வரவேற்கப்படப் வேண்டிய செயலாகும் இது. சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அத்துடன் இன்னொரு செயலையும் கவனத்தில் கொண்டு செய்தால் இதைவிட அதிக வாழ்த்துக்கும் நன்றிக்கும் உரித்தாகுவார்கள் .. அதாவது தாமிரவருனியின் தண்ணீர் ஆத்தூர் வழியாக இறுதியில் கடலில்தான் கலந்து விடுகின்றது. இதனை தடுத்து தேக்கிடும் வகையில் ஒரு அணைக்கட்டை ஏற்படுத்தினால் - இப்பகுதியில் குடிநீர் பஞ்சத்தை போக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாமே
.. அதற்கான அதிகார வர்க்கம் இதுபற்றி சிந்தித்தால் இன்னும் மக்களின் நெஞ்சப் பாசத்திற்கு உரித்தாகுவார்கள். - என்டி.
அஸ்ஸலாமு அலைக்கும். மர்ஹூமா ஆயிஷா பீவி அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களை மறுமையில் நபிமார்கள் முத்தகீன்கள் ஸாலிஹீன்களுடன் அல்லாஹ் ஒன்றிணைத்து வைப்பானாக. அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை - சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன். – என்டி.
மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் மற்றும் தங்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன். – என்டி.
செய்தி: காயல்பட்டினம் பைத்துல்மால் வாராந்திர கூட்டம்: கடனுதவியாக ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம்; ஜகாத் நிதியுதவியாக ரூ. 17 ஆயிரத்து 500 தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இரக்க சிந்தனை கொண்ட நல்லதோர் பணி. இதற்கான நன்மையை நிச்சயம் அல்லாஹ் மறுமையில் வழங்கிடுவான். ”சதகதுன் ஜாரிய்யா” எனும் நீடூழிகால நன்மையை நிலையாக பெற்றுத் தரக்கூடிய பணி இது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. வாழ்த்துக்கள். – என்டி
செய்தி: காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.புகாரீயின் தந்தை காலமானார்! ஆக. 26 செவ்வாய் காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன்.
நண்பர் லரீஃப் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்க்கும் அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருவானாக. மேலும் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து அவர்களின் மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் சுவனபதியின் சுந்தர வாழ்வாக்கி தருவானாக. எல்லாவற்றிற்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
சிறப்புக் கட்டுரைகள்:கூடங்குளம் – அணு எதிர்ப்புப் போராட்டம் தொடரக் காரணம் அந்நியச் சதியா? அரசின் மௌனமா? [ஆக்கம் - காயல் மகபூப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கூடங்குளம் – அணு எதிர்ப்... posted byMohamed Ismail Buhari N.T. (Chennai)[07 March 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20974
சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நம்நாட்டில் பஞ்சமில்லை. கொலை கொள்ளை பெருகினால் அரசை குறை சொல்லுவோம். அந்த கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு அதே அரசு அழித்தொழித்தால் அவர்தம் சாவில் சந்தேகம் உள்ளது. சி.பி.ஐ.விசாரணை தேவை என்போம். இதுதான் நம்நாடு.
கூடங்குளம் விசயத்தில் சாதாரண மக்கள் விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை வைத்து அமைதியாகத்தான் இருந்தனர். அவர்களை விஷமிகள் உசுப்பிவிட்டு குளிர்காய்கின்றனர். அவ்வளவுதான்.
திரு.அப்துல் கலாம் அணு விஞ்ஞானி இல்லையென்றால் அன்றைய மத்திய அரசு பொக்ரான் அணு ஆயுத சோதனை குழுவில் அவரை சேர்த்திருக்குமா? அவர்தான் அதனை தலைமை தாங்கி வெற்றிகரமாய் முடித்திருப்பாரா?
சிறப்புக் கட்டுரைகள்:கூடங்குளம் – அணு எதிர்ப்புப் போராட்டம் தொடரக் காரணம் அந்நியச் சதியா? அரசின் மௌனமா? [ஆக்கம் - காயல் மகபூப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கூடங்குளம் – அணு எதிர்ப்... posted byMohammed Ismail Buhari N.T. (Chennai)[06 March 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20972
சகோதரர் ஷமீமின் கருத்துப்படி காலத்தின் அவசியம் உணர்ந்து உயரிய கருத்துகளை மகபூபு அவர்கள் கட்டுரையில் தந்துள்ளார். அருமையான தகவல் தொகுப்பாகும். கூடங்குளம் அணுமின் ஆலையை பற்றி இதற்குமேல் விளக்கம் தேவை இல்லை.
மனிதசக்திக்கு அப்பாற்பட்டு ஏதும் நடந்தால் அதற்க்குபெயர்தான் விதி என்பதாகும். நாம் விதியை நம்புகிறவர்கள். விவாதத்திற்காக அரசின் தவறு என்று வைத்துக்கொண்டாலும் ஆரம்ப காலகட்டத்தில் இன்றைய எதிர்ப்பாளர்கள் எங்கே போயிருந்தார்கள்? போதிமரத்து ஞானம் திடீரென உருவாக காரணம் என்ன? (எல்லாம் மின்னல் ஹபீப்தான் காரணம் எனபது ரகசியம் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது) அரசாங்கம் திடீரென எடுத்த முடிவல்ல. நீண்ட காலமாக சிந்தித்து தீட்டிய திட்டங்களின் முடிவே அணுமின் திட்டம் என்பதை உணரவேண்டும்.
சர்வதேச சட்டாம்பிள்ளை அமெரிக்கா சாட்டிலைட் மூலம் உலகின் மூலைமுடுக்கெல்லாம் கண்காணிக்கும் வேளையிலும் அணுசோதனை நடத்தி பொக்ரானில் வெற்றிகண்ட அப்துல் கலாமைவிடவா இந்த எதிர்ப்பாளர்கள் அணுவிசயத்தில் அவ்வளவு பெரிய ஆட்கள்?
இறைவன் தந்த இந்த செல்வத்தை பயன்படுத்தி ஓரளவாவது நிம்மதி பெறுவோம். மின்தடையால் தினந்தோறும் பல்லாயிரங்கோடி நஷ்டமாகுவதை தவிர்ப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross