் சிறிதும் இல்லை. அப்படி நீங்கள் கருதும் பட்சத்தில் வருந்துகிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அதிகம் இல்லை ஜெண்டல்மென், 1000 லிட்டர் தண்ணீர் 50 பைசா தான்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தண்ணி காட்டுறோ
posted by Javed Nazeem (Chennai) [29 April 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 40263

இரண்டு வாரங்களுக்கு முன், பூவுலகின் நண்பர்கள் ஏற்பாட்டில் "Even the Rain" என்கிற படம் சென்னையில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. நண்பன் பஷீர் தகவலில் அவனும், மற்றொரு நண்பனும், நானும் சென்று படத்தைப் பார்த்தோம். 2000 ஆண்டு வாக்கில் பொலிவியாவில் நடந்த நிகழ்வின் பின்னணியில் அந்தப் படம் உருவாக்கப்பட்டு இருந்தது.

பின்னணி இது தான் - பொலிவிய அரசு தண்ணீரை தனியார் உடமையாக்கி அதனை விற்கும் உரிமையை ஒரு MNC க்கு தருகிறது. மழை நீரின் ஒரு துளி கூட மக்களுக்கு சொந்தமில்லை. மீறினால் கடும் தண்டனை. மக்கள் எதிர்ப்பு வெடிக்கவே தனியார் கம்பெனி ஊரை விட்டு வெளியேறுகிறது.

விழிப்புணர்வு ஏற்பட்டு தக்க முயற்சிகள் எடுக்கவில்லையெனில் ஒரு துளி நீருக்காக அலையும் நிலை ஏற்படலாம். இறைவன் காக்க வேண்டும்.

சகோதரர் ஷேக் அப்துல் காதர், நம்முடைய இணைய தளம் பற்றி நல்ல கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. "செய்திகளை முந்திதருவதாகட்டும்.." - இது மட்டும் வஞ்சப் புகழ்ச்சி போல் தோன்றுகிறது. அப்ரூவ் பண்ணும் போது அட்மினே சிரித்து இருப்பார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுவில் விடைபெறும் தலைவருக்கு பிரியாவிடை! புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
أهلاً وسهلاً
posted by Javed Nazeem (Chennai) [21 April 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 40234

இத்ரீஸ் அப்பா பற்றி எழுத ஒரு வாய்ப்பை வழங்கிய வல்ல அல்லாஹ்வுக்கே பகழ் அனைத்தும்.

இந்தப் பதிவு சிறிது நீளமாக அமையக் கூடும். சில இடங்களில் சுய புராணம் போலவும் அமையக் கூடும் - அது கொஞ்சம் உண்மைதான் (ஒரு வெளம்பரம்.. ஹி ஹி ..). சுவாரஸ்யமாக இருக்கும் என எண்ணுகிறேன், தொடர்ந்து படியுங்கள் இன் ஷா அல்லாஹ்.

மஞ்சளுக்கும் ஆரஞ்சுக்கும் இடைப்பட்ட நிறம் என நினைக்கிறேன். அந்த நிறத்தில் ஒரு ஸ்கூட்டர். அதில் எங்களை (தம்பி, பாதுல் மற்றும் நான்) பெருநாள் தொழுகைக்கு அழைத்துச் செல்வார்கள். அவர்கள் மணமுடித்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளை அழைத்துக் கொண்டு தீவுத்தெரு ஜமாஅத்தினரோடு தொழுதிருந்தால் அதுவும் சரியான செயல்தான். ஆனால் அவர்களோ தாய் வீட்டுக்கு வந்து எங்களை தாயிம்பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்.

ஒரு முறை பெருநாள் தொழுகைக்குப் பிறகு ஒரு கைப்பையில் வைத்து பெருநாள் துட்டு கொடுத்து வந்தார்கள். "என்ன அப்பா? நீங்களும் (ஒரு அரசியல்வாதியை குறிப்பிட்டு) அவரைப் போல ஒரு பையைத் தூக்கி விட்டீர்கள்" என்று தம்பி துடுக்குத்தனமாக கேட்டான். "அடேய், அவருடைய பையில் பொய் தான்டா இருக்கும்" என்று உடனடியாக ரைமிங்கில் பதில் கொடுத்தார்கள்.

கம்லாவதியில் நான் படித்த காலங்களில் உடல் நலக் குறைவு ஏற்படுவது கண்டு மிகவும் வருந்துவார்கள். உம்மாவும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் விரும்பியதால் தொடர்ந்து அங்கேயே படிக்க வேண்டியதாயிற்று.

சில சமயம் அவர்கள் தைக்காத் தெருவுக்கு ட்ரீட்மெண்ட் அளிக்கச் செல்வார்கள். அங்கே நடக்கும் ஒரு சம்பவத்தை வைத்து எனது மாதாந்திர பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்வார்கள். அதாவது, அவர்களைப் பார்த்ததும் நண்பன் அப்துல்லாஹ் ஜவ்ஹாரி எட்டுக்கால் பாய்ச்சலில் எஸ்கேப் ஆகி விட்டான் என்றால் அவனை விட நான் அதிக மார்க். நின்று சலாம் சொல்லி நலம் விசாரித்தான் என்றால் அவன் அதிக மார்க் - அப்படியே என்னைப் பற்றி கொஞ்சம் போட்டுக் கொடுத்து விட்டுப் போவான். (பள்ளியில், சிறந்த மாணவர்களுள் அப்துல்லாஹ்வும் ஒருவன். இன்று, இறைவன் அருளால் உயர்ந்த நிலையில் இருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்)

ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் தினம். நாங்களே ஆசிரியர்களாக மாறி பாடம் நடத்த வேண்டும். நான் போக மாட்டேன் என்று அடம் பிடித்தபோது உம்மா, அவர்களிடம் புகார் அளித்து விட்டார்கள். நிறைய நேரம் மிகவும் பொறுமையாக பேசி என் மனதை மாற்றி விட்டார்கள். அடுத்த நாள், ஆசிரியர் தினத்தில் பள்ளியில் பாடம் நடத்தியது இன்றும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக உள்ளது.

என்னுடைய பள்ளி, கல்லூரி மற்றும் திருமண நேரத்தில் அவர்கள் ஊக்கம் அளித்தும் வாழ்த்தியும் எழுதிய கடிதங்கள் இன்னும் உம்மாவிடம் பத்திரமாக உள்ளது என எண்ணுகிறேன்.

தம்பி ஒரு முறை மதிய உணவில் சோற்றைத் தொடாமல் தொட்டுகிடவையே உண்டுகொண்டிருந்தான். "என்னடா விலாசத்தையே படிச்சிட்டு இருக்கா, கடிதத்த உள்ள படி" என்றார்கள்.

அவர்கள் ஒருமுறை கடற்கரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்களையே தலைவராக ஆக்கி விட்டார்கள். "கல்யாணத்திற்கு விருந்துக்கு வந்த என்னை மாப்பிள்ளை ஆக்கி விட்டீர்களே" என்று சொல்லி உரையை துவங்கினார்கள்.

சபரில் ஊர் வரும் நேரங்களில், முதலில் தாய் வீட்டுக்கு வந்து அனைவரிடமும் போதிய நேரம் அளவளாவிய பின்னரே அவர்கள் வீட்டுக்கு செல்வார்கள். உறவுகளின் மெல்லிய உணர்வுகளை உணர்ந்து செயல்படுவதால்தான் இன்றளவும் அனைவராலும் நேசிக்கப் படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

அன்பு சகோதரர் மக்கி "வயதாகி விட்டது" என்று ஒரு பதிவில் பாசத்துடனும் அக்கறையுடனும் குறிப்பிட்டு இருந்தார்கள். இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வந்த பின் அவர்களோடு சிறிது நேரம் பேசிப் பாருங்கள். உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள்.

எங்கள் குடும்பத் தலைவர்கள் பற்றி அறிந்தவர்கள், அவர்களுடைய பொதுச்சேவையில் ஆச்சரியம் அடைய மாட்டார்கள் என எண்ணுகிறேன். இருப்பினும், மற்றொரு தேசத்திற்கு சென்ற பின்னும் பொதுச்சேவையில் ஆர்வம் செலுத்தி, உடல் உழைப்பு, நேரம். மற்றும் பொருள் ஆகியவற்றை வழங்குவதும் - அதற்கு ஒரு முன் மாதிரியாக செயல்படுவதும் ஒரு சிறப்பான செயலாகும். இதற்கான கூலியை இறைவன் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அதிகமாக வழங்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வந்த பின் நிச்சயம் அப்பாடா என்று இருக்க மாட்டீர்கள். சேவைக்கான பல்வேறு வாய்ப்புகள் தொடர்ந்து வரும். அவை உங்களுக்கு போதுமான ஊக்கமாக அமையும். அதே வேளையில் உடல் நலத்தில் போதிய அக்கறையும், இடையிடையே தேவையான அளவு ஓய்வையும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான உடல் நலத்தையும், நிம்மதியையும் சந்தோஷத்தையும், குறைவின்றி வழங்குவானாக!. ஆமீன், ஆமீன், ஆமீன் யாரப்பல் ஆலமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் தலைவருக்கு வாகனம் அவசியம்! அது எனது கோரிக்கையே!! 01ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் ஏ.லுக்மான் விளக்கம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அப்படித்தான்... ஆனா அப்படி இல்ல!
posted by Javed Nazeem (Chennai) [19 March 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 39686

தீர்மானம் தோற்று விட்டது. பால்ய நண்பர்கள் பதுருல் ஹக் மற்றும் மொஹிதீன் மட்டுமே எதிர்த்த தீர்மானம் தோற்று விட்டது.

ஆயினும் தீர்மானம் வென்று விட்டது - நகர்மன்றத் தலைவர் மாற்றி எழுதி விட்டார் அல்லவா? அதனால் வென்று விட்டது.

நகரின் மிகப்பெரும் இயக்கம் நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து வென்று, அதன் மூலம் இவர் என்ன தவறு செய்ய மாட்டார் என்று கண் கொத்தி பாம்பு போல் ஒவ்வொருவரும் கவனித்து வரும் நிலையிலும், பெரும்பாலான உறுப்பினர்கள் அவருக்கு எதிராக இருக்கிற நிலையிலும் நகர்மன்றத் தலைவர் மாற்றி எழுதி விட்டார் அல்லவா? அதனால் வென்று விட்டது.

இதெல்லாம் லாஜிக், எமக்கு வேண்டியது மேஜிக் - சாரி உண்மை என்பார் சகோதரர். உண்மைதான். பேசுவோம்.

தீர்மான நகல் வடிவம் உண்மையாக எப்பொழுது கிடைத்தது? என்று சுல்தான் காக்கா கேள்வி எழுப்புகிறார்கள். உறுப்பினர்களுக்கு கொடுத்த நகல் மட்டும் தீர்மானம் தோற்று விட்டது என்று காண்பிக்கும் வகையில் மந்திரத் தன்மை கொண்டு அமைக்கப்பட்டது. இது உண்மை.

வழக்கமாக ஒரு நிகழ்வு நடந்தால், குறைந்தது ஒரே ஒரு மாதத்திற்கு மேல் சுடச்சுட செய்தி தரும் நம் இணைய தளம் அதிசயமாக ஒரே வாரத்தில் செய்தி தருகிறது. அதில் தீர்மானம் வென்றதாகத் தானே இருக்கிறது என்று யாரேனும் கேள்வி எழுப்பலாம். உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு வேண்டியவர்கள் கணிப்பொறியில் மட்டும் தீர்மானம் தோற்று விட்டது என்று காண்பிக்கும் வகையில் மந்திரத் தன்மை கொண்டு அமைக்கப்பட்டது. இது உண்மை.

தீர்மானத்தை மாற்றி அமைக்க வந்த தீர்மானத்துக்கு செல்வோம். "வண்டியே வாணா"னு சொன்ன உறுப்பினர்கள் "நிதிநிலையை கருத்தில் கொண்டு வாணா" என்று சொல்லும் அதிசயத்தை காணலாம். ஏன் என்று கேட்கக்கூடாது. ஏனெனில் உறுப்பினர்கள் அனைவரும் தலைவரின் தீர்மான மாற்ற தவறை மறைத்து அவரைக் காக்கும் வகையில் மந்திரத்தன்மை கொண்டு மாற்றப் பட்டு விட்டார்கள். இது உண்மை.

சகோதரர் ரிபாயின் கேள்விகளில் கிட்டத்தட்ட ஒன்றுக்குமே பதில் அளிக்காமல் சுல்தான் காக்காவின் கேள்விகளில் வீடியோ பற்றிய கேள்வியை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை விட்டுவிட்டு கருத்து சொல்கிறோம் பாருங்கள்? அது திறமை.

இத்தனை அடிப்படை கேள்விகள் பதில்அளிக்காமல் இருந்தும், புதியதாக ஒரு கருத்துப் பதிந்து அங்கேயும் "தீர்மானத்தை தலைவர் மாற்றி எழுதினாரா இல்லையா" என்கிற ஒரே கேள்வியை மட்டும் திரும்பத் திரும்ப கேட்கிறோம் பாருங்கள். அது கடமை.

இன்னும் சகோதரர் ஜஹாங்கிர் மீது பெருமதிப்பு உள்ளது. இது சத்தியம். சில கருத்து வேறுபாடுகளால் அவர் மாற்றுப் பாதையில் செல்வதாக கருதுவதால். தூய்மையான, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர் அவர் என்று நம்புவதால். இந்த அடைமொழியை அதாவது "தூய்மையான, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்" என்கிற அடைமொழியை கீழ்காணும் நபர்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று அவரை வேண்டுவோம்.

Option 1: நகர்மன்றத் தலைவர் Option 2: அவர் தற்போது இணைந்திருக்கும் சில உறுப்பினர்கள். அவர் யாரைத் தேர்ந்தெடுப்பார் என்பதை அவருடைய மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சர்வே எண் 278: மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் நிராகரிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Javed Nazeem (Chennai) [16 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39635

"இப்போது சகோதரர் சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் அவர்கள் பேசுவார்கள்" என்று தான் சொல்லி இருந்தேன் - ஏசுவார்கள் என்று படித்து விட்டீர்கள் போலிருக்கிறது. அடையாளமே தெரியாத என்னை "வேலை வெட்டி இல்லாதவன்", "ஜால்ரா அடிப்பவன்" என்று ஏக வசனத்தில் வாழ்த்தி இருக்கிறீர்கள். என்னுடைய பாவங்கள் குறைந்தது போல் இலேசாக உணர்கிறேன்.

பல நேரங்களில், இயலாமையின் வெளிப்பாடுதான் கோபம் என நான் எண்ணுவதுண்டு. உங்கள் பதிவில் பல இடங்களில் அது வெளிப்படுகிறது.

பயோ கேஸ் பற்றிய உங்கள் நிலைப்பாட்டுக்கு மாறாக இந்த இணையதளம் இரண்டு ஆக்கங்களை வெளியிட்டு இருக்கிறது.

வாகன கொள்முதல் விஷயத்தில் உங்கள் நிலைப்பாட்டுக்கு மாறாக சகோதரர் ரிபாய் மற்றும் சுல்தான் காக்கா உடைய தெளிவான கேள்விகள் அமைகின்றன.

இவற்றிற்கு விளக்கமளிக்க முடியாத நிலையில் உணர்ச்சி வசப்படுகிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நம்முடைய நிலைப்பாடுகள் சில நேரங்களில் தவறாக அமைய வாய்ப்பிருக்கிறது. இறைவனின் பொருத்தத்தை மட்டுமே நாடி, சுய பரிசோதனை செய்து சரியான பாதையில் செல்வது மறுமையில் நம்மை வேதனையில் இருந்து காக்கும்.

பணி மிகுதியிலும் என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து இங்கே கருத்து பதிந்தமைக்கு மிக்க நன்றி Brother Rifai, جزاك اللهُ خيرًا


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சர்வே எண் 278: மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் நிராகரிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Javed Nazeem (Chennai) [14 March 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 39606

என்னுடைய கருத்து தனி நபர் விமர்சனம் அல்ல, மாறாக கருத்தாளரின் முந்தைய கருத்துக்களுக்கான பிரதிபலிப்பு மட்டுமே.

இது பற்றிய செய்தி வெளியான போதெல்லாம் கருத்தாளர் தமது கருத்துக்களை ஒரு சார்பாக பதிந்துள்ளார் (http://goo.gl/4aavhd). சுயநலம் பாராது உழைக்கும் ஒரு அமைப்பை, பொய்யர்கள் எனக் கூறுகிறார் (http://goo.gl/Hgp3WP). ஆனால் பின்னர் வெளியான ஆணித்தரமான செய்திகளுக்கு (http://goo.gl/UR19hf / http://goo.gl/8BK39N) மவுனம் காக்கிறார். இதை வெளிப்படுத்துவது மட்டுமே என் நோக்கம். இந்த விளக்கம் போதும் எனக் கருதுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
23
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved