காயல்பட்டினத்தின் சில பகுதிகளில் பழுதடைந்த நிலையிலுள்ள மின்மாற்றிகளை அகற்றி, புதிய மின்மாற்றிகளை அமைக்காமல் காலந்தாழ்த்துவதாகவும், விரைந்து செய்து தருமாறும், தமிழ்நாடு மின்வாரிய உயரதிகாரிகளிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, கோமான் மொட்டயார் பள்ளி அருகிலுள்ள மின்மாற்றி புதிதாக மாற்றப்பட்டபோது திடீரென விபத்து ஏற்பட்டது. அதனால், அப்பள்ளியின் சுற்றுச்சுவர், மினாரா ஆகியன சேதமுற்றுள்ளன. அவற்றுக்குரிய இழப்பீட்டை வழங்கிடக் கோரி மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
கோமான் மொட்டையார் பள்ளி அருகே இருந்த மின்மாற்றி (TRANSFORMER) மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனை உடனடியாக மாற்றிட கோரி - 2018 அக்டோபர் முதல் - மெகா அமைப்பு மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு - கடந்த சில நாட்களாக .பணிகள் நடைபெற்று வந்தன.
அதன் தொடர்ச்சியாக, 07.02.2020. அன்று பணிகள் நடந்துக்கொண்டிருந்தபோது - கிரேன் சரிந்து விழுந்ததில், பள்ளிவாசலின் சுவர் மற்றும் இரண்டு மினாரா மிகவும் சேதமடைந்துள்ளன.
இறைவனின் மாபெரும் கிருபையால் - எந்த உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இந்த சேதத்திற்கு முழு பொறுப்பு - இப்பணியினை மேற்கொண்டவர்கள் என்ற காரணத்தால், அதற்கான நஷ்டஈடினை - பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கிட - மின்வாரியத்துறையிடம் மெகா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|