மலபார் காயல் நல மன்ற (மக்வா) முயற்சியில், கேரள மாநிலம் கோழிக்கோடு – தமிழ்நாடு காயல்பட்டினம் வழிடத்தடத்தில் இயக்கப்படும் விரைவுப் பேருந்தில் இருக்கை இட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
அல்ஹம்துலில்லாஹ்
கோழிக்கோடு ~~ காயல்பட்டணம் பேருந்தில் (தடம் எண் 743 E) இருக்கை இட ஒதுக்கீடு (கோட்டா) மக்வாவின் முயற்சியால் அமலுக்கு வந்தது .
காயலின் அன்பு சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்….
SETC பேருந்தில் தற்போது இணைய தளம் மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால் கோழிக்கோட்டில் இருந்து நமதூருக்கு வருவதற்கு பெரியவர்கள், குழந்தைகள், மற்றும்,பெண்கள். மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதனை கருத்தில் கொண்டு நமது மக்வா களம் இறங்கியது. நமது தொகுதி M.L.A திரு. அனிதா R ராதாகிருஷ்ணன். மற்றும் தூத்துக்குடி கிளை மேலாளர் அபிமன்யு ஆகியோர்களை நேரிலும் கடிதம் மூலமும் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.
அதில் நமது M.L.A. திரு. அனிதா R ராதாகிருஷ்ணன் அவர்களின் பெரும் முயற்சியால்... போக்குவரத்து துறை அமைச்சர் M.R.விஜய பாஸ்கர் அவர்களுக்கு, அண்ணாச்சி அவர்கள் மிகவும் விரைவாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நமது கோரிக்கையை எடுத்து கூறி நமக்கு 10ஸீட் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தார்கள். நாம் வலியுறுத்திய 10ஸீட் கோட்டா முறையும் நடைமுறைக்கு வந்தது.
நமது M.L.A. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். M.L.A.அவர்களை சென்று பார்க்கவும் காரியங்களை விளக்கி கூறியும் எங்களுடன் ஒத்துழைத்த காயல்பட்டணம் தி.மு.க. நகர செயலாளர் ஜனாப் முத்து முஹம்மது அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல் போக்குவரத்து துறை அமைச்சர் M.R. விஜய பாஸ்கர் அவர்களுக்கும்,கிளை மேலாளர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த முயற்சிகளுக்கு எங்களுடன் உறுதுணையாக இருந்த அனைவருக்கும்,முக்கியமாக எமது மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஜனாப் உமர் அப்துல் காதர் (Lucky) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நமது மன்றத்தின் பணிகள் மேன்மேலும் சிறந்து விளங்க தூஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அஹ்மத் மதார்
(செய்தி தொடர்பாளர், மக்வா)
|