விளம்பர வெளிச்சமின்றி சேவை செய்தவ உத்தமர்! posted byS K Shameemul Islam (Chennai)[18 February 2020] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46493
காயல்பட்டனத்தின் எஸ்.எம்.செய்யத் அஹ்மது என்ற SMS காக்கா அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று உலகைப் பிரிந்து சென்றுவிட்டார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
அவர்பற்றிய பற்பல நினைவுகள் மனதில் நிழலாடுகிறது;
மனம் கனக்கிறது.
இரவு இரண்டு மணி ஆகும் போது தூக்கம் களைந்து அவரது சிந்தனைகள், அதாவது கடந்த 40 ஆண்டுகால தஃவா பணியில் அவரது ஒவ்வொரு அசைவுகளும் பேச்சும் எல்லாமும் நம் மனக்கண்முன் வந்துகொண்டே இருக்கிறது.
அது 1980 -ஆக இருக்கலாம். ஏகத்துவ கொள்கையில் தன்னை இணைத்துக்கொண்ட நாள் முதல் ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) அமைப்பில் அஷ்ஷெய்க் கமாலுத்தீன் மதனி அவர்கள் தலைமையில் செயல்பட்டவர். காலத்துக்கேற்றாற்போல அமைப்புகள் மாறிக்கொண்டு இராமல் இன்றுவரை அவ்வமைப்பிலேயே இருந்து வந்தார்.
1990- களில் காயல்பட்டணம் ஆயிஷா சித்தீக்கா பெண்கள் கல்லூரியின் ஆரம்ப காலக்கட்டங்களில் பலவகையிலும் பெரும்பங்காற்றியவர் இவர்.
அதே காலங்களில் அல்-ஜாம்வுல் அஸ்ஹர் ஜுமுஆ மஸ்ஜிதின் பணிகளிலும் தன்னை வெகுவாக இணைத்துக்கொண்டார்.
கொள்கை என ஒன்றை விளங்கிவிட்டால் கூட்டம் சேரும்வரை பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார். தனியாளாக அதை முன்னெடுப்பதில் தயங்கவும் மாட்டார். மூட நம்பிக்கைகளை ஒழித்துக்கட்டுவதில் இவரது பங்களிப்பு அக்காலத்தில் மிக அதிகமாக இருந்துவந்தது.
இவரது இளம் வாலிப பருவத்தின்போது மாணவர்கள் மத்தியில் சீர்திருத்தப்பணிகளையும் இஸ்லாமிய சிந்தனைகளையும் அன்று விதைத்து வந்த இந்தியமாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் பேராதரவாளராக இருந்துவந்தார்.
சென்னை என்.எஸ்.சி. போஸ்ரோடில் உள்ள பாரிஸ் எல்.கே.எஸ். ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் பங்காளியாக இருந்தபோது அவரது இருக்கையைச்சுற்றி எப்போதும் மார்க்க அறிஞர்களும் அறிவுசான்றோரும் அமர்ந்த வண்ணமிருப்பார்கள். முறைப்படி அவர்களை உபசரித்து ஊக்கப்படுத்தி மார்க்க விடயங்களை அவர்களிடம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருப்பார்.
சென்னையில் சிலதினம் தங்கி தமது மார்க்கப் பணிகளையும் சொந்த வேலைகளையும் செய்வதற்காக வரும் பல அறிஞர்களுக்கு தனது சொந்த இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவார்.
எல்லோரிடமும் பேசும் இயல்புடையவர் அல்ல இவர். ஆனால் பேசவேண்டிய ஆள்களிடம் பேசும் விசயத்திற்காக மணிக்கணக்கில் உரையாடவும் செய்வார்.
அல்லாஹ் அவருக்கு வழங்கிய வளங்களைக் கொண்டு வெறும் இலாபக்கணக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்காமல் அப்போதைக்கப்போதே நற்பணிகளுக்காகவும் நற்செயல்கள் புரிவோருக்காகவும் வாரிவழங்கி மகிழ்ந்தவர்.
இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாட்டிற்காக அதிகளவு பொருளுதவி செய்தவர்.
இஸ்லாமிய சித்தாந்தத்தையும் சிந்தனைகளையும் தான்மட்டும் படித்துவிட்டு விட்டுவிடாமல் பல நூல்களை மூல மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு கொண்டுவந்தார். அதற்காக ஃபுர்கான் பப்ளிகேஷன் என்ற நூல்வெளியீட்டு நிறுவனத்தையும் சென்னை மண்ணடியில் அமைத்து பற்பல இஸ்லாமிய நூல்கள் வெளிவர காரணமாக இருந்தார்.
வட்டியில்லா பொருளாதாரத்திட்டத்தை 1990-களில் நடைமுறைப்படுத்த விளைந்தோரில் இவரும் நினைவு கொள்ளத்தக்கவர்.
பிறகு காயல்பட்டணத்தில் நிரந்தரமாக தங்கிவிட்ட இவர் துஃபைல் காம்ப்ளக்ஸ் வளாகத்தை தனது வருவாய்க்காக கட்டி அதில் ஓர் உள்ளரங்கையும் ஏற்படுத்தினார். ஆக்கப்பூர்வமான பல சமூக சீர்திருத்தப் பணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு அதை விட்டுவந்தார்.
நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவி மூலமும் சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் உண்மையை உரக்கச் சொல்வதில் அவர் ஓய்ந்திருக்கவில்லை. இப்படி இவர் பற்றிக்கூற இன்னும் பல உண்டு.
இவரது திடீர் மரணச்செய்தி எம் போன்ற அனைவருக்கும் தாங்கவியலாத வழியை ஏற்படுத்தி விட்டது. அல்லாஹ் வழங்கியதை திரும்பப்பெறும் அதிகாரமும் தகுதியும் அவனுக்கே உரியதாகும்.
கருணையாளனாகிய அல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் பொறுத்தருளி, அவரது நற்செயல்கள் அனைத்தையும் பொருந்திக் கொண்டு, அன்னாரது கேள்வி கணக்குகளை எளிதாக்கி, கப்ருடைய வாழ்வை விசாலமாகவும் சுவனப்பூங்காவாகவும் மாற்றி, மறுமை வாழ்வில் உயரிய சுவனபதியில் அன்னாரை நிரந்தரமாக ஒய்வெடுக்கச் செய்வானாக.
அன்னாரின் பேரிழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரது குடும்பத்தார் அனைவருக்கும் - ‘ஸப்ரன் ஜமீலா’ என்னும் அழகிய பொறுமையைக் - கொடுத்து அருள்வானாக.
அன்னார் விட்டுச்சென்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்யும் மன உறுதியை அன்னாரின் குடும்பத்தாருக்கு மேலோன் அல்லாஹ் வழங்குவானாக. ஆமீன்.
செய்தி: குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி (எ) தம்பி டாக்டர் காலமானார்! பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம்!! பெருந்திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
We Love You Thamby Doctor...!!! posted byS K Shameemul Islam (Chennai)[24 April 2019] IP: 171.*.*.* India | Comment Reference Number: 46398
Thamby Doctor!
A Legendary Pediatrician who made thousands of Children breath easy by Allah's Will, has breathed his last. Innaa lillaahi wa innaa ilaihi raaji'oon.
May Allah forgive all his sins, accept his innumerable services, enlighten his Qabr and award the highest of Paradise, al-Jannatul Firdawsil A'la.
May Allah give strength to his family and friends to bear the irreparable loss of this humble soul. Aameen.
SK Shameemul Islam & Family,
SK House
Kochiyar Street,
Kayalpatnam.
செய்தி: DCW தொழிற்சாலை கழிவுகளைக் கடலில் திறந்துவிட்டதையடுத்து காயல்பட்டினம் கடலோரம் இறந்துகிடக்கும் மீன்கள்! “நடப்பது என்ன?” குழுமம் செய்தியறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ் தான் நம்மைப் பாதுகாக்க வேண்டும்....!!! posted bySK Shameemul Islam (Chennai)[01 November 2018] IP: 171.*.*.* India | Comment Reference Number: 46296
இதில் குற்றுயிரும் குலையுயிருமாக தப்பியவை வலையில் சிக்கிய பிறகு நாமும் அதை உண்ணும்போது தான் நமது சொத்தையும் சுகத்தையும் சந்ததிகளையும் அழித்திடும் பற்பல உயிர்கொல்லி நோய்கள் நம்மைப் பாடாய் படுத்துகின்றன.
அற்ப நேரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னே நம் மனதை இழுத்துச்சென்று விட்டது... posted bySK Shameemul Islam (Chennai)[19 June 2018] IP: 122.*.*.* India | Comment Reference Number: 46191
மாஷா அல்லாஹ், சகோதரர் முஷ்தாக்கின் 'நம் தோட்டமும் பூ பூக்கும்....' கட்டுரை அற்ப நேரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னே நம் மனதை இழுத்துச்சென்று விட்டது.
அஹ்மத் காக்காவின் 'ரகசிய போர்வாள் ரஸீன் அமீர்' (அது வேறொன்றும் இல்லை, உமர் முக்தார் புத்தகத்திற்கு வைக்கப்பட்ட ரகசிய பெயர்) மஜ்லிஸுல் புஹாரிஷ் ஷரீபின் தோட்டத்தில் வைத்து மாலை நேர மயான அமைதியில் கேட்கும்போது நம்மை இத்தாலியின் முசோலினியின் படைக்கெதிராகவே நிலைநிறுத்திவிடும்.
பள்ளிக்கூடத்திலோ..., பெல்லடித்து இரண்டு நிமிடம் தாமதமாக வந்தாலே கோல்ராஜ் சாரின் நார் பிரம்பு பதம்பார்க்கும்.
ஹாமிதிய்யாவின் நூலகத்தை (அக்காலங்களில்) அங்கு மாணவர்களாக இருந்தவர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். ஒரு வகுப்பில் குறைந்தது இருவராவது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகை முடித்து மதிய உணவு உண்ட பிறகு நடைபெறும் சொற்பயிற்சி மன்றத்தில் பேசவேண்டும். பேசுவதற்கு தலைப்பும் தரப்படும். அதற்கு ஏற்றாற்போல் புத்தகம் அங்குள்ள நூலகத்தில் இருந்து முந்தைய வாரமே எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறாக மாணவர்களை ஊக்குவிப்பதில் ஒய்.யூ.எப். சங்கத்தின் செயலாளர் முஹ்யித்தீன் காக்காவின் பங்கு மகத்தானது.
அக்காலம் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வழியமைத்தது. இக்காலமோ அதை உணர்ந்து பார்க்கக்கூட இயலாத நிலைமைக்கு நம் இளைய தலைமுறையினரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.
அன்று ஒருவர் மனதை மற்றவர் இலகுவாக புரிந்துகொள்ளும் நிலைமை இருந்தது; ஆனால் இன்று சின்னஞ்சிறு விசயத்திற்கே சகிப்புத்தன்மை இழந்து காணும் ஒரு சமூகம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
May God the Almighty bless you all... posted bySK Shameemul Islam (Chennai)[01 July 2017] IP: 171.*.*.* India | Comment Reference Number: 45637
i appreciate and honor our Inspector and his Team. it is a real humanitarian activity. Kudos to you Inspector Sivalingam Sir. May God the Almighty bless you all.
பயணம் செல்லும் நேரம் வந்துவிட்டதென அதிகம் என்னிடம் கூறுவார்... posted bySK Shameemul Islam (Chennai)[06 April 2017] IP: 122.*.*.* India | Comment Reference Number: 45432
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
பற்பல நினைவுகள் என் மனக்கண்ணில் தோன்றி என் கவலையை கிளர்கிறது.
புன்னகை மாறாத பேரரசி. குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவதில் ஒப்பற்றவர். பிறரது பிரச்சினைகளில் ஈடுபட்டு சரிசெய்வதில் மேன்மை தங்கியவர். குடும்பத்தையும் வட்டாரத்தையும் அரவணைப்பதில்
அரும்பண்பு கொண்டவர்.
இருக்கும்போது ஈந்துவப்பதிலும் இல்லாதபோதும் கொடுத்து மகிழ்வதிலும் பண்பாளர்.
பிடிக்காதவற்றையும் நயமாகச் சுட்டிக்காட்டுவதில் நாகரீகம் மிக்கவர்.
என் குழந்தைப்பருவம் முதல் என் ஒவ்வொரு அசைவிலும் வலுசேர்த்தவர்.
என் பாசமிகு தந்தையின் கடைசி காலம் வரை அவர்களையும் தன் பிள்ளை போல கொஞ்சி மகிழ்ந்தவர்.
ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களை பார்க்காமல் வந்ததில்லை. சிலபொழுது பார்க்காமல் வந்துவிட்டாள் பல நாட்கள் அது வடுவாக மனதில் தேங்கி நிற்கும். ஒவ்வொரு முறையும் என்னை உச்சி முகர்ந்து வாய் நிறைய பிரார்த்தனைகளாலும் வாழ்த்துக்களாலும் தன் இரு கைகளால் என் உடலெல்லாம் தழுவி நானாக விடுபடும் வரை வாழ்த்திக்கொண்டே இருப்பார்.
என் பிள்ளைகளையும் அப்படித்தான்.
மரணத்தை நினைத்து இவர் அஞ்சியதில்லை.
கடைசி காலத்தில் அதை பயணம் செல்லும் நேரம் வந்துவிட்டதென அதிகம் என்னிடம் கூறுவார்.
அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் விதமாக பார்க்கும்போதெல்லாம் நல் அமல்களில் ஈடுபட்டுக்கொண்டும் தஸ்பீஹ் செய்துகொண்டுமிருப்பார்.
கொள்கை ரீதியான வேறுபாடுகளையும் நகைமுகத்துடன் வாதிட்டே கோபம் தீர்த்துக்கொள்வார்.
சிலபொழுது கோபப்பட்டாலும் எப்பொழுதும் முகத்தைக்கூட திருப்பிக்கொண்டதில்லை. அவர் செலுத்திய தாயன்பில் பஞ்சம் வைத்ததுமில்லை.
அவரது தந்தை ஒரு மார்க்க அறிஞர். அவரது கணவர் (என் பாசமிகு அப்புமாமா மர்ஹூம் முத்துச்சுடர் மாத இதழில் தொடராக எழுதி வந்தவரான) மர்ஹூம் ஷெய்கு அலி மாமா அவர்கள் அக்காலத்திலேயே சொல்லாலும் எழுத்தாலும் சமூக அக்கரைக்கு வித்திட்ட சிந்தனைச்செம்மல்.
மகளார், பிள்ளைகளின் மறுமைக்கான தயாரிப்பிலேயே தன் வாழ்நாளை உலகப்பற்றில்லாமல் வீட்டிலேயே முடித்துக்கொண்ட, சீதேவி மனுசி பாசமிகு என் சாச்சி மர்ஹூமா முஹ்யித்தீன் பாத்திமா. நகைச்சுவையும் புன்னகையும் கொண்ட பாசமிகு என் சாச்சப்பா மர்ஹூம் அஷ்ரப் அலி ஆலிம் ஃபாஸி என ஒரு முழு மார்க்கப்பாங்கான குடும்பம்.
கருணையாளன் அல்லாஹ் அவர்கள் அனைவரின் இருப்பிடங்களையும் சுவர்க்கப்பூங்காவாக ஆக்குவானாக ஆமீன்.
எல்லாம் வல்ல ஏக இறைவனாகிய மாண்பாளன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளைப்பொறுத்து குற்றங்களை மன்னித்து கப்ரின் கேள்விகளை இலேசாக்கி பர்ஸஃக் வாழ்வையும் மறுமை வாழ்வையும் உயரிய சுவன வாழ்வாக ஆக்கித்தருவனாக.
மர்ஹூமாவை இழந்து வாடும் என்குடும்பத்தவர் யாவருக்கும் ஸப்ரன் ஜமீலாவை தந்தருள்வானாக.
நீங்கா கண்ணீரோடு,
பேரன் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
& குடும்பத்தார், கொச்சியார் தெரு
மற்றும்
எல்.கே.காலனி.
காயல்பட்டணம்.
செய்தி: ஏப். 02 அன்று ததஜ சார்பில் - அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அடுத்து “என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சிக்மா அமீன் முதஸ்ஸர் பற்றி posted bySK Shameemul Islam (Chennai)[25 March 2017] IP: 122.*.*.* India | Comment Reference Number: 45382
சகோதரர் விளக்கு எஸ்.எம்.ஏ. சொல்வது போல பெங்களூர் சிக்மாவின் அமீன் முதஸ்ஸர் வழிகாட்டுதலில் மிகவும் திறமை மிக்கவர். எட்டு வருடத்திற்குமுன் நீடூரில் நான் அங்கம் வகித்த மயிலாடுதுறை வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு நடத்திய கல்விவழிகாட்டு நிகழ்ச்சியில் கலந்து ஆங்கிலத்திலும் உர்தூவிலும் உரையாற்றினார். பல்வேறு கேள்விகளுக்கும் விடையளித்தார்.
மேம்போக்காக இதைப்படியுங்கள் அதைப்படியுங்கள் எனக்கூறாமல் ஆழமான பார்வையை முன் வைக்கும் திறன் படைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இமாமாக முன்னின்று வழிநடத்துவதில் தனிச்சிறப்புடன் திகழ்ந்தவர்கள் posted byS.K.Shameemul Islam (Chennai)[25 January 2017] IP: 122.*.*.* India | Comment Reference Number: 45160
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
கணீரென்ற குரல்
கோர்வையான உச்சரிப்பு
வசனங்களை உச்சரிப்பதில் கம்பீரம்
அழகிய பாங்கு
சாந்ததமான தரிப்புகள்
என தொழுகையை இமாமாக முன்னின்று வழிநடத்துவதில் தனிச்சிறப்புடன் திகழ்ந்தவர்களான மறைந்த பாசத்திற்குரிய எம்பள்ளியின் முன்னாள்இமாம் அவர்களை பார்த்தாலே மதிக்கத்தோன்றும்.
நன்னடத்தை
சந்திப்பவர்களிடமெல்லாம் புன்முரவலிட்டு உரையாடும் குணம்
என வேறுபல நற்பண்புகளையும் கொண்டிருந்தார்கள்.
என்போன்ற வயதில் உள்ளவர்கள் பள்ளிப்பருவத்தில் இருந்தபோது இறைநேசத்தையும் இறையச்சத்தையும் பெறுவதற்கான பெரிய முன்மாதிரியாகவும் திகழ்தார்கள்.
மேலோன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து பாவங்களை மன்னித்து செய்த எல்லா நல்அமல்களையும் ஏற்றுக்கொண்டு எண்ணிலடங்கா நற்கூலிகளை வழங்குவானாக.
கப்ரின் வாழ்வை பூங்காவனமாக்கி உயரிய சுவனச்சொளைகளில் நல்லோர்களுடன் ஒன்றாக்கி வைப்பானாக, ஆமீன்.
மர்ஹூமின் குடும்பத்தவருக்கு அமைதியையும் இழப்பை தாங்கிக் கொள்ளும் பொறுமையையும் வழங்குவானாக.
எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம்
& குடும்பத்தார்கள்.
எஸ்.கே.இல்லம. கொச்சியார் தெரு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross