தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் பல் மருத்துவருக்கு - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை யில் நீண்ட நாட்களாக, சிறப்பாக பணியாற்றிவரும் பல் மருத்துவர் டாக்டர் J.R.A.பிரைட்டன் BDS ஆவார்கள்.
2019 ஆம் ஆண்டில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை யில் சிறப்பாக பணிபுரிந்தமைக்கு, டாக்டர் J.R.A.பிரைட்டன் BDS அவர்களுக்கு - மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS அவர்கள், குடியரசு தினம் அன்று பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) நிர்வாகிகள், டாக்டர் பிரைட்டன் அவர்களை இன்று நேரில் சந்தித்து - விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது தான் பெற்ற விருதினை காயல்பட்டினம் மக்களின் ஆதரவுக்கும் ஒத்துழைப்பிற்கும் உரிதாக்குவதாக மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|