காயல்பட்டினம் நகரில் நிலவும் சுகாதாரக் கேடே மருத்துவமனைகள் நிரம்பக் காரணம் என்றும், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகரில் பரவலாக அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி காணப்படுகிறார்கள். காய்ச்சல், உடல் வலி போன்ற பிரச்சனைகள் நகரில் தற்போது அதிகமாக நிலவுகிறது.
இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று - நகரில் நிலவும் சுகாதாரமற்ற நிலைமை.
குறிப்பாக -
-- நகரின் பல பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் முற்றிலும் இன்னும் காயவில்லை; இதனால் - கொசுக்கள் உட்பட பல்வேறு நோய் காரணிகள் நிலவுகின்றன
-- 100 க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டும், நகரில் தேங்கும் குப்பைகள் முழுமையாக அகர்த்தப்படுவதில்லை
-- CHLORINATOR மூலம் குடிநீர் சுத்தீகரிக்கப்படுவதாக நகராட்சி ஆவணங்கள் கூறினால், நகரில் விநியோகம் செய்யப்படும் - குடிநீர், பல நாட்களில் - கலங்கிய நிலையிலும், துர்நாற்றத்துடனும் விநியோகம் செய்யப்படுகிறது
-- உயர்நிலை குடிநீர் தொட்டிகள் அனைத்தும் அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதில்லை
-- குடிநீர் விநியோகம் போது - குழாயில் இருந்து கசியும் நீர், சாலைகளில் தேங்கி, சுகாதாரமற்ற நிலையை உருவாக்குகிறது.
எனவே - *போர்க்கால அடிப்படையில், மேலே விவரிக்கப்பட்டுள்ள முக்கிய பிரச்சனைகளை களைவதில் நகராட்சி துரிதமாக செயல்பட வேண்டி காயல்பட்டினம் நகராட்சி பொறுப்பு ஆணையர் திருமதி புஷ்பலதா அவர்களிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக இன்று கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|