சஊதி அரபிய்யா – ஜித்தா நகரில் நடைபெற்ற கைப்பந்துச் சுற்றுப் போட்டியில், காயலர்கள் பங்கேற்ற அணி இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
சஊதி அரபிய்யா – ஜித்தா நகரிலுள்ள KOORA ARENA, OBHUR உள் விளையாட்டரங்கில், ALFA PRIME SPORTS MEET – 2020 எனும் தலைப்பில், ஜித்தா – ALFANEYAH GROUP OF COMPANY நிறுவனத்தின் சார்பில் கைப்பந்துச் சுற்றுப்போட்டி – 30.01.2020. வியாழக்கிழமையன்று 18.30 மணி முதல் 22.30 மணி வரை நடத்தப்பட்டது. லீக் முறையில் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியின் ஒவ்வொரு போட்டியும் மூன்று ஆட்டங்களைக் கொண்டு (Best of three) முடிவெடுக்கப்பட்டது.
POUNCING JAGUARS, FANEYAH FALCONS, DARING ALFA, PRIME RANGERS ஆகிய நான்கு அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப் போட்டியில், காயலர்களான S.A.S.ஸதக்கத்துல்லாஹ், P.A.J.ஷெய்க் அப்துல்லாஹ் ஸாஹிப், பிரபு நூருத்தீன் நெய்னா, N.ஷெய்க் அப்துல் காதிர், M.M.அபூபக்கர், S.ஷெய்க் அப்துல்லாஹ், P.M.S.செய்யித் முஹ்யித்தீன், S.M.அஹ்மத் லெப்பை, அப்துல் ஹமீத் ஆகியோர் POUNCING JAGUARS அணியின் சார்பில் பங்கேற்றனர்.
இறுதிப்போட்டியில் POUNCING JAGUARS அணியும், PRIME RANGERS அணியும் மோதின.
நிறைவில் POUNCING JAGUARS அணி வெற்றிபெற்றது. அவ்வணி, இந்தச் சுற்றுப்போட்டியில் தான் எதிர்த்து விளையாடிய அனைத்து அணிகளுடனும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று, இறுதிப் போட்டியிலும் வென்றமை குறிப்பிடத்தக்கது. அதன் பயிற்சியாளராக ஹமீத் ராஜா கடமையாற்றினார். பாஷா, ஷமீம் ஆகியோர் இச்சுற்றுப்போட்டியின் அனைத்துப் போட்டிகளிலும் நடுவர்களாகக் கடமையாற்றினர்.
இறுதிப் போட்டியின் நிறைவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், ஜித்தா ALFANEYAH GROUP நிறுவனத்தின் இயக்குநர் அப்துல் அஜீஸ் ஹானி ஸாப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற – வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜித்தாவிலிருந்து...
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.A.C.ஷாஹ் மீரான் |