காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் – இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நூலகம் அருகிலுள்ள சந்திப்பிலும், எல்.எஃப். சாலையிலம் - தமது கோரிக்கையை ஏற்று உயர்கோபுர மின்விளக்குகளை நிறுவியமைக்காக, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு காயல்பட்டினம் நகராட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் ஆறு சந்திப்புகளில் (சிறுப்பள்ளி, மொய்தீன் பள்ளி, அருசியாப்பள்ளி, ஓடக்கரை சந்திப்பு, ரத்தினாபுரி சந்திப்பு, உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு புறவழி சாலை சந்திப்பு) - சிறிய உயர் கோபுர மின்விளக்கு (HIGH MAST LIGHT) நிறுவிட - கடந்த செப்டம்பர் மாதம் - ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது.
இந்த தகவல் நடப்பது என்ன? குழுமத்தில் வெளியாகியதை அடுத்து - குழும அங்கத்தினர், அடிக்கடி விபத்துகள் நடக்கும் LF சாலை பகுதியிலும், YUF சங்கம் சந்திப்பிலும் - உயர் கோபுர மின்விளக்குகளை நிறுவிட - நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்க கோரினர்.
இது குறித்து - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) நிர்வாகிகள், கடந்த செப்டம்பர் 23 அன்று - ஆணையர் (பொறுப்பு) திருமதி புஷ்பலதா அவர்களை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தனர். முக்கிய பகுதிகள் என்பதால் அவ்விடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் நிறுவுவதாக அவர் அவ்வேளையில் உறுதியளித்திருந்தார்.
அதன்படி - தற்போது LF சாலை, YUF சந்திப்பு உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று, நடவடிக்கை எடுத்த காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் () திருமதி புஷ்பலதா அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|