Re:சமச்சீர் கல்வி குறித்த ஐக... posted byMahmood Seyed (Kingdom Of Saudi Arabia.)[22 July 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6245
செய்தி: ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு மத்ரஸா நிர்வாகம் நன்றி தெரிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘... posted byMahmood Seyed (Kingdom Of Saudi Arabia)[22 July 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6244
Re:வாடிக்கையாளர்களின் பணத்தை... posted byMahmood Seyed (Kingdom Of Saudi Arabia.)[13 July 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5975
பணம் இப்பொழுது இருக்கும். நாளை இருக்காது. posted byMahmood Seyed (Kingdom Of Saudi Arabia.)[30 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3649
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.
காயல் மாநகர மக்களே !
கீழே பதிவு செய்துள்ள சகோதரர் ஜியாவுத்தீன் / சகோதரர் வி.எஸ்.எம். அலி ஆகிய இருவரும் “ ஜோக் ” அடிப்பதில் வல்லவர்கள் தான்.
அதற்காக எல்லா விஷயத்திலும் அது நன்றாக இருக்காது சகோதரர்களே.
ஒருவர் ஹஜ்ஜுக்கு போகிறார் என்றால், அவரவர்களுடைய ஆசை. குடும்பத்தார்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும்.
எல்லோரையும் ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் அழைத்துச் செல்லவேண்டும். அவர்களின் துஆ பேற்றினைப் பெறவேண்டும் என்ற ஆர்வம். அதற்காக இதை “ லஞ்சமா ” என்று கேட்டு விடாதீர்கள். இதைத்தான் தமிழில் விருந்தோம்பல் என்பார்கள்.
இதற்கு என்ன செலவு வந்து விடப்போகுது. அவர்கள் ஒரு லட்ச ரூபாய் ஹஜ்ஜுக்கு செலவு செய்கிறார்கள் என்றால், அதில் ஒரு சதவிகிதம் கூட இந்த மாதிரியான விருந்தோம்பலுக்கு வருவது மிகவும் அரிது.
அதை விட்டு விட்டு கஞ்ஜத்தனமாக இருக்கக் கூடாது. பணத்தைச் சேர்த்து வைத்தவர்கள் எல்லாம் போகும் போது தங்களோடு கொண்டாப் போகிறார்கள். இல்லையே .
பணம் இப்பொழுது இருக்கும். நாளை இருக்காது. ஆனால் நல்ல குணமும் , துஆவும் அப்படி அல்ல சகோதர்களே. ஆகவே எல்லோருடைய நல்ல துஆவைப் பெற முயற்சி செய்யுங்கள்.
இப்பொழுதுதான் மக்கள் புரிய தொடங்கி இருக்கிறார்கள். posted byMahmood Seyed (Kingdom Of Saudi Arabia.)[27 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3580
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.
அப்பாடா !
இப்பொழுதுதான் மக்கள் புரிய தொடங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் பற்றி இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் புரிவார்கள்.
அரசியல் என்பது ஒரு சாக்கடை (நஜீஸ்). posted byMahmood Seyed (Kingdom Of Saudi Arabia.)[10 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3143
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.
எல்லோரும் கருணாநிதியை குறைச் சொல்லியேயேயே.........
பதிவு செய்துள்ளீர்கள். யாராவது இதற்கு ஒரு முடிவை சொல்லி இருக்கிறீர்களா ? எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று ? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.
இதில் கருணாநிதியை விமர்சித்தவர்கள் யாருக்கும் சொல்ல முடியாது. ஏனென்றால், அனைவருக்கும் தெரியும் நம்மிடத்தில் ஒற்றுமை இல்லை என்று. ஒன்று தங்கள் எல்லோருடைய நல்ல முடிவை நம் ஊர் மக்களுக்கு தெரிவியுங்கள். இல்லை என்றால் தயவு செய்து ஆளுக்கு ஆள் குழப்புவதை நிறுத்துங்கள்.
ஏற்கனவே நமது ஊரிலும், நமது நாட்டிலும் குழப்பவாதிகள் நிறைவாக இருக்கிறார்கள். தயவு செய்து நீங்களும் அந்த List ல் சேர்ந்து விடாதீர்கள்.
நான் இப்படி பதிவு செய்துள்ளேன் என்று யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக நான் இதைப் இங்கு பதிவு செய்யவில்லை.
மாறாக எனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளேன். அவ்வளவு தான்.
அன்பார்ந்த காயல் மாநகர சகோதர , சகோதரிகளே !
அரசியல் என்பது ஒரு சாக்கடை (நஜீஸ்). அதில் கள்ளை எறிந்தால் அந்த நஜீஸ் நம்மீதுதான் தெறிக்கும்.
இதில் கருணாநிதியும் சுத்தமில்லை. ஜெயலலிதாவும் சுத்தமில்லை. இவர்களுக்கு துணைப் போகக்கூடிய அமைப்புகளும் ( இஸ்லாமிய போர்வையில் உள்ள அமைப்புகள் உட்பட ) சுத்தமில்லை. ஏனென்றால், முஸ்லிம்களுக்காக பாடுபடுகிறோம் என்று சொல்கின்ற அமைப்புகளும் கூட ஏதாவது ஆதாயம் இல்லாமல் இதில் இறங்கமாட்டார்கள்.
நமக்கெல்லாம் நன்றாக தெரிந்த ஒரு விஷயம். ( இதை நடுநிலையோடு எல்லோரும் சிந்தியுங்கள் சகோதரர்களே ).
முன்பு ஒன்றாக ( இஸ்லாமிய போர்வையில் ) இருந்த அமைப்பு. அவர்கள் இரண்டாக பிரிந்ததற்கு சொன்ன காரணம் அவன் ”சுனாமி பணத்தை” அமுக்கிவிட்டான். இவன் ”ஃபித்ரா” பணத்தை அமுக்கி விட்டான் / ஜகாத் பணத்தை அமுக்கி விட்டான் என்பதாகத்தான்.
இஸ்லாத்தில் ”இபாதத்துள்ள” இந்த விஷயத்தில் இவர்கள் இப்படி என்றால், இவர்கள் “கையில்” ஆட்சி வந்தால் ? அல்லது இவர்கள் ஆதரிக்கின்ற கட்சி ஆட்சி அமைத்தால் ? ஆகவே எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். தேனைத் தொட்டவன் நக்கத்தான் செய்வானே தவிர்த்து ஒரு போதும் புற முதுகில் தடவிக் கொள்ளமாட்டான்.
இதற்கு ஒரே ஒரு வழி என்னவென்றால் இதை நம்மூர் முஸ்லிம் லீக் சகோதரர்கள் முஹம்மது அபூ பக்கர், வாவு நாசர் காக்கா, ஸலாஹுத்தீன் காக்கா, அபு ஸாலிஹ் காக்கா, மஹ்பூப் காக்கா, மன்னர் பாஜுல் அஸ்ஹப் இன்னும் மக்கி இது போன்ற முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்கள் நமது பேராசிரியரிடம் கலந்தாலோசித்து தி.மு.காவிற்கு கொடுத்த ஆதரவை மறு பரிசீலனை செய்யும் படி கோருங்கள். ஏனென்றால் நம்மூர் மக்கள் எவ்வளவு கொதித்துப் போய் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பதிவுகளின் மூலம் நீங்கள் எல்லோரும் தெரிந்திருப்பீர்கள்.
தயவு செய்து இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதை உங்கள் “கைகளில்” அல்லாஹு சுபுஹானஹுத்தாஆலா அமைத்து இருக்கிறான். தனித்துப் போட்டியிட முயற்சி செய்யுங்கள். இந்த சந்தர்ப்பம் இனி இந்த அமைப்புக்கு கிடைக்க சத்தியமில்லை.
நம் கிருபை உள்ள ரஹ்மானின் பெயரால் துணிந்து செயல் படுங்கள். நமக்கு வெற்றி அளிக்கக் கூடியவன் நிச்சியமாக வெற்றியைத்தருவான் என்ற உறுதியோடு செயல் படுங்கள்.
இது எந்த விதத்தில் நியாயம் ? posted byMahmood Seyed (Kingdom Of Saudi Arabia.)[03 March 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2993
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.
சகோதரர் முத்து வாப்பா அவர்களே !
என்னுடைய கருத்துக்கள் மொட்டையாக இல்லாமல் தெளிவாக இருந்ததில் மட்டில்லா மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு விட்டு, 300 துண்டுகள் யார் என்று கேட்டால், நான் உங்களை நினைத்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.
5நிமிடம் சிந்தியுங்கள் 5வருடம் பற்றி......
என்ற தலைப்பில் இப்பொழுதுள்ள ஆளும் கட்சியையும் நீங்கள் ஆதரிக்கவில்லை.
அருமை சகோதரர் முஹம்மது (தம்மாம்) அவர்கள், இப்பொழுதுள்ள எதிர் கட்சிக்கு வாக்கு அளிக்க சொல்கிறீர்களா ? என்று கேட்டதற்கு அதுவும் இல்லை என்பதாக பதில் அளித்து இருக்கிறீர்கள்.
பிறகு யாருக்குத்தான் வாக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டால் அதற்கு பதிலைத்தராமல் நீங்கள் ஒரு கேள்வியைத் தொடுக்குறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம் ?
நீங்கள் யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள்.
அதன் பிறகு நீங்கள் கேட்ட 100 துண்டுகளை இன்ஷா அல்லாஹ் நான் வரிசை படுத்துகிறேன்.
Really Grate. posted byMahmood Seyed (Kingdom Of Saudi Arabia.)[23 February 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2795
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு
சகோதரர் ஜியாவுத்தீன் மாஷா அல்லாஹ் !
ஒவ்வொரு இயக்கம் உருவாகும் போதும் அந்த இயக்கத்தின் பெயரை உடனே உங்கள் ‘டைரியில்’ குறித்து வைத்து விடுவீர்கள் போல் தெரிகிறதே ? Really Grate. இத்தனை காலமாக இது வரைக்கும் எத்தனை கூட்டம் வந்திருக்கின்றது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். அதற்கு ஒரு விடை கிடைத்து விட்டது. அது தான்ங அந்த 73 கூட்டத்தார்கள். அந்த 73ல் 39ஐ கழித்தால் , கழித்தால், கழித்தால் ( நான் கணக்கில் கொஞ்சம் Weak ) இப்பொழுது சொல்லிவிடுகிறேன். ஆ....... 34 கூட்டம் பாக்கி இருக்கிறது. அப்பாடா ! ஒரு மதிரியாக கண்டு பிடித்து விட்டேன்.
சகோதரர் ஜியாவுத்தீனுக்கு மிக்க நன்றி. jஜZஜாக்கல்லாஹு கைரா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross