இறகாய் மாறிய இதயங்கள் posted byமுஸ்தாக் அஹமது (குவைத்)[17 October 2015] IP: 37.*.*.* | Comment Reference Number: 42019
பேறு கால எதிர்பார்ப்பிற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு எழுத்தானின் படைப்பு ..
பிரசவித்தப் பின் உச்சி முத்தும் சொந்தங்களை தேடுவது போல பிரசுரத்திற்குப் பின் விமர்சனங்களை தேடி தவமிருக்கும் எழுத்தாள இதயம்
ஒரு இருக்கமான நேரத்தில் என்னை உற்சாகப்படுத்திய என் முதல் ரசிகன் நண்பன் தாவூது என்னை எப்போதும் செ துக்கி செம்மைப் படுத்தும் ஏ எல் எஸ் மாமா மற்றும் உண்மையான உணர்வுகளின் வெளிப்பாடு என் உடன் பிறவா சகோதரர் சுல்த்தான் காக்கா மற்றும் வாட் சப்பின் மூலம் பாரட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். திட்டோ பாராட்டோ பதிந்து விடுங்கள் " அதுவே போதும் இன்னும் பறக்க எளக்கு இறகுகள் ஆகும்.
காக்கா... காக்கா... posted bymust hak Ahamed (Kuwait)[30 June 2015] IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 41188
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கத்தா நீ என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய காக்கா என் பதிவிற்கும் உங்களின் பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. மனதால் கூட நினைக்கவில்லை. அழகான சொல்லாடல் அமைந்து விட் டது. அவ்வளது தான். தவிர என் வீட்டில் தொடர்பாட அத்தனை வாய்புகள் இல்லையாததால் என் போன்று அதீகமானவர்கள் 1ண்ணு வர் என்ற எண்ணத்தில் தான் பதிவிட்டேன் தெரிந்தோ தெரியாம லோ என் பதிவு உங்களை காயப்படுத்தின் நோன்பின் பொருட்டும் அல்லாஹ்விற்கு முன் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் .
சோர்ந்து போகும் மனசு ... posted bymusthak ahamed (kuwait)[23 April 2015] IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 40244
நீண்ட விவாதத்தை தூண்டும் தலைப்பை பார்த்ததும் கட்டுரையை படிக்க சொல்கிறது மனசு.....
முதல் வரியை படிக்கும் போதே ஒரு அயர்வு ஏற்படுகிறது,..
வேறு அண்டை ஊரார் போல , "சமத்துவமும் சகோதரத்துவமும் உள்ளதாம்" என்று ஆசிரியர் குறிப்பிடுவது அவரின் அந்நியத்தன்மையை காட்டுகிறது.
அதனை தொடர்ந்து அவரின் கருத்துக்கள் எல்லாமே காயல் மண்ணிலிருந்து அவரை தனிமைப்படுத்துகிறது. வாழ்வின் வாழ்க்கை முறையின் கூறுகளை திறன் செய்யாத அல்லது செய்ய விரும்பாத ஒரு பக்க சார்புடைய கருத்தை அதுவும் மேம்போக்காக சொல்லும் பதிவாகவே இருக்கிறது.
என் அனுபவங்கள் ஆசிரியரின் எழுத்துக்கு முற்றிலும் மாற்றமாகவே இருக்கிறது...ஒரு வேளை பார்வையும் கோணங்களும் மாறுபடலாம்
இருப்பினும் தான் சொல்ல முயலும் கருத்துக்களை நியாயப்படுத்தும் ஆழமான களப்பணிகள் எதுவும் அவர் செய்ததாக அவர் எழுத்துக்கள் சொல்லவில்லை...
அப்படி அவர் முயற்சி செய்திருந்தால் இந்த கட்டுரைக்கான அவசியம் குறித்தும் ஒரு தீர்வு கிடைத்திருக்கும்.
காயலின் பாரம்பரியம் சார்ந்த ஒருவரின் கட்டுரையை படித்து முடிக்கும் போது மனதை கிள்ளி தாள முடியா சோர்வை ஏற்படுத்துகின்றன அந்த இரண்டு காகங்களும்...........
பெருமதிப்பிற்குரிய வித்தகர் , அறிஞர் உங்களைப்போல உங்கள் எழுத்துக்களும் போற்றி பாதுகாக்கபடவேண்டியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மெய் நிகர் உலகின் பரந்த வெளியில் தன் வாழ்வின் பெரும்பாலான தேவைகளுக்கு தீர்வு காண முற்படும் இன்றைய இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து வாசிப்பாளர்களையும் உங்கள் கருத்தின் பக்கம் இழுத்து அணைக்க மிகப் பெரிய எழுத்தாளுமை அவசியம் .... அதன் வீச்சும், வசீகரமும் தேவையான விகிதம் மாறும் போது அந்த அதிசயம் நிகழ்ந்தே விடும்.
அந்த ஆளுமையின் கீழ் கட்டமைக்கப்படும் உங்கள் கட்டுரைகள் குறித்து உங்களின் எதிர்ப்பார்ப்பு நீங்களே அறியாத மாற்றங்களை எற்படுத்தும்... இன்ஷா அல்லாஹ்
உங்களுக்குத் தெரியாததல்ல...............
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross