2019 – 2020 நிதியாண்டில் மத்திய – மாநில அரசுகளின் வரி வசூல்களிலிருந்து காயல்பட்டினம் நகராட்சிக்குக் கிடைக்கப்பெற்றுள்ள பங்குத்தொகை எவ்வளவு என்பதை விளக்கி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி - அவை பொது மக்கள் மீது விதிக்கும் சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் வரி போன்றவை மூலம் - கிடைக்கும்.
இவைகளை தவிர - மத்திய மற்றும் மாநில அரசுகள் - தாங்கள் விதிக்கும் வரிகளில் ஒரு பங்கினை ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புக்கும் வழங்கும். எவ்வளவு தொகை வழங்கவேண்டும் என்ற அளவுகோல் நிர்ணயம் செய்ய மத்திய மற்றும் மாநில அளவில் நிதிக்குழுக்கள் (Central Finance Commission [CFC]; State Finance Commission [SFC]) உள்ளன.
அந்த நிதிக்குழுக்கள் அளவுகோல்படி - காயல்பட்டினம் நகராட்சி - 2019 - 2020 நிதியாண்டில் (ஜனவரி 2020 வரை) பெற்றுள்ள தொகை என்ன?
-------------------
மாநில நிதிக்குழு தொகை (State Finance Commission [SFC])
-------------------
ஏப்ரல் - ஜூன்
ரூபாய் 48,69,218
ஜூலை - ஆகஸ்ட்
ரூபாய் 70,97,451
செப்டம்பர்
ரூபாய் 7,55,732
அக்டோபர்
ரூபாய் 36,23,244
நவம்பர்
ரூபாய் 34,58,019
டிசம்பர்
ரூபாய் 9,88,692
ஜனவரி
_ரூபாய் 27,44,415
நிலுவை தொகை
ரூபாய் 25,20,857
மொத்தம்: ரூபாய் 2,60,58,528 (2 கோடியே, 60 லட்சம்) [ஏப்ரல் 2019 முதல் ஜனவரி 2020 வரை]
இந்த தொகை - பிடித்தங்கள் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகையாகும்.
-------------------
மத்திய நிதிக்குழு தொகை (Central Finance Commission [CFC])
-------------------
2018 - 2019 நிதியாண்டின் இரண்டாவது தவணை
ரூபாய் 97,90,273 (97 லட்சம்) [வழங்கப்பட்ட மாதம்: செப்டம்பர் 2019]
-------------------
பத்திரப்பதிவுகளின்போது வசூல் செய்யப்படும் கூடுதல் தொகையில் (SURCHARGE) உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு (Stamp Duty Surcharge)
-------------------
2018 - 2019 நிதியாண்டின் டிசம்பர் முடிய காலாண்டு
ரூபாய் 6,39,499 (6 லட்சம்) [வழங்கப்பட்ட மாதம்: செப்டம்பர் 2019]
2018 - 2019 நிதியாண்டின் மார்ச் முடிய காலாண்டு
ரூபாய் 5,79,918 (5 லட்சம்) [வழங்கப்பட்ட மாதம்: டிசம்பர் 2019]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|