NE posted byZainul Abdeen (Dubai)[10 August 2016] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44412
மாஷா அல்லாஹ் !! இது போன்ற சில நல்ல விஷயங்கள் நம்மத்தூரில் ஆங்கங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் .
நமதூரை சார்ந்த தனவந்தர்கள், தன்னார்வலர்கள் இதை முன்னின்று செய்துகொண்டு இருக்கிறார்கள் .
ஆனால் எதையும் விமர்சனம் செய்யும் ஒரு கூட்டம் இதையும் "whatsup " குழுமத்தில் விமர்சனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
ஏன் நகர்மன்ற தலைவியை இதற்க்கு அழைக்கவில்லை,
காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜன் மட்டும்தான் அழைத்திருக்கிறார்கள் , ஏன் என்றால் எதிரிக்கு எதிரி நண்பனாம் அந்த பழமொழி வேற.
காந்திராஜன் அவர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர் என்ற முறையில் வந்திருக்கிறார் இங்கே. இது அவர்களின் அறிவீனம் என்றுதான் நினைக்க தோணுது.
செய்தி: காயல்பட்டினத்தை அரசுப் பேருந்துகள் புறக்கணிப்பதைக் கண்டித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் திருச்செந்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சமூக ஊடகக் குழுமம் posted byZainul abdeen (Dubai)[04 August 2016] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44373
திருச்செந்தூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்- “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில்.....
இது தான் இப்போதைக்கு தலைப்பு செய்தியாக இருக்கின்றது நமதூர் இணையதளங்களிலும் மற்றும் நமதூர் வாசிகளின் முகப்புத்தகத்திலும்....
பேரணி, ஆர்ப்பாட்டம் என்று அடுக்கடுக்கா ஆக்கபூர்வமான செயல் பாடுகள். இதில் வியக்க தக்க விஷயம் என்னவென்றால் இது வெறும் சமூக ஊடகக் குழுமம் மூலம் செயற்படுத்தப்படும் ஒரு இயக்கமே அன்றி வேறில்லை (நான் அறிந்தவரை ).
இதெற்கு என்று தலைவரோ செயலாளரரோ, பொருளாளரோ இல்லை. ஒட்டுமொத்தமாக குழுவினர்களே இருக்கின்றார்கள்.
எது எப்படியோ ஊருக்கு நன்மை நடக்கின்றது . வாழ்த்துவோம் வளரட்டும்.
செய்தி: உரிமம் பெறாத இளைஞர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதைக் கண்டித்தும், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமலிருக்க வலியுறுத்தியும் – “நடப்பது என்ன?” குழும ஏற்பாட்டில் காயல்பட்டினத்தில் பள்ளி மாணவர்கள் பேரணி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
N E ??? posted byZainul Abdeen (Dubai)[02 August 2016] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44365
நடப்பது என்ன ? குழுமம் , ஏற்படுத்திய விழிப்புணர்வு காயல் நகர் மக்களுக்கு பெரிதும் பயனளிக்க கூடியது என்பது மாற்றுக்கருத்து இல்லை.
அதே நேரத்தில் பேரணியோடு நின்று விடாமல் உரிமம் பெறாத இளைஞர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதையம், , போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கும் வன்னம் முயற்சிகளை எடுக்க வேண்டும். நகர் மன்றம் மூலம் இதெற்கு தீர்வு காண வழிஉண்டுஎனில் கட்டாயம் நிலை நிறுத்த வேண்டும்.
காவல் நிலையம் இல்லை என்று நாம் பெருமை பேசி கொண்டு இருக்கிறோம் ஆனால் இதே போன்ற தப்புகளை தட்டி கேட்க தனி மனிதனுக்கு எண்டதை சட்டமும் இல்லை என்பதை யாரும் அறிவோம். குறைந்த பட்சம் வாகனம், மற்றும் பேருந்து போலீஸ் நமது ஊரில் வலம் வரவைத்தால் உரிமம் பெறாத இளைஞர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓடுவதை ஓரளவு தடுக்க முடியும் என்பது என் கருத்து.
ஆனால் இது எங்களை போன்று அவ்வப்போது வாகனம் ஓட்டுபவர்களுக்கு இடஞ்சல்தான். .....
அது சரி, இது போன்ற பொது பிரச்சனைகளில் ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டும்தானே காண முடிகிறது ஏனோ?????????
Re:... posted byPirabu Zainul Abdeen (Abu Dhabi)[10 December 2015] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42391
இந்த பதிவு எழுத்தாளர் அவர்களுடைய ஆதங்கத்தை மட்டுமில்லாது அவர்களை போன்று சமுதாய எண்ணம் கொண்டவர்களின் நல்லெண்ணத்தையும் பிரதிபலித்தது.
பின்வரும் வாக்கியம் தான் சிறப்பம்சமாக இருந்தது
"மானத்தையும், மரியாதையையும் விரும்புகின்ற பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை தனியாக அனுப்ப மாட்டார்கள் – அப்படி தனியாக அனுப்பினால் அவர்களுக்கு மானம் மரியாதை அவசியம் இல்லை! என்றே பொருள்படும்."
கலாச்சார சீரழிவு என்று பார்த்தல் அதற்க்கு பற்பல காரணங்களை சொல்லிகொண்டே போகலாம். அதில் முக்கியம்
வரம்பு மீறிய தொடர்பாடல் சாதனங்கள். (மொபைல் போன்)
எந்தவொரு பொருளும் அதன் அத்தியாவசியத் தேவையினை மிஞ்சுகின்றபோது அதன் மூலம் கிடைக்கின்ற பிரதிபலன்களும் மோசமானவையாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே தமது பிள்ளைகளுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க நினைகின்ற பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதன் மூலம் கிடைக்கின்ற பிரதிபலன்கள், தேவைப்பாடுக்ள போன்றவை எவை? என்பதைக் கருத்திற் கொண்டு அவற்றை அதிகமாகத் தவிர்ப்பது காலத்தின் தேவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இரண்டாவது பங்கு அந்நியரைக் கவரும் ஆடை அலங்காரங்கள்.
இஸ்லாம் பெண்களின் பாதுகாப்புக் கருதி கட்டளையிடப்பட்ட ஹிஜாப் ஆடை, பெண்ணின் கண்ணியத்தை, மானத்தைப் பாதுகாக்கின்ற இவ்வாடையே இப்போது உடல் அவயவங்களை அப்பட்டமாக அளவிட்டுக் காட்டக்கூடிய இறுக்கமான, நவீன வடிவங்களிலான, கவர்ச்சியான முறையில் அணியப்படுகின்ற பரிதாபகரமான காட்சிகளையும் நாம் காண்கிறோம்.
இன்னும் தொலைக்காட்சி, சினிமா என்று பட்டியல் நீடு கொண்டே இருக்கு,
நமதூரில் இடம்பெறுகின்ற கலாச்சார சீரழிவுகளை நாம் ஓர் பாடமாக கொண்டு ஏனையோருக்குப் பிரச்சாரம் செய்கின்றபோது ஊரின் மானம் போகிறது எனக்கூறி ஒப்பாரி வைக்கின்ற நமதூரின் தலைமைத்துவங்கள் அந்த மானத்தை காப்பாற்றுவதற்கு முன்வந்து தீர்வுகளை முன்வைத்து தாங்களும் செயற்பட்டு ஊரையும் செயல் படுத்த எடுத்த முயற்சிகள் என்ன ?
முஸ்லிம் சமூகத்தின் தலைமை நிறுவனங்கள், உலமாக்கள், குறிப்பாக ஊடகங்கள் என்பன ஓர் கூட்டாக இணைந்து முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் ஆட்கொண்டுள்ள இந்த அருவருப்பான நோயிலிருந்து விடுதலை அளிப்பதற்கு துணிந்து முன்வரவேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் உதவியோடும் நமது முயற்சிகளோடும் எதிர்வரும் சந்ததியினருக்கேனும் ஓர் கௌரவமிக்க வாழ்வாதார சூழலை நம்மால் கட்டி எழுப்பமுடியும் இன்ஷா அல்லாஹ். எதிர்பார்பவனாக ....
அம்மா போட்ட பிச்சை posted byZainul abdeen (Dubai)[05 August 2015] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41552
தமிழ் நாட்டில் மாணவர்கள் laptop உபயோக்கிறார்கள் என்றால் அது அம்மா போட்ட பிச்சை தானாம். இது நம்ம நாஞ்சில் சம்பத் அருள் வாய் மொழிந்தது.
நம்ம ஊரு பிள்ளைகள் மிதி வண்டி ஒற்றார்கள் என்றால் அதுவும் அம்மா போட்ட பிச்சை தான் என்பார்கள்.
இந்த இழி சொல்லுக்கு தயார் என்றால் இதை வாங்கி உபயோகிக்கலாம். அனால் ஒன்று மட்டும் உண்மை இந்த இலவசங்கள் தேவை உள்ளவர்களுக்கு வந்தடையுதோ இல்லையோ அரசியல் பின்பலம் உள்ளவைகள் வீட்டில் ஜொலிக்கும்.
Re:... posted byP.N.N. Zainul abdeen (Dubai)[22 September 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37422
வெற்றி பெற்ற அஷ்ரப் காகா அவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக நின்ற கோமான் ஜமாஅத் மற்றும் அருணாசலபுரம் & கடையக்குடி மக்களுக்கும் வாழ்த்துக்களை சமர்பிக்கின்றேன்
அதே நேரத்தில் வெற்றி வாய்பை தவற விட்ட அமலகனி அம்மா அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆபிதா அம்மா அவர்கள் அமலகனிக்கு ஆதரவு திரட்டாமல் இருந்தால் இவர்கள் இப்போதைக்கு பெற்ற வாக்குகளை விட அதிகம் பெற்று இருப்பார்கள் என்று நினைக்க தோணுகின்றது.
இனியாவது இந்த தலைவி பிறரிடமும் , ஊர் பெரியார்களையும், சமுதாயத்தின் பெரியவர்களையும், மதித்து கலந்து பேசி எந்த முடிவையும் ஊருக்கும், சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும் வண்ணம் எடுக்க வேண்டி கொள்கிறேன்.
Re:... posted byP.N.N. Zainul abdeen (Dubai)[22 September 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37409
உள்ளாட்சி இடைத் தேர்தலில் எங்கு பார்த்தாலும் அதிமுக வெற்றி என்று செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனம் நகராட்சியின் முதல் வார்டில் நடந்த தேர்தலில் அதிமுக தோல்வியுற்றுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அந்தோணி கிரேசி, 1,16,693 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். 84885 வாக்கு வித்தியாசத்தில் அந்தோணி கிரேஸி வெற்றி பெற்றார். இதேபோல பிற பகுதிகளிலும் கூட பெரும்பாலும் அதிமுகதான் முன்னணியில் உள்ளது. இதனால் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டனத்தில் நடந்த நகராட்சி 1வது வார்டு தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்துள்ளது. இந்த வார்டில் மொத்தம் ஆயிரத்து 490 ஓட்டுக்கள் பதிவானது. இதில் சுயேச்சை வேட்பாளர் அஷ்ரத் என்பவர் ஆயிரத்து 24 ஓட்டுக்கள் பெற்றார். அ.தி.மு.க,. வேட்பாளர் அமலக்கனி வெறும் 466 ஓட்டுக்களேப் பெற்றார். 554 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோற்றதால் அதிமுக புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
Re:... posted byPirabu Zainul abdeen (Dubai)[16 September 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37272
அதென்ன கோமான் ஜமாஅத் பெயரில் கடிதம். ஏன் அந்த நிர்வாகிகளுக்கு ஊரின் நிலை பற்றி தெரியாத ??? அவங்களுடைய கருத்தை சுயமாக சிந்திக்க தெரியாத ???அவங்களுக்கு யாரோதான் எழுதி கொடுக்கனுமா ?? என்ன நினைத்து கொண்டு இருக்ரீர்கள்.
இதெற்கு ஆதரவாகவும் பல அபிமானிகள். காயல்பட்டணம் .com நல்ல ஒரு நீதமான ஊடகமாகத்தான் இருகின்றது யாரு மேல் வெறுப்போ தெரிய வில்லை சில நேரம் இது போன்று வஞ்சகத்தை கக்கிவிடுகின்றது.
இப்போதுள்ள இடை தேர்தலில் மட்டும் ஜமாஅத் ஓற்றுமையை எதிர்பார்கிறேன், நிறைவேறாத ஆசை என்றாம் என்றெல்லாம் போலம்பும் சில் ஆசாமிகள் கடந்த தேர்தலில் தைகள் எடுத்த நிலைபாட்டை சற்று சிந்திக்க நேரம் இது.
என்னுடைய இந்த கருத்தை நீங்கள் பதியாவிட்டால் தயவு செய்து இந்த வலைத்தளத்தில் அபிமானிகளின் கருத்தை மட்டும் வெளியிடுவோம் என்று செய்தியிட்டு அவர்களின் பெயர்களையும் தெரிவிக்கவும். நாங்கள் எங்கள் கருத்தை தெரிவிக்க மாற்று வழியை பார்த்துகொள்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross