Re:... posted byT.S.A. ABOO THAHIR (chennai)[19 June 2014] IP: 101.*.*.* India | Comment Reference Number: 35473
அன்பு நிறைத்த சூபி காக்கா அவர்களின் மரண செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து உயர் பதவியை வழங்குவானாக.
அன்பு நண்பர் உமர் ரிழ்வான் ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் விரைவில் பூரண நலனை வழங்குவானாக. ஆமீன்,
Re:... posted byT.S.A. Seyed Aboothahir (chennai)[12 February 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 33118
நான் கண்ட நல்லோர்களில் ஒருவர். பக்தி மிகுந்த சிரோண்மணி, எப்பொழுதும் தஸ்பீஹுடன் இருப்பார்கள், குர்ஆன் திலாவத், மௌலிது, சலவாத், திக்ரு என்றே அவர்களின் நேரங்கள் பயனுள்ள வகையில் அமைந்திருந்தன, சென்னையில் அவர்கள் வசித்து வந்த போது பல பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்கள், பல வீடுகளில் பத்தி மணம் வீச இவர்களின் பக்தியே காரணமாக இருந்தது.
ஊரிலும் பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்து வந்தார்கள், பள்ளிக்கு போக மறுக்கும் பிள்ளைகள் கூட பால்மா லெப்பையிடம் என்றால் தயங்காமல் போவார்கள். அந்தளவு தாயன்புடன் கற்பிக்கும் கண்ணியமிகு உஸ்தாது.
எங்கள் அன்பு மாமியின் மரண செய்தி மிகுந்த கவலைக்குரியது. அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து அவர்களின் ஒதுங்குமிடத்தை உயர்வானதாக ஆக்கி வைப்பானாக. மண்ணறையை விசாலமாக்கி நம் மன்னர் நபியுடன் நெருங்கிஇருக்கச் செய்வானாக ஆமீன்.
என் அன்பு சொளுக்கு மச்சான் மற்று மச்சி மார்களுக்கும் மற்றும் குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்
Re:... posted bySEYED ABUTHAHIR (chennai)[29 January 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 32852
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
பழக இனியவர். எல்லோருடனும் இனிமையாக பழகும் அன்பாளர்
அவர்களின் மறைவால் மனம் வாடிப் போயிருக்கும் அவர்களது குடும்பத்தார் அன்பர்கள் நண்பர்கள் யாவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக
Re:... posted bySEYED ABUTHAHIR (chennai)[12 December 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31935
kayalpatnam.com செய்தி ஊடகம் தான். அதற்காக நாலந்தர ஊடகமாக மாற்றி உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த செய்தி அவசியம் தெரிந்தே ஆக வேண்டிய செய்தியும் அல்ல. மட்டுமின்றி பிறர் தவறை மறைப்பது அல்லவா நமது மார்க்க மாண்பு. தயவு செய்து இந்த செய்தியை இந்த தளத்திலிருந்து நீக்கம் செய்யுங்கள், இனி வரும் காலங்களில் இது போன்ற தகவல்களை தவிருங்கள்,
உங்கள் நல் சேவை தொடர வாழ்த்துக்கள்.
Re:...சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடனே posted byT.S.A. Aboothahir (chennai)[17 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31515
நமது ஊர் மக்கள் அரசு பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது ஒரு குறையாகவே இருந்து வந்தது. அந்த குறையை களையும் வகையில் அரசு பணியில் இணைந்ததே பெரும் சாதனை. அதிலும் உள்ளூரிலேயே என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. அதையெல்லாம் கடந்து சிறந்த நூலகர் என விருது பெற்றது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மட்டற்ற மகிழ்ச்சி.
அவரின் தந்தை அன்பு பெரியவர் காஜா அப்பா அவர்கள் சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசம் பாராது அன்பு பாராட்டும் அபூர்வ மனிதர், தனக்கும் வயது ஆகிவிட்டது என்று தன்னை பலவீனப்படுத்திக் கொள்ளாது தன்னால் முடியாத காரியங்களையும் முயன்று செய்யும் சிறந்த குணத்திற்கு சொந்தக்காரார்.
உதாரணமாக, உறவினர்களை சந்திப்பது, நோயாளிகளை சுகம் விசாரிக்கச் செல்வது, மய்யித் தொழுகையில் கலந்துகொள்வது, பயான் மஜ்லிஸ்கள் (அது எவ்வளவு தூரமானாலும் நேரமானாலும்) செல்வது போன்றவை. அவர்களிடம் நான் கண்டு வியந்தது,
முடியாது இயலாது என்று எதிர்மறையில் (negative) சிந்திக்காது எதையும் நேர்மறையில் (positive) சிந்திப்பவர், அதற்கு சிறந்த உதாரணம்தான் தன் மகனின் உடல் இயல்பைக் கூட குறையாக நினைத்து வீட்டிலேயே உட்கார வைத்து விடாமல் அவரை பட்டப் படிப்பு படிக்க வைத்து, பணியில் அமர்த்தி இன்று பதக்கமும் பெறச் செய்திருப்பது, சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடனே என்பதற்கொப்ப தன் கடமையை சரியாக செய்தவர்கள் கண்ணியமிகு காஜா அப்பா அவர்கள், அல்லாஹ் அவர்களின் வாழ் நாளை சரீர சுகத்துடனும் சகல சவ்பாக்கியங்களுடனும் நீளமாக்கி வைப்பானாக.
தன் மகன் உழைத்து தன்னைக் காப்பாற்றுவான் என்று மகனுக்கு செலவு செய்பவர்கள் ஒரு வகையினர், இவனெல்லாம் எங்கே உருப்படப் போகிறான் என்று மக்களின் ஆர்வத்தை, திறமையை மட்டம் தட்டும் தகப்பர்கள் இன்னொரு வகையினர், கல்யாண அழைப்பிதழில் பெயருக்குப் பின்னால் பட்டம் போடுவதற்காகவே படிக்க வைப்பவர்கள் சிலர், அரபு நாடுகளின் கனவுகளோடு ஏதோ ஒப்புக்கு படிப்பவர்கள், படிக்க வைப்பவர்கள் சிலர், எதற்கு இதுவெல்லாம் என்று தம் மக்களை மேல் படிப்பு படிக்க வைக்காதவர்கள் பிறிதொரு வகையினர், இவர்களில் இருந்தெல்லாம் முற்றிலும் மாறுபட்டு முன் உதாரணமாக திகழ்ந்து ஊருக்கு பெருமை தேடித் தந்த இவர்கள் நிச்சயம் நம் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்கள்,
ஏதோ இது ஒப்புக்காக எழுதப்பட்ட விமர்சனம் அல்ல. மாறாக ஒவ்வொரு வரிகளுக்குப் பின்னாலும் என் உணர்வுகள் மறைந்திருக்கிறது.
நண்பர் முஜீப் இன்னும் சிறப்பாக சேவை ஆற்ற வேண்டும், நமதூரில் வசிக்கும் சமூகத்தை வாசிக்கும் சமூகமாக வார்த்தெடுக்க வேண்டும், அதற்காக முயற்சிக்க வேண்டும். என்பது என் அவாவும் துஆவும்,
நம்மவர்கள் அவரின் ஆக்கபூர்வமான பணிகளுக்கு ஊக்கம் வழங்க வேண்டும்
Re:...தீர்வு posted byT.S.A. Aboothahir (chennai)[13 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31409
பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
மழையில்லா காலங்களில் அவற்றை அழைத்துக்கொண்டுபோய் தானே மழைக்காக துஆ செய்கிறோம்.
பிராணிகளோடும் பிரியமாக நடந்து கொள்ளச் சொன்ன பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் கரிசனம் நம் கண்களை பனிக்கச் செய்கின்றன.
மாடுகளே நீங்கள் என்ன செய்வீர்கள் இப்போது மனுநீதி சோழன் ஆட்சியும் இல்லையே,
சாலை ஓரங்களில் செல்லும் இரு சக்கர ஓட்டிகளின் உயிருக்கே உத்திரவாதம் இல்லாத இந்த அவசர உலகில் மாடுகளே உங்களின் நிலை நிச்சயம் பரிதாபம் தான்.
மாடுகளே நீங்கள் எங்களுக்கு உதவிய காலங்கள் முடிந்து போய் விட்டது, இன்று நாங்கள் மாருதிகளில் வாகனிக்கிறோம். எங்கள் வாகனங்களை parking செய்யவே வசூலிக்கிறார்கள், பாவம் உங்களுக்கு எங்கள் இதயங்களில் இடம் உண்டே தவிர இல்லங்களில் இல்லை.
மாடுகளைப் பூட்டி வண்டிகளில் வாகனித்த காலங்கள் மறந்து விட்டது. எனவே தான் இப்போதெல்லாம் நீங்கள் எங்களுக்கு இடையூறாக தெரிகிறீர்கள். எங்கள் வாகனங்கள் உங்களை வதை செய்கின்றன..
என்ன செய்வது, தனக்கு வயது வந்து விட்ட பிறகு வயது முதிர்ந்து விட்ட பெற்றோரையே பிள்ளைகள் வதை செய்யும் நன்றி கெட்ட இக்காலத்தில் நீங்கள் செய்த உதவிகளை நினைவு படுத்த நேரம் எங்கே இருக்கிறது?
உங்கள் உரங்கள் தான் எங்களை உரமாக வாழ வைத்தது, செயற்கை உரங்கள் வந்து விட்ட பிறகு தான் எங்களுக்கு செயற்கை சுவாசங்கள், பலப்பல நோய்கள்.
நீங்கள் ஒரு காலத்தில் எங்களுக்கு உதவினீர்கள் உண்மைதான், உதவிய காலங்களை நாங்கள் மறக்கவில்லை, ஆனால் எங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களே இன்று முதியோர் இல்லத்தில், நீங்கள் மட்டும் எங்களுடனா?
இருங்கள் கொஞ்சம் யோசிக்கலாம், பெட்ரோல் விலை போகிற போக்கைப் பார்த்தால் திரும்ப உங்கள் உதவி தேவையாகலாம்.
யானைக்கொரு காலம் வந்தால் பூனைகொரு காலம் வராமலா போகும் யானைகள் புத்துணர்வு முகாம்களுக்கு அரசு அனுசரணை போல மாடுகள் மறு வாழ்வு திட்டம் எதாவது வருகிறதா பார்க்கலாம்.
உயிரினங்களை வளர்ப்பது பெரிதல்ல முறையாக பராமரிக்க வேண்டும், நமதூரிலேயே இப்படி என்றால் அதிக மக்கள் வசிக்கும், வாகன நெரிசல் மிகுந்த பட்டணங்களில் ஆடு மாடுகளை பராமரிப்பது எப்படி?
மாட்டை காப்பதற்காக ஓட்டுனர் முயற்சித்திருந்தால் பல மனித உயிர்கள் அங்கே பலியாகியிருக்கலாம். அல்லாஹ் காப்பாத்தினான்.
மனிதர்களே ஒருவரை ஒருவர் உரசாமல் நடக்க முடியாத அளவு நெருக்கடி மிகுந்துவிட்ட இக்காலங்களில் ஆடு மாடுகள் நடப்பதற்கு எங்கே இடம் உள்ளது?
ஆடு மாடுகள் மேயும் புல்வெளித் தரைகள் எல்லாம் ரியல் எஸ்டேட் முதலாளிமார்களின் உதவிகளோடு? கட்டிடங்களாக மாறி விட்ட பிறகு ஆடு மாடுகள் மேய்வதற்கு எங்கே இடம் உள்ளது?
மனிதன் குடிப்பதற்கே விலைக்கு தண்ணீர் வாங்கும் இந்த வினோத உலகில் தாகத்தோடு அலையும் மாடுகளுக்கு தண்ணீர் தர யார் தயார்?
மினரல் கேன் தண்ணீரை மகன் அதிகமாக குடிப்பதை ஆத்திரத்தோடு பார்க்கும் தகப்பர்கள் மிகுந்து விட்ட இக்காலத்தில் மாடுகளுக்கு தண்ணீர் தர எங்கே போவது?
மாதம் மும்மாரி பொழிந்த காலங்கள் மாறிப் போய் விட்ட இக்காலத்தில் மனிதனே தண்ணீருக்கு ஏங்குகிறான். மாடுகளுக்கு எங்கே?
ஆறு குளம் எரி வாய்க்கால்களில் எல்லாம் தண்ணீர் எங்கே ஓடுகிறது நகைச்சுவை நடிகர் விவேக் சொல்வது போல மணல் அல்லும் லாரிகள் தானே ஓடுகின்றன.
பங்களா போன்ற வீடு, வீட்டுக்குப் பின் தோட்டம் துறவு, ஆடு மாடு கட்ட வளவு, கோழி அடைக்க கூடு என்ற காலங்கள் கடந்து மனிதர்கள் வசிக்கும் வீடுகளே கோழிக்கூடு போல சுருங்கிவிட்ட இக்காலத்தில் மாடுகளை எங்கே போய் கட்டுவது
மனிதர்கள் குடியிருக்க அடுக்கு மாடி குடியிருப்புகளை (plot) தேடும் போது மாடுகள் குடியிருக்க எங்கே இடம் தேடுவது?
இப்படியாக சிந்திக்கையில் ஆடு மாடுகள் வளர்ப்பதிலும் அவை பெருகுவதிலும் பல இடையூறுகள் இருக்கவே செய்கின்றன.
தண்ணீர்
உணவு
இடம்
மருத்துவம்
என மனிதர்களுக்கு தேவையான அத்தனை தேவைகளும் அவற்றிற்கு உண்டு.
இவை அனைத்தையும் கவனித்து பராமரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
அரசு கிடங்குகளில் போதிய பராமரிப்பு அற்ற நிலையில் நோயுற்று மாடுகள் மரணிப்பது ஊடகங்களில் செய்திகளாக வெளி வருவதில்லை. இப்படியாக பல அசாத்திய கூறுகள் உண்டு.
தீர்வு.
முறைப்படி அறுப்பது குர்பானி, அகீகா என அல்லாஹ்விற்காக அறுத்து பலியிடுவது, அவற்றை மனிதர்கள் முறையோடு உண்ணுவது என இஸ்லாம் கூறும் வழிகளே இவற்றிற்கான தீர்வு. அதுவே ஜீவகாருண்யம்.
Re:... கத்திரிக்கோளின் ஒற்றைக்கால் posted byT.S.A. Aboothahir (chennai)[07 November 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 31286
டியர் அட்மின் அவர்களே
ஏனோ அவ்வப்போது உங்களின் கத்திரிக்கோளின் ஒற்றைக்கால் உடைந்து போகிறது.
கருத்துக்கள் பதிவு செய்யப்படுவதற்கு தாங்கள் வைத்திருக்கும் நிபந்தனைகளில் இலக்கம் 4 மற்றும் 5ன் படி தனிநபர் தாக்குதல் விவாதத்திற்குரிய கருத்தை நீங்கள் தணிக்கை செய்திருக்கலாமே.
மன வருத்தங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாமே, கொஞ்சம் கவனம் செலுத்துங்கள், சர்ச்சைக்குரிய அந்த வாசகங்களையும் கருத்துக்களையும் நீக்குங்கள்.
வாசகர் பார்வைக்கு;
கீழ்க்காணும் சில காரணங்களுக்காக - பதிவாகும் கருத்துக்களில் உள்ள சில வார்த்தைகள் தணிக்கை செய்யப்படும் என்பதனையும், சில நேரங்களில் முழுமையாக நிராகரிக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
(1) செய்திக்கு தொடர்பில்லா கருத்து
(2) ஊர்ஜிதம் செய்யமுடியாத தகவல்
(3) ஆபாச, வன்மையான வார்த்தைகள்
(4) தனிப்பட்ட நபர் தாக்குதல்
(5) நீண்ட விவாதங்களை உருவாக்கக்கூடிய கருத்துக்கள்
(6) ஒருவரே பல பெயரில் பதிவு செய்வது
(7) ஒரே கருத்து பல முறை பதிவு செய்யப்படுவது
(8) தவறான ஈமெயில் முகவரி
(9) அடையாளம் தெளிவில்லாத நபரின் கருத்து
இவைகளை தவிர வேறு பல காரணங்களுக்கும், கருத்துக்கள் தணிக்கை/தள்ளுபடி செய்யப்படலாம் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Re:... posted byT.S.A. Aboothahir (chennai)[10 September 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 30064
இரட்டை அளவு கோள்?
டியர் அட்மின் அஸ்ஸலாமு அலைக்கும்.
செய்தி தளமான இந்த பகுதியை விவாத களமாக நீங்கள் தான் மாற்றுகிறீர்கள். செய்தி அல்லாத விவாத தொடர்பான தகவலை தருகிறீர்கள். அது குறித்து நா(ன்)ங்கள் பதிவு செய்யும் கருத்தை விவாதம் என காரணம் கூறி REGECT செய்து விடுகிறீர்கள். இது என்ன இரட்டை அளவு கோள்? என்பது புரியவில்லை.
உங்களிடம் சில கேள்விகள்?
இந்தோனேசியா, தென் ஆப்ரிக்காவில் பார்க்கப்பட்ட பிறைக்கும் காயல் இணைய தளத்திற்கும் என்ன தொடர்பு?
சகோதரர் ரில்வான் நிறைய கேள்வி கேட்டிருக்கிறாரே அதற்கு நா(ன்)ங்கள் பதில் எழுதினால் அதையும் விவாதம் என காரணம் கூறி REGECT செய்து விடுகிறீர்கள் தானே? பிறகு ஏன் அத்தனை கேள்விகளை பதிவு செய்கிறீர்கள்?
கையை கட்டி விட்டு களத்தில் இறங்க சொன்னால் எப்படி? கொஞ்சம் நடுநிலை பேணக் கூடாதா?
Re:... posted byT.S.A. Aboothahir (chennai)[01 September 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 29924
தரமான கட்டுரை தந்த சகோதரர் சாளை பஷீருக்கு வாழ்த்துக்கள்.
சீர் மக்காவில் துவங்கி சிறு மக்காவில் கொண்டு சேர்த்து விட்ட கட்டுரையாளரின் போங்கு பிரமாதம்.
தமிழுக்கு தொண்டு செய்த அறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் வாழ்ந்து மறைந்த பதி காயல்பட்டினம். இன்னும் அதன் கிரணங்கள் குறையவில்லை என்பதற்கு சாலை பஷீரின் கட்டுரை ஒரு சரியான சாட்சி.
ஒரு ஆய்வாளர் என்ற வகையில் விருப்பு வெறுப்பு இன்றி, காய்த்தல் உவத்தல் இன்றி எழுதப்பட்ட இக்கட்டுரையில் இசைக் கருவி பற்றிய விவாதத்தை உள் நுழைத்து கட்டுரையின் கருவை சிதைக்கும் வகையில் சில விமர்சகர்கள் விமர்சனம் எழுதி உள்ளனர்.
இசைக் கருவி, நிழல் படம் (photo) போன்றவற்றை தடை செய்யும் ஹதீஸ்களின் உண்மை விவரங்களை விளங்காமலே பலர் அது பற்றி தவறாக விவாதிக்கின்றனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross