காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதில் அவதி ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா முறையிட்டதையடுத்து, அங்குள்ள நெட்வர்க் பிரச்சினையைச் சரி செய்திட உத்தரவிடப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் ரயில்வே நிலையத்தில் டிக்கெட்கள் முன்பதிவு செய்வதில் சிரமம் இருப்பதாக - பயணியர் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா), சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்தது.
அதற்கு பதில் வழங்கியுள்ள அதிகாரிகள், நெட்வர்க் பிரச்சனை காரணமாக மெதுவாக இருப்பதாகவும், அவசர அடிப்படையில் சரி செய்திட சம்பந்தப்பட்ட வல்லுநர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் வழங்கியுள்ளார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|