Re:...தவறான கொள்கை posted byabdul wadood (jaipur)[03 July 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 44195
அஸ்ஸலாமு அலைக்கும் சங்கம தினத்தன்று புறக்கண்களுக்கு உலகில் எங்கும் தென்படாது என்றும் இந்த ரமலான் மாதம் சொன்னார்கள் ஆனால் அன்று தென்பட்டு அதன் அடிப்படையில் சவூதி மற்றும் உலகின் பல நாடுகள் நோன்பை ஆரம்பித்தார்கள் .இவர்களின் கொள்கை கருத்து மிக்கது தவறானது என அல்லாஹ்வின் அத்தாட்சி கட்டி கொடுத்து விட்டது இங்கு தகவல் அளித்தவர் எப்போவாவது ரேராக தெரிய வாய்ப்புள்ளது என்றும் பேசியுள்ளார்.
அதுவும் நபி ஸல் அவர்கள் வாழ்ந்த காலத்திலும் அதற்கு பிறகு வந்த நபித்தோழர்கள் காலத்திலும் மற்றும் இமாம்களின் காலத்திலிருந்து இன்றய தேதி வரை முற்கூட்டியே இன்று நோன்பு பெருநாள் என்று அறிவித்த சரித்திர ஆதாரம் ஒன்று கூட இல்லை.இவர்கள் நோன்பு அன்று பெருநாள் கொண்டாட கூறுகிறார்கள் அதனால் நபி ஸல் அவர்கள் வழியில் பிறை பார்த்து முடிவு செய்வோம் முற்கூட்டியே அறிவிப்பவர்கள் ஷியாக்கள் மற்றும் போராக்கள் என்பது உலக அறிந்த விஷயம் அதனால் மக்களே ஏமாந்து விடாதீர்கள் பிறை பார்த்து என்று பெருநாளோ அன்று நபி ஸல் வழியில் நாம் கொண்டாடுவோம் ரமலான் இறுதி நாளில் ரமலான் மாதத்தில் நோன்பாகவே இருப்போம் நோன்பில் பகலில் சாப்பிடுவது இறை மறுப்பாகும் ரமலானில் ஒரு நோன்பு விடுபட்டால் தக்க காரணமின்றி காலம் முழுவதும் நோன்பு வைத்தாலும் நிகராகாது என்பது நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லாஹ் மிக்க அறிந்தவன்
Re:... posted byabdul wadood (kayal patnam)[27 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43962
சுபைதா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் : 479 மதிப்பெண் பெற்று மூன்றாவதாக -வந்த மாணவி : ஏ.எம். சித்தி ஹாலிதா எனது மச்சான் அப்துல்லாஹ் மக்கி ஆலிம் காஷிபி அவர்களின் மகளாகும்
இதுவும் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த மகிழ்ச்சி யாகும் அல்லாஹு தா ஆலா மென்மேலும் இவருடைய கல்வியை மென்மேலும் அதிகப்படுத்தி இரு உலகிலும் சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன்
வாழ்த்துக்கள் posted byabdul wadood (kayal patnam)[26 May 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43953
அஸ்ஸலாமு அலைக்கும் என் அன்பிற் குரிய தம்பி மகள் A S சித்தி ஹாலிதா சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் : முதல் மதிப்பெண்: - 488 பெற்றது
அவ்வாறே எனது அன்பு இளைய மகன் அஹ்மத் முனீப் 427 மார்க்கு பெற்றுள்ளான் எனக்கும் எங்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி
இந்த இருவரும் ஹாபிளுள் குரான் சென்ற வருடம் தான் முடித்தார்கள் இவ்வளவு மார்க்குகள் எடுத்தது திருமறை குரானின் பரகத்தும் சிறப்புமே காரணம் அல்லாஹு த ஆலா இவர்கள் இருவருக்கும் இவர்களைப் போன்ற ஹாபிழ்கள் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் நல்லவிதம் மதிப் பெண்கள் எடுத்த அனைவருக்கும் மற்ற மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்
எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் மென்மேலும் இவர்களின் அறிவை அதிகப் படுத்தி தீன் துன்யா ஆகிரத்திக்கும் பெற்றோர் உற்றார் உறவினர் ஊர் மக்கள் சமுதாய திற்கும் உதவியான நன் மக்களாகும் மறுமை பரிட்சையிலும் இறைவனிடம் நல்ல மதிப் பெண்கள் பெற்று நல்ல அடியார்களாகவும் சொர்க்க வாசிகளாகவும் ஆக்கி வைப்பனாகவும் ஆமீன்
Re:...இன்னலில்லாஹ் posted byabdul wadood (jaipur)[24 December 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 42550
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்
اللهم اغفر لها وارحمها وعافها واعق عنها واكرم نزلها ووسع مدخلها وادخله الحيه واعذها من عذاب القبر
Re:... posted byabdul wadood (jaipur)[23 September 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41879
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பானவர்களே நம் கண்மணி நபி ஸல் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை அவர்கள் கூறியது நிச்சயமாக நடந்தே தீரும் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்கள் நாம் கண்கூடாக பார்த்தே வருகிறோம்
குறிப்பாக لا تقدموارمصان يوما ولا يومين
ரமலான் மாதம் ஆரம்பிக்கும் முன்பாக ஒரு நாளோ இரண்டு நாளோ முந்தாதீர்கள் பிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள் மாதத்தை ஆரம்பியுங்கள் என்று நவின்றார்கள் அந்த நபி மொழி தற்காலத்தில் உண்மைப் படுத்தப்பட்டுள்ளது நாம் இஸ்லாமிய மார்க்கம் மிக்க இலகுவானது
பிறையை பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள் மறு பிறைப் பார்க்காது நோன்பை விடாதீர்கள்
பிறை மக்களுக்கு நாள்காட்டி இன்னும் குறிப்பாக ஹஜ்
அமலுக்கும் நாள் காட்டும் எனபது இறை வசனம்
Re:... posted byabdul wadood (jaipur)[18 April 2015] IP: 59.*.*.* India | Comment Reference Number: 40204
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, அன்னாரின் மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக. ஆமீன்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்
وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واعذه من عذاب القبر وعذاب في النار اللهم اغفرله وارحمه
எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மன வலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...
செய்தி: ரமழான் 1435: பிறை தென்பட்ட தகவல்கள் கிடைக்காததால், இன்று நோன்பு இல்லை! மஹ்ழரா, ஜாவியா உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு!! (இறுதிச் செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பிறை சம்பந்தமாக posted byabdul wadood (jaipur)[30 June 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 35697
அன்பானவர்களே பிறை சம்பந்தமாக ஒரு விஷயம் நாம் நன்கு புரிந்து கொள்வது மிக்க அவசியம் .நபி (ஸல்)அவர்கள் மாதத்தின் நாட்கள் 29 எனபது உறுதி 30 தா அல்லது அடுத்த புதிய மாதத்தின் தலைப் பிறையா என்பதை மட்டும் முடிவு செய்ய ஒரே ஒரு இலகுவான எல்லோராலும் சாதரணமாக புரிய அறிந்து செயல்பட தக்க வழிமுறையை நபி (ஸல்)அவர்கள் நமக்கு செயல் படுத்தி கட்டி தந்துள்ளார்கள். அதுவே 29 நாளின் பின்னேரம் 30 ததாவது இரவு சூரியன் மறைந்த பிறகு அதி காலையில் கிழக்கில் உதயமாகி மேற்கில் மறையப் போகும் உர்ஜுனல் கதிம் சந்திரன் நம் புறக் கண்ணுக்கு தென்பட்டால் புதிய மாதம் தொடங்கி விட்டது அப்படி தெரியாது மேகம் மறைத்தால் நடைபெறும் மாதத்தின் இறுதி நாள் பிறை 30 அடுத்த நாள் புதிய மாதம் தொடங்கி விடும் என்பதே.
இதனடிப்படையில் நாம் செயல் பட்டாலே நம் சமுதாயத்தில் இந்த தேவை இல்லாத சர்ச்சை பிரச்சனை ஏற்படாது .நபி (ஸல்)அவர்கள் மேகம் மறைத்தால் என்று கூறியுள்ளதை நாம் சற்று ஆழ்ந்து கவனிக்க கடமை பட்டுள்ளோம் இருக்கின்ற பொருளைத்தான் திரையிட்டு மறைக்க முடியும் அதனால் சம்சுதீன் காசிமி அபுல் ஹசன் அதிகாரி பார்த்ததெல்லாம் மேகத்திற்கு மேல் அதாவது மேகத்தின் திரைக்கு உள்ள பிறையை (அரபியில் வுஜூதுல் ஹிலால்)அவர்கள் பார்த்தது. மேகத்தின் திரை இன்றி தென்பட்டாலே நாம் எடுத்து செயல் படவேண்டும் என்பதுவே நபி (ஸல்)அவர்களின் கட்டளை.
விண்ணில் சந்திரன் எக்காலமும் இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம்.அதனால் இவர்களின் பார்வை ஹதீத் அடிப்படையில் இல்லை அதனால் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
அடுத்து எல்லை பிரச்சனை மலே கவுன் ஸ்ரீ லங்கா எந்த அளவு பிறை விஷயத்தில் தகவலை எடுக்க வேண்டும் என்ற அளவு கோளை நபி (ஸல்)அவர்கள் கூறியதாக எந்த ஒரு ஹதீதும் வரவில்லை என்பதே நான் அறிந்த வரை உண்மை. அளவுகோலை முடிவு செய்வது மார்க்க அறிஞ்சர்கள் உலமாக்கள்தான். கூடி ஆலோசித்து முடிவு செய்த பின் மற்றவர்கள் மாற்றுக் கருத்து கூறி சர்ச்சை செய்வது நல்ல வழி முறை அல்ல.
நபி (ஸல்)அவர்கள் எல்கையை நிர்ணயிக்க வில்லை எப்படி பிரயாணம் எவ்வளவு தூரம் சென்றால் ஜம்மு கஸ்ரு தொழவேண்டும் என்ற பிரயாண தூர அளவுகோலை நிர்ணயிக்கவில்லை என்பதே நான் அறிந்தது.
உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பு இன்னும் பெருநாள் அனுசரிக்க நபி (ஸல்)அவர்கள் எங்கும் எப்பொழுதும் நான் அறிந்த வரை கூறவே இல்லை.மாறாக நபி (ஸல்)அவர்களின் காலத்தில் மக்காவில் ஒரு நாளும் மதீனாவில் மறு நாளும் அனுசரித்தார்கள் என்ற செய்தியை அல்லமா இப்னு கதீர் (ரஹ்)அவர்கள் தங்களின் பிரசித்திப் பெற்ற ஆதாரமான சரித்தர வரலாறு நூலான அல் பிதாய வன் நிஹாய வில் பதிந்துள்ளர்கள் ஆகவே உலகம் முழுவதும் ஒரே நாளில் நோன்பு இன்னும் பெரு நாள் வரவேண்டும் எனபது நமது ஷரிஆத் தும் கூறவில்லை இந்த நவீன விண்ணியல் அறிவியல் பிரகாரம் கூட சாத்தியமில்லை என்பதே என் தாழ்ந்த கருத்து .
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே அளவில் சந்திரன் நம் புறக்கண்ணுக்கு தென்படுவதில்லையே என்பதும் என் தாழ்ந்த அறிவிற்கு தெரிந்தது.
அதைவிட முதலில் சர்வதேச பிறை கொள்கை பிறகு சவுதி பிறை என்று எந்த வித குர் ஆன் ஹதீதின் சிறு ஆதாரமுமின்றி குர் ஆன் ஹதீதை மட்டுமே பின்பற்றுவோம் என்று கூறி வரும் ஒரு கூட்டமும் உள்ளதே அதைப் பற்றி யாரும் என் கேள்வி கேட்பதில்லை.
இன்னும் விளக்கம் அறிய விரும்பு வர்கள் எனது மெயில் id wadoodabdul62@gmail.com ல் தொடர்பு கொள்ளலாம்
Re:...நல்ல இந்த காலத்திற்கு தேவையான முயற்சி posted byabdul wadood (jaipur)[19 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32099
அஸ்ஸலாமு அலைக்கும் நம் காயல் பதியின் வரலாறை அறிய நாள் ஒரு அறிய வாய்ப்பு. மிகப் பழமையான மக்தூம் பள்ளியின் கல்வெட்டுகளைப் பற்றியும் எழுதவும்.
குறிப்பாக இந்த விசஹ்யத்தில் ஏற்கனவே முயற்சி எடுத்து அதை பதிந்து வைத்துள்ளவர்கள் நான்அறிந்தவரை நம் ஊரில் இருவர். ஓன்று
L S இபுராஹிம் ஹாஜி மற்றவர் R S அப்துல் லதீப் ஹாஜி.
இந்த இருவர்களிடம் நிறைய பதிவின் விபரங்கள் இருக்கின்றது. அதையும் கேட்டு அறிந்து இங்கு பதிவு செய்தால் இன்னும் நிறைய விஷயங்கள் அறிய முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross