ஜாவியா பட்டமளிப்பு விழா! ... posted bySolukku Seyed Mohamed Sahib SMI (Jeddah)[24 July 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 6336
பட்டம் பெற்றுள்ள அறிஞர்கள் சார்ந்திருக்கின்ற ஷாதுலியா தரிக்காவை முழுமையாக பின்பற்றி நடந்திட இறைவனிடம் துஆ செய்கின்றேன்.
முன்பெல்லாம் மஹ்லரா அரபிக்கலூரியிலும் ஜாவியா அரபிக்கலூரியிலும் பட்டமளிப்பு விழாவில் நமது ஊரை சேர்ந்த அதிகம் பேர் ஆலிம்கள் பட்டம் பெறுவார்கள் ஆனால் ஒருவர் இருவர்தான் இப்போதெல்லாம் பட்டம் பெறுகின்றனர். பெற்றோர் தங்களது மக்களை மார்க்கக்கல்வி கற்பதற்கு தூண்ட வேண்டும். கல்லூரி நிர்வாகங்களும் பாடத்திட்டத்தில் மாற்றம் ஏற்ப்படுத்தி இவ்வுலக கல்வியையும் ஒருசேர்ந்து கற்பிக்க வாய்ப்பிருந்தால் சமுதாயதிற்கு இருவகையிலும் நன்மை பயக்கும்.
முன்பெல்லாம் குர்ரான் ஹிப்ல் முடிப்பதற்கு நீண்ட காலம் எடுப்பார்கள் இப்போதெல்லாம் மாஷா அல்லாஹ் குறுகிய நாட்களிலேயே மனனம் செய்து முடிக்கின்றார்கள்.
அதுபோல் முன்னைய காலத்தில் குர்ரான் ஹிப்ல் முடித்துவிட்டு professional படிப்புகளுக்கு சென்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், ஆனால் இன்று அப்படியல்ல எந்தனையோ மாணவர்கள் குர்ரான் ஹிப்ல் நிறைவு செய்துவிட்டு எஞ்சினீர் ஆகா உள்ளனர் என்பதை பார்க்கும் போது நிறைவாக இருக்கின்றது. இந்த மாற்றத்திக்கு ஹாமிதிய்யா ஹிப்ல் பிரிவு முக்கிய பங்கை வகிக்கின்றது என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்வது தகுந்த தர்ணம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் நேரான வழியில் இறுதிவரை செலுத்துவானாக ஆமீன்.
ஆகஸ்டிற்குள் சாலை பணியை ம... posted bySolukku Seyed Mohamed Sahib SMI (Jeddah)[23 July 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 6312
நல்ல தீர்வு, அதுபோல சாலைகளின் தரம் இப்படி இருக்கவேண்டும், குறைந்த பட்சம் இதனை காலம் நீடித்து உழைக்க வேண்டும் என்பது போன்ற கண்டிப்புகளையும் நிறைவேற்றினால் நன்றாக இருக்கும், பொதுமக்களும், பொது நிறுவனங்களும் சாலைகளை கீறி காயப்படுத்தாம இருக்கணும்.. எல்லாம் ஒரு ஆசைதான்.
‘சேவைச் செம்மல்‘ விருது ப... posted bySolukku Seyed Mohamed Sahib SMI (Jeddah)[23 July 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 6301
உரியவருக்கு வழங்கப்படிருக்க வேண்டிய இதுபோன்ற அங்கீகாரங்கள் மிக காலந்தாமதாக வளங்கபட்டிருந்தாலும் நல்ல அழகான முறையில் பாராட்டு விழா நடக்க இருப்பது நல்ல செய்தி, எல்லாம் சிறப்பாக நடந்தேறுவதற்கு இறைவன் அருள் புரிவானாக.
ஒருமுறை சுல்தான் காக்கா, தமீம் காக்கா ஆகியோருடன் நானும் பொறுப்பேற்று சபையிலிருந்து சுற்றுலாவை ஏற்ப்பாடு செய்தபோது சிறுவர்களை அழைத்து செல்வதால் முறையான ஏற்ப்பாடுகள் இல்லாமல் அனுமதி தரமாட்டேன் என்று கண்டிப்புகாட்டியவர்களிடம் எங்களிடம் திட்டத்தை கேட்டு தெளிந்தபிரகுதான் அனுமதி தந்தார்கள், அப்படி ஒவ்வொரு வினயதிலும் மாணவர்களின் நலம் பார்த்துதான் முடிவெடுக்கும் பொறுப்பானவர்கள்.
எந்த பலனையும் எதிர்பாராது தனது நேரத்தை எல்லாம் இல்லை வாழ்நாளையே மார்க்கமும் சமுதாயமும் சேர்ந்த சிந்தனையோடே வாழ்பவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு வாழ்நாளை நீட்டிக்கொடுத்து நல்ல சௌபாக்கிய வாழ்வை தந்தருள்வானாக ஆமீன். விழா நன்றாக நடந்தேற அல்லா அருள்பாலிப்பானாக. ஆமீன்.
ரமழான் 1432: நோன்புக் கஞ்... posted bySolukku Seyed Mohamed Sahib SMI ( Jeddah.)[19 July 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 6161
முதல்வர் அவர்கள் எல்லோருக்கும் பொதுவாக பொறுப்புடன் இந்த இலவச திட்டத்தை வழங்கி இருப்பது நன்றிக்குரியது. நம்மவர்கள் பலபேர் எப்போதும் ஒருஅரசியல் கட்சி சாப்பகவே சிந்திக்கிறார்கள் எந்த அமைப்பும் நல்லதை அமல் நடத்தும்போதும் அங்கிகரிக்கும் பெருந்தன்மையை நாம் பெற்றிட வேண்டும். அரசு மானியங்களின் சுத்தத்தை ஆராய்ந்தால் ஒரு சரியான முடிவுக்கு வருவது சிரமம்தான். மானியத்தை முழுமையாக தவிர்க்க இயலவில்லைதான், காரணம் நம்மில் பலபேரும் ஹஜ்ஜுக்கு அரசு மானியாதில்தான் செல்லும்னிலையில் இருக்கிறார்கள், அதிலும் சிலர் பலமுறை மானியத்தில் செல்கிறார்கள், அரசு மானியத்தில் கடமையான ஹஜ்ஜை முடித்தவர்கள் மறுமுறையும் மானியத்தில் வருகிறார்கள் வசதி வாய்ப்பு இருப்பவர்களும். இதில் நண்பர் ஒருவர் சொன்னதுபோல் ஆட்சியாளர்களே பொறுப்பாளர்கள் அதுவும் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு பொருந்தும், முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர்களின் கீழ் வரும் முஸ்லிம் பொதுமக்கள் எப்படி செயல்படவேண்டும் என்பதை விளக்குவார்கள் தெளிவான தெரிவை தரவேண்டும். அனைத்தையும் அறிபவன் அல்லாஹ் ஒருவனே.
செய்தி: ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு மத்ரஸா நிர்வாகம் நன்றி தெரிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘... posted bySolukku Seyed Mohamed Sahib SMI (Jeddah.)[18 July 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6142
சிலருக்கு வாங்கும் விருதால் பெருமை வரும், சிலரால்தான் விருதுகளுக்கு பெருமை சேரும். அப்படி விருதுக்கு பெருமை சேர்க்க வேண்டிதான் இந்த விருது அல்ஹாஜ் நூருல் ஹக் நுஸ்கி அவர்களுக்கு வளங்கபட்டிருப்பதாக நான் கருதுகிறேன். இறைவன் அவர்களின் வாழ்நாளை நீட்டி கொடுத்து சமுதாயதிற்கு பயனுள்ள நல்ல பல சேவைகளை கொடுக்கும் நல்லுள்ளத்தை இறுதிவரை அல்லா கொடுத்தருள்வானாக ஆமீன்.
செய்தி: புற்றுநோய் விழிப்புணர்வு முகாமாகவே நடைபெற்றது திருவனந்தபுரம் கா.ந.மன்ற பொதுக்குழு! உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Masha Allah - Congratulation posted bySolukku Sd M Sahib SMI (Jeddah)[18 April 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4008
திருவனந்தபுரம் காயல் நற்பணி மன்றம் ஆரம்பித்து ஒரு பொது இடத்தில் வைத்து நடைபெறும் முதல் பொதுக்குழு இதுதான் என்பதாய் ஞாபகம், வெகுசிறப்பாக நடந்திருப்பதையும், அத்தோடு ஒரு சிறந்த மருத்துவ நிபுணரையும் அழைத்து மருத்துவ விளக்க உறையாற்ற செய்து மக்களுக்கு வழிப்புணர்வை தூண்ட செய்த நல்ல நிகழ்ச்சியாகவும் நடந்தேறியிருப்பது இன்பமான நிகழ்ச்சி.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் வைத்தியம் பெற வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு திருவனந்தபுரம் வாழ் காயல்வாசிகள் வெளிதெரியா எவ்வளவு உதவிகள் செய்துள்ளனர், அனைத்து நல்ல செயல்களுக்கும் அல்லாஹ் அளப்பரிய நன்மை அளித்தருள்வானாக, ஆமீன்.
சங்கத்தின் முக்கிய வேலைகளை எங்கள் நண்பர் நாங்கள் செல்லமாக அழைக்கும் “ஸ்கட்” அபுபக்கர்- அடைபெயருக்கு ஏற்றார்போல் தொய்வில்லாது செயலாற்றுகின்றார் என்பது எல்லோருக்கும் தெரியும், மற்றவர்களும் இணைந்து செயல்பட்டால் இன்னும் சிறப்புறும்.
உங்கள் சேவை மேன்மேலும் சிறந்திட உங்களனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக ஆமீன். வாழ்த்துக்கள்.
Kayal Red Sea posted bySd M Sahib SMI (Jeddah)[17 April 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3987
தாரங்கதார கெமிக்கல் மட்டுமே காரணம் என்று காயல்.காம் சொல்லவில்லை, அதுவும் ஒருகாரணமாகலாம் என்றுதான் கருத்துசொல்கின்றது. ஆனால் நமதூர் கடல் அடிக்கடி செங்கடல்போல் காணுமே அதன் காரணம் அந்த இராசாயன கழிவினால்தான் ஏற்படுகின்றது, அந்த மாற்றம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும்தான் ஏற்படும். முறையான வழியில் சுத்தகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகளால் நமது கடல் தன்னிறம் இழந்து செந்நிறம் பெறுகின்றது நமது உடலினுல் செங்குருதி தன்தன்மையும் வெளிராகின்றது, பலநோய்கிருமிகளுக்கு தோதுவாகின்றது. இதுஎப்போதே இருக்கும் பாதிப்புதான் அன்றய ஆரோக்கியமான உணவினால் கொஞ்சம் உடல்திறம் தாக்குபிடித்திருக்கலாம், ஆனால் இன்றய இரசாயன உணவின் சக்தி நம்மை அத்தனை காப்பதில்லை, அத்தோடு விஞ்சானமும் வளர்ந்ததினால் அதன் பாதிப்பை நாம் ஓரளவு உணரமுடிகின்றது. அத்தோடு சுற்றத்தையும் சுத்தமாக வைத்திருந்தால் நலமாகும், எந்த வீட்டில் அப்லோடு(அடுப்பாங்கறை) அறையும், டவுன்லோடு அறையும் சுத்தமாக பாராமறிக்கப்படுகின்றதோ அந்தவீட்டில் சுகாதாரமும் பாதுகாக்கப்படும்…
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross