காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பல தெருக்களில் பத்து கோடி ரூபாய் செலவில் நகராட்சியால் புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் ஓரங்கள் முறையாக இல்லை என்றும், எளிதில் அவை சிதிலமடைய வாய்ப்புள்ளதாகவும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி யில் தற்போது 30 க்கும் மேற்பட்ட சாலைகள், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்டு வருகிறது. தார் சாலைகளாக போடப்படும் இந்த சாலைகளுக்கான நிதி - 2.5 கோடி ரூபாய் TURIP 2019-2020 திட்டத்தின் கீழும், 3.5 கோடி ரூபாய் மாநில/மத்திய நிதிக்குழு மானிய நிதி மூலமும், 4 கோடி ரூபாய் நகராட்சியின் பொது நிதியில் இருந்தும் பெறப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கான மொத்த 10 கோடி ரூபாயும் - மாநில அரசிடம் இருந்து பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சாலைகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் சாலைகள் அமைக்கப்படவில்லை.
(1) Wet Mix Macadam Base - 250 mm உயரம்
(2) Prime Coat - 7kgs/10 sq.m
(3) Bituminous Emulsion - 2.5kgs/10 sq.m
(4) Tack Coat - 2.5kgs/10 sq.m
(5) Thick Dense Bituminous Macadam - 50 mm உயரம்
(6) Bituminous Concretet - 30 mm உயரம்
(7) Thermoplastic Compound - 2.5 mm உயரம்
(8) Reflectorising Glass Beads - 250 gms/sq.m
மேலுள்ள தொழில்நுட்ப விபரங்கள் - 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 சிப்பங்களாக போடப்படும் 30 க்கும் மேற்பட்ட சாலைகளுக்கு பொதுவானவை
பழைய சாலையை தோண்டி போடாததால், சாலைகள் உயர்ந்துள்ளன.
மேலும் சாலையோரங்கள் - தரமாகவும் அமைக்கப்படவில்லை. இதனால் - கார், இரண்டு சக்கர வண்டிகள் ஏறி இறங்கும் போது - சாலையோரங்கள் - விரைவாக பாதிப்புக்காளாகும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|