இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாடிக்கையாளர் சேமிப்புக் கணக்குப் புத்தகத்தில் ‘MIGRATION’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த சொல் மக்களைப் பதட்டப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதன் உண்மை நிலையை விளக்கி - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் தகவலறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
ஒரு சிலரின் Indian Overseas Bank (IOB) வங்கி கணக்கு புத்தகத்தில் (PASSBOOK) - "MIGRATION" என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது - அதற்கான தமிழ் அர்த்தம் "இடம்பெயர்வு" என்பதும் உண்டு என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் சிலரின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் உண்மை நிலை என்ன என பார்ப்போம்.
இது போன்ற சம்பவம் - ஒரு குறிப்பிட்ட பகுதி என இல்லாமல், IOB வங்கியின் பல்வேறு கிளைகளில் நடந்துள்ளது.
கீழே மூன்று IOB வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஒன்று, காயல்பட்டினம் கிளை சார்ந்தது; மற்றொன்று - ஈரோடு பெரியார் நகர் கிளை யை சார்ந்தது; மூன்றாவது - தஞ்சாவூர் மாவட்டம் அவனம் நகர் கிளையை சார்ந்தது.
இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த வங்கி வாடிக்கையாளர் என இல்லாமல், அனைத்து சமுதாய மக்களின் வங்கி கணக்கு புத்தகத்திலும் நடந்துள்ளது.
உதாரணமாக - இணைக்கப்பட்டுள்ள கணக்கு புத்தக நகல்களில், இஸ்லாமியர் வங்கி கணக்கும் உண்டு; ஹிந்து மதத்தை சார்ந்தவர் வங்கி கணக்கும் உண்டு.
இந்த விஷயம் ஊடகங்களில் பேசப்பட்டு, அதற்கான விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
பார்க்கவும் கீழ்க்காணும் இணைப்பு:
https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jan/30/amid-caa-tensions-word-migration-in-muslim-womans-passbook-creates-row-in-tamil-nadu-2096580.html
IOB வங்கி கணக்கு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள "MIGRATION" என்ற வாசகத்திற்கு, CAA - NPR - NRC போன்றவை காரணமல்ல; இது அந்த வங்கியின் மென்பொருளில் (SOFTWARE) உள்ள பிரச்சனையால் ஏற்பட்டுள்ள குழப்பமாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|