காயல்பட்டினம் அரசு மருத்துவமனையிலிருந்து தற்போது எந்த மருத்துவரும் மாற்றுப் பணியிடங்களுக்கு அனுப்பப்படவில்லை என - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் தற்போது ஆறு மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். இருப்பினும் - இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றுப்பணிபுாியும் பொருட்டு (DEPUTATION) அனுப்பப்படுவதால் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனை பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக - புறநோயாளிகள் (OUT-PATIENTS) நீண்ட வரிசையில் காத்திருந்து - மருத்துவரை காண வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்தும், அரசு மருத்துவமனையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், தேவைகள் குறித்தும் - தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மெகா | நடப்பது என்ன? குழுமம் சார்பாக விரிவான மனு - நவம்பர் மாதம் - வழங்கப்பட்டது. பின்னர் - தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு மனு - மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகும் - எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக - காயல்பட்டினத்தில், தூத்துக்குடியில் - முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
அதன் விளைவாக - தற்போது - தூத்துக்குடி மாவட்டம் நலப்பணிகள் இணை இயக்குனர் (Joint Director; Health Services) - மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவிற்கு, கீழ்க்காணும் பதிலினை அனுப்பியுள்ளார்.
தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குநாின் கட்டுப்பாட்டில் இயங்கும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களின் பற்றாக்குறையால் அருகில் உள்ள காயல்பட்டினம் அரசு மருத்துவமனையிலிருந்து மருத்துவரை மாற்றுப்பணிபுாியும் பொருட்டு அனுப்பப்பட்டது. தற்சமயம் போதிய மருத்துவா்கள் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் இருப்பதால் மாற்றுப்பணி புாியும் பொருட்டு அனுப்பப்படவில்லை என தொிவித்துக் கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குநாின் கடிதம் ஒ.மு.எண்.5561 க4 2019, நாள் 23.01.2020-ன்படி தொிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த பதிலுக்கு பிறகு, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் - வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறார்களா என்பதை மெகா | நடப்பது என்ன? தொடர்ந்து - இறைவன் நாடினால் - அவதானிக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|