Re:... posted bySalih (Chennai)[25 March 2015] IP: 182.*.*.* India | Comment Reference Number: 39834
உறுப்பினர் சாமி அவர்களின் கருத்து பதிவில் சில தவறான தகவல்கள் உள்ளதால் இந்த விளக்கம்.
//
ஓராண்டுக்கு முன்னாலேயே, விரிவாக்கப்பணிக்கு அரசின் ஒப்புதலை பெற்று, அதற்குரிய கட்டிடத்தை கட்ட சம்பிரதாய சட்டப்படி நகராட்சி ஆணையருக்கு DCW நிர்வாகத்தினர் விண்ணப்பித்திருக்கிறார்கள் ... // Copy & Paste
2006ம் ஆண்டு DCW நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், காஸ்டிக் சோடா, நிலக்கரி மூலமான மின் உற்பத்தி மற்றும் Synthetic Iron Oxide Pigments Plant (SIOPP) என்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது. ஆனால் அதில் SIOPP தொழிற்சாலையை - DCW நிறுவனம் துவக்காமல் இருந்து வந்தது.
இந்த (SIOPP) தொழிற்சாலைக்கு தான், டிசம்பர் 2013இல் நகர்மன்றதிற்கு தெரியாமல், ஆணையர் கட்டுமான அனுமதியை கொடுத்துள்ளார். தற்போது KEPA வழக்கில் உள்ள விரிவாக்கப்பணிகளுக்கு அல்ல.
// அந்நேரத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, உற்பத்தியும் நடந்து கொண்டிருக்கும்போது, ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேறிவிடுவதாலயே உற்பத்தியை நிறுத்திவிட முடியாது. இதுவும் தலைவர் உட்பட்ட அனவருக்கும் தெரியும். // Copy & Paste
இதுவும் தவறான தகவல். SIOPP உற்பத்தியை துவக்க DCW நிறுவனம் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் - விண்ணப்பம் செய்துள்ளது. ஆனால் - இதுவரை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், நாம் அறிய, Consent To Operate - CTO என்ற அனுமதியை வழங்கவில்லை.
SIOPP கட்டுமானமே சட்டத்திற்கு புறம்பாக நடந்துள்ளது, எனவே அதனை ரத்து செய்கிறோம் என்ற தீர்மானத்தை நகர்மன்றம் நிறைவேற்றியிருந்தால், இது வரை SIOPP உற்பத்தியை துவக்க (CTO) அனுமதி வழங்காமல் இருக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இனியும் SIOPP தொழிற்சாலையில் உற்பத்தியை துவக்க அனுமதி வழங்காமல் இருக்க, கண்டிப்பாக அந்த தீர்மானம் தோதுவாக இருக்கும்/இருந்திருக்கும்.
Re:... posted bySalih (Chennai)[23 November 2014] IP: 182.*.*.* India | Comment Reference Number: 38266
தனியார் நிலம் குளமாக இருந்தால் நகராட்சியால் ஒன்றும் செய்ய முடியாது என்று கிடையாது.
THE TAMIL NADU MUNICIPALITIES BUILDING RULES, 1972 சட்டத்தின் படி - மழை நீர் வழிந்தோட ஏற்பாடு செய்யாமல், அங்கு கட்டிடம் கட்ட மறுக்கவும் நகராட்சிக்கு அதிகாரம் உண்டு.
THE TAMIL NADU MUNICIPALITIES BUILDING RULES, 1972
6 (2) No site, which would admit storm-water draining into it, owing to its level or location, shall be used for the construction of a building, unless arrangements are made to prevent effectively the flooding of the site, either by draining into a storm water course, if one is available, or by raising the level of the site to an adequate height by the deposit of
layers of sound and non-perishable material.
Re:... posted bySalih (Chennai)[23 November 2014] IP: 182.*.*.* India | Comment Reference Number: 38258
56 சர்வே எண்களில் குளங்கள் உள்ளதாக / இருந்ததாக வரைப்படங்கள் தெரிவிக்கின்றன. ஒரு சர்வே எண்ணில் பல குளங்கள் காணப்படுகிறது. இவைகளில் பெருவாரியானவை தனியார் நிலங்கள். இது 1986ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைப்படம்.
Re:... posted bySalih (Kayalpattinam)[31 July 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36169
மவ்லவி கடாபி அவர்களுக்கு,
/* இதுபோன்ற எழுத்துக்கள் உங்கள் காழ்புணர்ச்சியையும், அதிமேதாவித்தனத்தையுமே காட்டுகிறது.*/ C & P
/* எனது இந்தக் கருத்திற்கும் மறுப்பு என்று எதையாவது எழுதி மீண்டும் அசிங்கப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.*/ C & P
வாதங்களுக்கு பதில் இல்லாத போது, தடித்த வார்த்தைகள் மூலம் பிறரை சாடுவது - தமிழகத்தில் பல இயக்கங்கள் கையாழும் ஒரு யுக்தி. அதனை தாங்களும் கையாளுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
/* அமாவாசை இரு தினங்களில் வரும் என்று நீங்கள் குறிப்பிட்டதே இல்லையா? */ C & P
தாங்கள் குறிப்பிட்டுள்ள இணையதள செய்தியில் இருந்து வசதியாக முதல் பத்தியை நீக்கிவிட்டு இந்த கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். செய்தியை மீண்டும் பார்க்கவும்.
http://www.kayalpatnam.com/shownews.asp?id=14172
[செய்தி எண் 14172இல் இருந்து: ஜூலை 26 அன்று இங்கிலாந்து நேரப்படி இரவு 10:41 மணிக்கு அமாவாசை ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் ஜூலை 27 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:11. மேலும் ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் நேரம் ஜூலை 27 ஞாயிற்றுக்கிழமை காலை 8:41. எனவே அமாவாசை தினம் என ஒரு குறிப்பிட்ட தினத்தை கூற முடியாது என்பதனை இதில் இருந்து காணலாம்.
அமாவாசை என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் நிகழ்வு என்பதால் உலகின் ஒரு சில பகுதிகளில் ஜூலை 26 அமாவாசை தினமாகும். வேறு பகுதிகளில் ஜூலை 27 அமாவாசை தினமாகும்.]
Re:... posted bySalih (Kayalpattinam)[31 July 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36167
மவ்லவி பிர்தௌஸி அவர்களுக்கு,
தங்களின் இரு கருத்து பதிவுகளும் செய்திக்கு தொடர்பற்ற, தாங்கள் உண்மையென நம்பும் சில விசயங்களை, அடிப்படையாக கொண்டவை. இந்த செய்திக்கு தொடர்பானவை அல்ல. எனவே - அதற்கு தற்போது பதில்கள் கூறுவது, திசை திருப்பும் செயலாகவே அமையும்.
தங்கள் கருத்து பதிவில் - புகைப்படங்கள் எடுத்தவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அல்ல எனக்கூறுகிறீர்கள். ஏன், நியூசிலாந்து நாட்டில் தற்போது படம் எடுத்த சகோதரர் ஆரிப் முஸ்லிம் அல்ல என்கிறீர்களா? தவறான நம்பிக்கைகள் என ஏற்றுக்கொள்ள மனம் இல்லை என்றால் குறைகளை கூறிக்கொண்டே போகலாம். புகைப்படம் ஆதாரம் வேண்டும் என்றீர்கள். அது வந்தவுடன் எடுத்தவன் கிருஸ்துவன் என்றீர்கள். ஒரு இஸ்லாமியன் தந்தவுடன் சியா என்றீர்கள். சியா அல்லாத பிற இஸ்லாமியன் என்றால் - பெயர் தாங்கி முஸ்லிம் என்றோ, யூத/சி.ஐ.ஏ. உளவாளி என்று கூறுவீர்கள் போலும்?
விசயத்திற்கு வருவோம். தங்கள் கருத்து பதிவில் - 1 சதவீதம் கூட ஒளி பெறாத (ILLUMINATION) பிறையை எவ்வாறு கண்டார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். அப்படி என்றால் - ஹிஜ்ரா குழுவின் நம்பிக்கைப்படி, பிறை கண்ணில் தெரிய, குறைந்தது 1 சதவீதம் அல்லது அதற்கு மேல் ஒளி (ILLUMINATION) பெற்றிருக்க வேண்டும் என எடுத்துக்கொள்ளலாமா? அல்லது அது 1.1 சதவீதமா, 1.5 சதவீதமா, 2.0 சதவீதமா?
Re:... posted bySalih (Kayalpattinam)[30 July 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36161
/* சந்திர மாதத்தில் இரண்டு தினங்கள் அமாவாசை நடைபெறும் என்று துணிந்து எழுதுகிறீர்கள்.*/ C & P
மவ்லவி கடாபி அவர்களுக்கு, இந்த செய்தியில், அமாவாசை இரு தினங்களில் நடப்பதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.
எனவே - எழுதப்படாத ஒன்றை எழுதப்பட்டுள்ளதாக கூறுவது முறையல்ல.
அமாவாசை ஜூலை 26 அன்று இங்கிலாந்து நேரப்படி (UTC) இரவு 10:42 மணிக்கு ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அப்போது இந்திய நேரம் ஜூலை 27 அதிகாலை 4:12 என்று கூறுவதால் இரு தினங்களில் நடந்ததாக கூறுவது ஆகாது
என்பது கூடவா தங்களுக்கு புரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
இன்னும் எளிதாக சொல்லவேண்டும் என்றால் - பிரேசில் நாட்டில் உலக கோப்பை இறுதி போட்டி பிரேசில்
நேரப்படி ஞாயிறு மாலை 16:00 க்கு துவங்கும் என்று கூறி, அப்போது இந்திய நேரம் திங்கள் அதிகாலை 1:30
என்று கூறுவதால், இரு தினங்களில் இறுதி போட்டி நடந்தது எனக் கூறுவது போல் ஆகுமா?
/* மீண்டும் மீண்டும் அமாவாசை போட்டோ பிறையை பதிக்கிறிர்கள். */ C & P
ஹிஜ்ரா குழுவின் வெளியீடுகளில் - ஒரு குறிப்பிட்ட தேதி அமாவாசை தினம் என்றும், அதற்கு ஒரு நாள் முன்னர்
உர்ஜனல் கதீம் என்ற பிறையின் இறுதி வடிவம் தெரியும் தினம் என்றும், (அமாவாசை தினத்திற்கு) அடுத்த நாள் புது மாதம்
துவங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி - ஜூலை 25, 2014 - உர்ஜனல் கதீம் தினம். ஜூலை 26, 2014 என்பது அமாவாசை தினம். ஜூலை 27, 2014 புது மாதம் துவக்கம். இது தானே உங்கள் கருத்து?
இதன் தொடர்ச்சியாக, தங்கள் நம்பிக்கைப்படி, அமாவாசை தினமான ஜூலை 26 அன்று உர்ஜனல் கதீம் பிறை
(அதிகாலையில் காணும் தேயும் பிறை) தென்பட்டிருக்க கூடாது? இதுவும் சரிதானே?
ஆனால் - தங்கள் நிலைப்பாட்டுக்கு மாறாக, ஜூலை 26 அன்று நியூ சிலாந்து நாட்டில் உர்ஜனல் கதீம் எனக்கூறப்படும் தேயும்
பிறை காணப்பட்ட செய்தி புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு வேண்டுமென்றால் இது புது செய்தியாக இருக்கலாம். அதனால் தங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பது
தெளிவாக தெரிகிறது. அதனால் தான் - யூத சதி போன்ற வார்த்தைகள் வெளிவருகிறது.
ஆனால் - உலகின் அனைவராலும், ஏற்றுக்கொள்ளப்படும் விஞ்ஞான அடிப்படையில் உள்ளது தான் இந்த காட்சி என தயவு
செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஜனவரி 2014இல் இது போன்ற செய்தி வெளிவந்தபோது - தங்கள் அமைப்பினரால், அச்செய்தி வெளியிட்ட
ICOPROJECT.ORG இணையதளம், பொய்யான தகவலை வழங்குகிறது எனக் கூறப்பட்டது.
தற்போது -
MOONSIGHTING.COM இணையதளமும் இதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில் நியூ சிலாந்து நாட்டில் தென்பட்ட
செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளமும் பொய் செய்தியை வெளியிட்டுள்ளது எனக் கூறுகிறீர்களா?
இவர்களும் யூத சதி வலையில் உள்ளார்களா?
இந்த விசயத்தில் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் அமைப்பினரால் எடுக்கப்பட்ட நிலையை தங்களுக்கு இங்கு நினைவூட்ட
விரும்புகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் - அமாவாசை தினத்தில் தேயும் பிறை காணப்பட்ட செய்தி தங்கள் அமைப்பின் மூத்த
உறுப்பினர் அலி மானிக்பன் அவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளப்பட்ட போது, அவர் புகைப்பட ஆதாரம் கேட்டார்.
சில மாதங்களுக்கு முன்னர் - தஹிதீ நாட்டில் வளரும் பிறை, அமாவாசை தினத்தில் காணப்பட்டப்போது, தங்கள்
அமைப்பினரால் - அது கிருஸ்துவர் ஒருவர் எடுத்த புகைப்படம் என கூறப்பட்டது.
ஜனவரி மாதம் - ஈரான் நாட்டில் தேயும் பிறை தென்பட்டு, புகைப்படம் வெளியான போது - அது ஷியாக்களால்
பார்க்கப்பட்ட பிறை என்றும் கூறப்பட்டது.
தற்போது ஜூலை 26 அன்று நியூ சிலாந்து நாட்டில் தேயும் பிறை தென்பட்டு, புகைப்படம் வெளியாகி உள்ளது.
இது யூதர்கள் சதியின் தொடர்ச்சி என்பது தான் தங்கள் பதிலா?
சகோதரரே, தங்களிடம் இரண்டு கேள்விகள் மட்டும் நான் கேட்கிறேன். இதற்கு பதில் கூறுங்கள்.
1. ஜூலை 26, 2014 அன்று காலை தேயும் பிறையை காண முடிந்திருக்குமா?
2. இல்லை என்றால், பிறையை கண்ணால் பார்க்க, விஞ்ஞானப்பூர்வமான, விதிமுறைகள் என்ன?
உதாரணமாக - சூரியன் - சந்திரன் இடையிலான இடைவெளி (ELONGATION) எவ்வளவு இருந்தால்
பிறையை பார்க்க முடியும். அல்லது தங்கள் நம்பிக்கைப்படி, வேறு எந்த அளவுகோல்படி, பிறையை
காண முடியும்?
Re:... posted bySalih (chennai)[24 March 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 33914
சகோதரர் ரசாக் லுக்மான் அவர்களுக்கு,
/* முன்னர், ஊரின் உள்ளே போடப்பட்ட சில சாலைகளை, அது போடப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் அந்த
பணிகள் முறையாக கண்காணித்து, பல சோதனைகள் செய்து, அந்த சாலைகள் தரமானதாக அமைய உறுதுணையாக இருந்தனர். */ (C & P)
சாலைப்பணிகள் உட்பட நகரில் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் நகரின் அனைத்து பணிகளையும் மக்கள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்.
இது நம் அனைவரின் மீதான கடமை. ஆனால் இந்த பொறுப்பை ஒரு குறிப்பிட்ட அமைப்பு தான் செய்ய வேண்டும் என எதிர்ப்பார்ப்பது
நியாயமானதாக தெரியவில்லை.
இந்த சாலை குறித்த தொழில்நுட்ப விபரங்களை நகர்மன்றத் தலைவர் வெளியிட்டார். இது பொது தளத்தில் உள்ளது. எனவே - அந்த பகுதி மக்கள்,
அந்த பகுதி பொது நல அமைப்புகள், ஊரின் பிற பொது நல அமைப்புகள் (ஊழல் எதிர்ப்பு இயக்கம் உட்பட), தனி நபர்கள் என இதனை
கண்காணிப்பது அனைவரின் பொறுப்பு.
/* தரம் குறைந்து போடப்பட்டுக் கொண்டிருந்த (தம்பி சாலிஹ் அவர்கள் சொல்லும்) நைனார் தெரு சாலை இன்றுவரை முழுமை பெறாமல்,
பாதியிலே நிற்கிறது. */ (C & P)
/* மற்ற சாலைகளை முறையாக கண்காணித்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர், அதே நேரத்தில் போடப்பட்ட மருத்துவர் தெருவை சாலையை ஆய்வு
செய்யவில்லை. அதற்கான காரணத்தை அவர்களே அறிவார்கள். */ (C & P)
இந்த இரண்டு விமர்சனத்திற்கும் கீழ்க்காணும் விளக்கம் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
பொதுவாக தணிக்கைகள் செய்யப்படும் போது, அனைத்து கணக்குகளையும் தணிக்கை செய்யமாட்டார்கள். உதாரணமாக - நகராட்சியில், ஆணையர்
- ரேண்டமாக 5 சதவீதம் ரசீதுகளை ஆய்வு செய்யவேண்டும் என விதிகள் கூறுகிறது. இந்த ரேண்டம் சோதனையில் தவறுகள் தெரிய வந்தால்
அதன்மேல் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே - காயல்பட்டினம் சாலைகளை பொறுத்தவரை அனைத்து சாலைகள் குறித்தும் புகார்கள்
கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் - கடந்த பிப்ரவரி மாதம் (2013), மூன்று சாலைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தது. அதே சமயத்தில் -
அல் அமீன் சங்கம் தனிப்பட்ட முறையில் - சாலைகள் முறையாக போடப்படவில்லை என அப்போதைய ஆணையரிடம் புகார் தெரிவித்திருந்தது.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் குறிப்பிட்ட தெருக்கள் - அப்பாபள்ளித் தெரு சாலை, ஆசாத் தெரு சாலை, நெய்னார் தெரு சாலை. இந்த சாலைகள்
ரேண்டமாக தேர்வு செய்யப்படவில்லை. அந்த காலகட்டத்தில் நகராட்சியில் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 15 பணிகள் (சாலை, மழைநீர்
வடிகால்) நடைபெற்றன. அவற்றில் இந்த மூன்று சாலைகளும் தேர்வு செய்யப்பட்ட காரணம் - இந்த பணிகளின் தரத்தை ஆரம்பத்திலேயே, எளிதாக,
சிக்கனமான முறையில் சோதித்து விடலாம் என்பது தான்.
அதாவது - குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு சாலை தோண்டப்படிருக்கிறதா என உறுதி செய்துக்கொண்டால் போதுமானது. அப்படி தோண்டப்படவில்லை
என்றால், அந்த ஆதாரத்தை கொண்டு ஆட்சியரிடம் புகாரை தெரிவிக்கலாம். ஆட்சியரும் புகாரினை தட்டிகழிக்க முடியாது. குறைந்தது அந்த அளவு
ஆதாரம் இல்லாமல் எந்த புகார் கொடுத்தாலும், அது அனுமானமாக தான் இருக்கும்.
பிற சாலைகளைபற்றி புகார் தெரிவிக்கும்போது - நம் மனதில் அவை முறையாக போடப்பட வில்லை என்று தெரிந்த்திருந்தாலும், அவைகள் குறித்து
சாலைகள் முழுமையாக போடப்பட்டப்பின் - அதற்கு என உள்ள தர பரிசோதனை நிறுவனங்களிடம் சுமார் 20,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி,
சோதனை செய்ய சொல்லி - அந்த முடிவின் அடிப்படையில் புகாரினை தெரிவிக்க வேண்டும். 15 பணிகளையும் சோதிக்க தேவையான நிதி சுமார் 3
லட்சம். அந்த நிதியினை ஏற்பாடு செய்வது எளிதல்ல. காலமும் அதிகம் ஆகும்.
மற்றொரு வழி - ஒவ்வொரு தருணத்திலும் (மணல் கொட்டும்போது, கற்கள் கலக்கும்போது என) கண்காணிப்பது. இதற்கு ஆட்கள் பலமும்
வேண்டும், அதற்கான தொழில் நுட்ப விபரமும், அறிவும் வேண்டும்.
அதே சமயத்தில் போடப்பட்ட இதர சாலைகள் கீழே:
பிலால்பள்ளி தெரு சாலை
மங்களவினாயகர் கோவில் தெரு சாலை
ஈக்கியப்பா தைக்கா தெரு முதல் கறுப்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) / கீழ நெய்னார் தெரு சாலை
கடையக்குடி (கொம்புத்துறை) சாலை
நியூ காலனி சாலை
பாஸ் நகர் சாலை
மங்களவாடி மயான சாலை தடுப்பு சுவர் கட்டி மேம்பாடு
குளம் சாஹிப் தம்பி தோட்டம் சாலை
வானியக்குடி எதிர் தெரு (அவன் செயல் காலனி)
ஓடக்கரை கிழக்கு தெரு சாலை
மஹ்லரா காலனி தெரு சாலை
மருத்துவர் தெரு
அவைகள் - ஒழுங்காகப்போடப்பட்டதா இல்லையா என இறைவனுக்கு தான் வெளிச்சம். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் - மேலே குறிப்பிடப்பட்ட
காரணத்திற்கு 3 சாலைகள் குறித்து ஆதாரப்பூர்வமாக புகார் தெரிவிக்க முடியும் என்ற அடிப்படையில் அவை தேர்வு செய்யப்பட்டது. எஞ்சிய 12
தெருக்கள் குறித்து (மருத்துவர் தெரு உட்பட) எந்த புகாரும் - உடனடி ஆதாரம் இல்லாததால் - கொடுக்கப்படவில்லை. இது தான்
உண்மை.
எதற்காக - புகார் கொடுக்கப்படாத 12 தெருக்களில் - மருத்துவர் தெரு மட்டும் இங்கு தங்களால் குறிப்பிடப்பட்டு சொல்லப்படுகிறது என தெரியவில்லை. அது நகர்மன்றத் தலைவரின் தாயார் வசிக்கும் சாலை என்பதால் என்று தாங்கள் கூற வருகிறார்களா? நான் தவறாக கணித்திருந்தால் மன்னிக்கவும். தெளிவான காரணங்களை தாங்கள் இந்த தெரு விசயத்தில் கூறாத வரை, வீண் வதந்திகளும், பொய்யான தகவல்களும் தான் பரவும்.
Re:... posted bySalih (Chennai)[02 February 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 32975
சகோதரர் சிராஜ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
பிறை பார்க்கப்பட்டு, புகைப்படமும் வெளிவரும்போது தங்களின் கேள்வி - அறிவியல் பூர்வமாக - ஒரு பிறை காண சூரியன் - சந்திரன் மறைவுக்கு இவ்வளவு நேரம் இடைவெளி இருக்க வேண்டும், சந்திரன் - சூரியன் பிரிவு (ELONGATION) இவ்வளவு டிகிரி இருக்க வேண்டும், ஆனால் அவை இல்லாமலேயே பார்க்கப்பட்டுள்ளதே போன்று என இருந்தால் - அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
ஆனால் - தங்கள் நம்பிக்கைக்கு மாற்றமாக ஒரு தகவல் வரும்போது அதனை ஏற்றுக்கொள்ளாமல், (போட்டோ எடுத்தவர் ஷியா, தொலைநோக்கி படம் கண்ணால் பார்க்கப்பட்டதாக கூறுப்படுகிறது, ஜோர்டானில் ஜோடிப்பு என) அறிவுப்பூர்வமில்லாத குற்றச்சாட்டுகளை எடுத்துக்கூறுவது, விசயத்துக்கு சம்பந்தம் இல்லாதவற்றை பேசுவது, அர்த்தமற்ற அவதூறுகளை கூறுவது - தமிழகத்தில் பல இயக்கங்கள் கடைபிடிக்கும் நடைமுறை. ஆகவே - தங்கள் கருத்து பதிவில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஹிஜ்ரி குழுவின் பல இணையதளங்களை, புத்தகங்களை, நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக கண்டு வருபவன் என்ற அடிப்படையிலும்,
அவ்வமைப்பை சார்ந்த பலருடன் பல தருணங்களில் நேரடியாகவும், ஈமெயில் மூலமும் கருத்துகள் பரிமாறியுள்ளேன் என்ற அடிப்படையிலும், இந்த
இணையதளத்தில் தங்களின் கருத்து பதிவுகள் எந்த ஆச்சரியமும் ஏற்படுத்த வில்லை.
தங்கள் அமைப்பின் பிறை குறித்த பல விளக்கங்கள் - அறிவியலை விட்டு எவ்வளவு தூரம் உள்ளது என்பதை நீங்கள் அறியாமல் இருப்பது மிகவும்
வருத்தத்தை தருகிறது.
அமாவாசை அன்று பிறையை காண முடியாது என்ற தங்களின் கூற்று அதில் ஒரு உதாரணம் தான். இன்னும் பல உள்ளன.
மாத துவக்கத்தின் சில நாட்களில் பிறை ஓட்டத்தை அடிப்படையாக கொண்டு, அம்மாதத்தின் நாட்களை எண்ணிவிடலாம் என்ற தங்கள் கூற்று ...
உலகின் சில நாடுகளில், எந்த திசையில் மக்கள் கிப்லாவினை நோக்கி தொழுகிறார்கள் என்பதில் தங்கள் கூற்று ...
செய்திக்கு தொடர்பில்லை என்பதாலும், அதற்கான தளம் இதுவல்ல என்பதாலும் நீண்ட விளக்கங்களை கொடுப்பதில் இருந்து தவிர்த்து
கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross