Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:57:31 AM
புதன் | 9 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1896, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்11:15
மறைவு18:04மறைவு23:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2518:4919:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21746
#KOTW21746
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 10, 2020
தொழிலதிபர் காலமானார்! பிப். 11 அன்று நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1842 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை – பாரிமுனை எல்.கே.எஸ். ஜூவல்லர்ஸ் பங்குதாரர்களுள் ஒருவரான – காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.எம்.செய்யித் அஹ்மத் என்ற எஸ்.எம்.எஸ்., 10.02.2020. திங்கட்கிழமையன்று (நேற்று) 18.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,

மர்ஹூம் பாலப்பா ஷெய்க் முஹம்மத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் வாவு முஹம்மத் ஹஸன் அவர்களின் மருமகனாரும்,

தொழிலதிபர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத் உடைய சகோதரரும்,

எஸ்.ஏ.துஃபைல் அஹ்மத் என்பவரது தந்தையும்,

விளக்கு எம்.எல்.முஹம்மத் கவ்த் என்பவரது மாமனாரும்,

எம்.எஸ்.முஹம்மத் அன்ஸாரீ என்பவரது மருமகனும்,

எம்.எஸ்.முஹம்மத் உமர் என்ற ஜெய்ப்பூர் உமர் உடைய சகலையும்,

வாவு எம்.எச்.அப்துல் கஃப்பார், வாவு எம்.எச்.செய்யித் அஹ்மத் கபீர் ஆகியோரின் மச்சானும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (11.02.2020. செவ்வாய்க்கிழமை) 17.00 மணியளவில், காயல்பட்டினம் அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

மறைந்த எஸ்.எம்.செய்யித் அஹ்மத் என்ற எஸ்.எம்.எஸ்., சென்னையில் ஃபுர்கான் பப்ளிஷர்ஸ் எனும் பெயரில் நூல் வெளியீட்டகம் நடத்தி, அதன் மூலம் பல இஸ்லாமிய இலக்கிய நூல்களை அச்சிட்டுப் பகிர்ந்தமையும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினராக இருந்தமையும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் துவக்க கால நிர்வாகிகளுள் ஒருவராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கவை.

தகவல் & படம்:
M.N.அஹ்மத் ஸாஹிப்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மரணம் சொல்லிக் கொண்டு வருவதில்லை
posted by mackie noohuthambi (kayalpatnam) [14 February 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46490

சகோதரர் அவர்களுடைய வபாத் செய்தி கேட்டு அவருடைய இல்லம் சென்றேன் . அவரது கனவு இல்லம் கடல்போல் விரிந்திருந்தது அவரது ஜனாசாவில் கலந்து கொண்டு அங்கு உரையாற்றிய கமாலுதீன் மதனி என்று நினைக்கிறேன். மர்ஹூம் அவர்களின் மார்க்கப் பணிகளை விலாவாரியாக நினைவு கூர்ந்தார். அப்போதுதான் தெரிந்து கொண்டேன் அவர் இல்லம் மட்டும் அல்ல அவர் உள்ளமும் விசாலமாக இருந்திருக்கிறது.

ஒரு நாள் முன்னர்தான் தன் மகனுக்கு வீடு கட்டி அதை மகன் பெயருக்கு எழுதி வைத்தார் என்ற செய்தி அவர் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் மார்க்க நெறியுடன் தனது இறுதி பயணத்தை உறுதி செய்திருக்கிறார். நாம் ஏனோ அந்த விஷயத்தில் பொடுபோக்காக இருக்கிறோம். எத்தனை முடுக்கு சண்டைகள் எத்தனை பாக பிரிவினை சண்டைகள் பற்றி நாம் தினம்தோறும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

மரணமடைந்தவரை நல்லடக்கம் செய்யும் இடத்தில கூட நமது உலக பேச்சுக்கள் தொடர்கின்றன நமது அலைபேசிகள் அலறுகின்றன. தல்கீன் ஓதினாலும் சரி இந்தமாதிரி அறிவுரைகள் வழங்கினாலும் சரி எல்லாம் நமது அடுத்த எட்டை எப்படி நகர்த்த வேண்டும் என்று கவலைப் படுவதில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்த சகோதரரின் மண்ணறையை விசாலமாக்குவானாக. அவருடைய பாவங்களை மன்னிப்பானாக அவருக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக.அவர் விட்டுச்சென்ற நற்பணிகளை அவரது மகன் துபைல் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்ய அல்லாஹ் அவருக்கு நல்லருள் புரிவானாக மர்ஹூம் அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுப்பானாக.

வாழ்வதற்கு பொருளும் வேண்டும் வாழ்வதில் பொருளும் வேண்டும்

மக்கி நூஹுத்தம்பி & குடும்பத்தினர்கள் 7530075337


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. விளம்பர வெளிச்சமின்றி சேவை செய்தவ உத்தமர்!
posted by S K Shameemul Islam (Chennai) [18 February 2020]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46493

காயல்பட்டனத்தின் எஸ்.எம்.செய்யத் அஹ்மது என்ற SMS காக்கா அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று உலகைப் பிரிந்து சென்றுவிட்டார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

அவர்பற்றிய பற்பல நினைவுகள் மனதில் நிழலாடுகிறது; மனம் கனக்கிறது.

இரவு இரண்டு மணி ஆகும் போது தூக்கம் களைந்து அவரது சிந்தனைகள், அதாவது கடந்த 40 ஆண்டுகால தஃவா பணியில் அவரது ஒவ்வொரு அசைவுகளும் பேச்சும் எல்லாமும் நம் மனக்கண்முன் வந்துகொண்டே இருக்கிறது.

அது 1980 -ஆக இருக்கலாம். ஏகத்துவ கொள்கையில் தன்னை இணைத்துக்கொண்ட நாள் முதல் ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) அமைப்பில் அஷ்ஷெய்க் கமாலுத்தீன் மதனி அவர்கள் தலைமையில் செயல்பட்டவர். காலத்துக்கேற்றாற்போல அமைப்புகள் மாறிக்கொண்டு இராமல் இன்றுவரை அவ்வமைப்பிலேயே இருந்து வந்தார்.

1990- களில் காயல்பட்டணம் ஆயிஷா சித்தீக்கா பெண்கள் கல்லூரியின் ஆரம்ப காலக்கட்டங்களில் பலவகையிலும் பெரும்பங்காற்றியவர் இவர்.

அதே காலங்களில் அல்-ஜாம்வுல் அஸ்ஹர் ஜுமுஆ மஸ்ஜிதின் பணிகளிலும் தன்னை வெகுவாக இணைத்துக்கொண்டார்.

கொள்கை என ஒன்றை விளங்கிவிட்டால் கூட்டம் சேரும்வரை பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார். தனியாளாக அதை முன்னெடுப்பதில் தயங்கவும் மாட்டார். மூட நம்பிக்கைகளை ஒழித்துக்கட்டுவதில் இவரது பங்களிப்பு அக்காலத்தில் மிக அதிகமாக இருந்துவந்தது.

இவரது இளம் வாலிப பருவத்தின்போது மாணவர்கள் மத்தியில் சீர்திருத்தப்பணிகளையும் இஸ்லாமிய சிந்தனைகளையும் அன்று விதைத்து வந்த இந்தியமாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் பேராதரவாளராக இருந்துவந்தார்.

சென்னை என்.எஸ்.சி. போஸ்ரோடில் உள்ள பாரிஸ் எல்.கே.எஸ். ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் பங்காளியாக இருந்தபோது அவரது இருக்கையைச்சுற்றி எப்போதும் மார்க்க அறிஞர்களும் அறிவுசான்றோரும் அமர்ந்த வண்ணமிருப்பார்கள். முறைப்படி அவர்களை உபசரித்து ஊக்கப்படுத்தி மார்க்க விடயங்களை அவர்களிடம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருப்பார்.

சென்னையில் சிலதினம் தங்கி தமது மார்க்கப் பணிகளையும் சொந்த வேலைகளையும் செய்வதற்காக வரும் பல அறிஞர்களுக்கு தனது சொந்த இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவார்.

எல்லோரிடமும் பேசும் இயல்புடையவர் அல்ல இவர். ஆனால் பேசவேண்டிய ஆள்களிடம் பேசும் விசயத்திற்காக மணிக்கணக்கில் உரையாடவும் செய்வார்.

அல்லாஹ் அவருக்கு வழங்கிய வளங்களைக் கொண்டு வெறும் இலாபக்கணக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்காமல் அப்போதைக்கப்போதே நற்பணிகளுக்காகவும் நற்செயல்கள் புரிவோருக்காகவும் வாரிவழங்கி மகிழ்ந்தவர்.

இஸ்லாமிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாட்டிற்காக அதிகளவு பொருளுதவி செய்தவர்.

இஸ்லாமிய சித்தாந்தத்தையும் சிந்தனைகளையும் தான்மட்டும் படித்துவிட்டு விட்டுவிடாமல் பல நூல்களை மூல மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு கொண்டுவந்தார். அதற்காக ஃபுர்கான் பப்ளிகேஷன் என்ற நூல்வெளியீட்டு நிறுவனத்தையும் சென்னை மண்ணடியில் அமைத்து பற்பல இஸ்லாமிய நூல்கள் வெளிவர காரணமாக இருந்தார்.

வட்டியில்லா பொருளாதாரத்திட்டத்தை 1990-களில் நடைமுறைப்படுத்த விளைந்தோரில் இவரும் நினைவு கொள்ளத்தக்கவர்.

பிறகு காயல்பட்டணத்தில் நிரந்தரமாக தங்கிவிட்ட இவர் துஃபைல் காம்ப்ளக்ஸ் வளாகத்தை தனது வருவாய்க்காக கட்டி அதில் ஓர் உள்ளரங்கையும் ஏற்படுத்தினார். ஆக்கப்பூர்வமான பல சமூக சீர்திருத்தப் பணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு அதை விட்டுவந்தார்.

நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவி மூலமும் சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் உண்மையை உரக்கச் சொல்வதில் அவர் ஓய்ந்திருக்கவில்லை. இப்படி இவர் பற்றிக்கூற இன்னும் பல உண்டு.

இவரது திடீர் மரணச்செய்தி எம் போன்ற அனைவருக்கும் தாங்கவியலாத வழியை ஏற்படுத்தி விட்டது. அல்லாஹ் வழங்கியதை திரும்பப்பெறும் அதிகாரமும் தகுதியும் அவனுக்கே உரியதாகும்.

கருணையாளனாகிய அல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் பொறுத்தருளி, அவரது நற்செயல்கள் அனைத்தையும் பொருந்திக் கொண்டு, அன்னாரது கேள்வி கணக்குகளை எளிதாக்கி, கப்ருடைய வாழ்வை விசாலமாகவும் சுவனப்பூங்காவாகவும் மாற்றி, மறுமை வாழ்வில் உயரிய சுவனபதியில் அன்னாரை நிரந்தரமாக ஒய்வெடுக்கச் செய்வானாக.

அன்னாரின் பேரிழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரது குடும்பத்தார் அனைவருக்கும் - ‘ஸப்ரன் ஜமீலா’ என்னும் அழகிய பொறுமையைக் - கொடுத்து அருள்வானாக.

அன்னார் விட்டுச்சென்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்யும் மன உறுதியை அன்னாரின் குடும்பத்தாருக்கு மேலோன் அல்லாஹ் வழங்குவானாக. ஆமீன்.

துயருடன்,
எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம் &
எஸ்.கே. குடும்பத்தார்,
கொச்சியார் தெரு, காயல்பட்டணம்.
11-02-2020.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved