காயல்பட்டினம் நகரில் - தேவைப்படும் பல்வேறு பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகளை நிறுவிடுமாறு, நகராட்சியிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
LF சாலை, YUF சங்கம் சந்திப்பு ஆகிய இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு நிறுவிட - செப்டம்பர் 23, 2019 அன்று மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக - காயல்பட்டினம் நகராட்சியின் பொறுப்பு ஆணையர் திருமதி புஷ்பலதா அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கையின் பயனாக - அவ்விரு இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் நிறுவியமைக்கு பொறுப்பு ஆணையருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் - கீழ்க்காணும் பகுதிகளிலும், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால், உயர் கோபுர மின்விளக்குகள் நிறுவிட அப்பகுதி மக்கள் கேட்கிறார்கள்.
• பெரியப்பள்ளி - நெய்னார் தெரு சந்திப்பு
• சதுக்கை சந்திப்பு
• சிங்கர் ஸ்டோர் சந்திப்பு (பிரதான சாலை)
• ஹாஜியப்பாபள்ளி சந்திப்பு
• ரெட் ஸ்டார் சங்கம் / சுலைமான் நகர் / மங்களவாடி சாலை சந்திப்பு
• மருத்துவர் தெரு EB அலுவலகம் - அரசு மருத்துவமனை நடுவில்
இவ்விடங்களிலும், அவசியத்தை கருதிக்கொண்டு, துரிதமாக உயர்கோபுர மின் விளக்குகளை நிறுவிட, அப்பகுதி மக்கள் சார்பாக, கோரிக்கை மனு - இன்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொ) திருமதி புஷ்பலதா அவர்களிடம் வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|