காயல்பட்டினம் கோமான் மொட்டையார் பள்ளி சந்திப்பு, அருணாச்சலபுரம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் சாலையில் வேகத்தடைகள் அமைத்திடக் கோரி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் பெண்கள் பிரிவு சார்பில் காயல்பட்டினம் நகராட்சிக்கு நேரில் சென்ற மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
கோமான் தெரு பகுதிகளில் தார் சாலை போடும் பணிகள் நடந்து வருகின்றன. வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் நிலை - கோமான் மொட்டையர் பள்ளி சந்திப்பு இடத்திலும், அருணாச்சலபுரம் போக திரும்பும் சந்திப்பு இடத்திலும் உள்ளது.
எனவே - இவ்விரு இடங்களிலும், பொது மக்கள் நலனை கருத்தில்கொண்டும், வாகன விபத்துகளை தடுத்திடவும் - வேக தடைகள் (SPEED BREAKERS) அமைத்திட - மெகா / நடப்பது என்ன ? பெண்கள் பிரிவு சார்பாக நகராட்சியிடம் இன்று நேரில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
(சுட்டிக் காட்டப்பட்டுள்ள அந்த இரு சாலையிலும் இது முன் SPEED BREAKERS அமைக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|