Re:... posted by V D SADAK THAMBY (Guangzhou, China)[12 January 2016] IP: 133.*.*.* Japan | Comment Reference Number: 42807
மாஷா அல்லாஹ். தற்போதையா சூழலில் அவசியமான ஒன்று. நான்கு தெரு முனைகளிலும் பொருத்தப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் அருகிலுள்ள புகாரி ஷரீபிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் அவசியம்.
இதே போன்று ஒவ்வொரு பள்ளிவாசல்களும் கண்காணிப்பு கேமரா பொருத்தி அவரவர் பகுதிகளை கண்கானித்தால் சமூக குற்றங்கள் / குற்றநடவடிக்கைகள் குறையலாம்.
எல்லாவற்றிற்கும் நாம் நகராட்சியை நம்பிக்கொண்டிருக்கமுடியாது. நகராட்சியும் கூட நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தலாம். புதியநகராட்சியில்தான் நாம் அதை எதிர்பார்க்கமுடியும்.
Re:... posted byV D SADAK THAMBY (Guangzhou, China)[02 January 2016] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 42718
போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ள பஸ் நிறுத்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது . அதனை ஒட்டினாற்போல மேற்க்கே உள்ள கட்டிடம் ( SBI-ATM முதல் SJM Medicals வரை எதிர்புறம் உள்ள கட்டிடம் ) சுமார் ஐந்து அடி முன்தள்ளி இருக்கிறது. அது ஏன் இன்னமும் இடிக்கப்படாமல் உள்ளது ? யார் காரணம் ? இதை தடுப்பது யார் ?
ஒருவேளை அது சரியான அளவில்தான் உள்ளது எனில் அருகிலுள்ள பஸ் நிறுத்த கட்டிடம் ஏன் இடிக்கப்படவேண்டும் ? இதில் உள்ள முரண்பாடு என்ன ? மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு சரியான வழிகாட்டுதல் கொடுக்கவேண்டும்.
அந்த இடம் மட்டும் குறுகலாக இருப்பது கண்கூடாக தெரிகிறது . ஒருவேளை அந்த கட்டிடம் முறையாக அமைந்திருப்பினும் தற்கால தேவையை கருத்தில் கொண்டு அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறை நிலஆர்ஜிதம் செய்து சாலையை விரிவுபடுத்திட வேண்டும்.
Re:... posted byV D SADAK THAMBY (China)[05 November 2015] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 42134
மழை நல்லா வெளுத்து வாங்கட்டும். பூமிக்கு அடியில் தண்ணீரே இல்லை .கொஞ்சம் மழை பெய்தாலும் சாலையில் தண்ணீர் நிர்ப்பதால் மக்கள் முனங்குவார்கள். ஆனால் நிலத்தடிநீர் நமக்கு தேவை .வருட சராசரி அளவைவிட அதிகம் மழைபொழிய வேண்டும் .
செய்தி: 10வது ஆண்டில் சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை நிகழ்ச்சி! பவித்ரா, நிவேதா ஆகியோர் பங்கேற்பு!! அடுத்த மாதம் நடைபெறுகிறது!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தலையும் இல்லை வாலும் இல்லை . posted by V D SADAK THAMBY (Guangzhou, China)[17 August 2015] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 41666
தலைப்பை பார்த்தபோது நிகழ்ச்சி நடந்துமுடிந்தது போல இருந்தது . உள்ளே படித்தால் செய்தியில் தலையும் இல்லை வாலும் இல்லை . நிகழ்ச்சி எங்கே எப்போது நடத்தப்படுகிறது என்ற விவரம் இல்லை .
[Administrator: மாநில முதல் மாணவர்கள் தங்கள் பங்கேற்பை உறுதி செய்துள்ளதற்கான செய்தி இது. நிகழ்ச்சி தேதி, இடம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என்ற வாசகம் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.]
Re:... posted byV D SADAK THAMBY (Guangzhou, China)[17 April 2015] IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 40185
======இந்த குழப்பத்தை சரி செய்யும் பொருட்டு நகரின் பல பொதுநல அமைப்புக்களின் எதாவது ஒரு அமைப்பு சாலை குறித்த தெளிவு பெறுவதற்காக நீதி மன்றத்தை அணுகுவதே. =================
பொது அமைப்புகள் பற்றி இப்போதுதான் சிலருக்கு ஞானோதயம் வந்திருக்கிறது . கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று தமிழில் சொல்வார்கள் .எல்லாம் காலம் கடந்த ஞானோதயம். அதிலும் பாருங்க எந்த பொதுநல அமைப்புன்னு சொல்றதுக்கு துணிவு வரவில்லை. பொது நல அமைப்புகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் நீதிமன்றத்தை அணுகுவார்கள். நீதி மன்றத்தைதான் நாடுவது என்று இருந்தால் அது நம் தலைவிதி. அதை யாரும் மாற்ற முடியாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross