1. மதில் மேல் பூனை! posted bykavimagan.m.s.abdulkader (qatar)[26 April 2013] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 27077
திருட்டுப் பூனை!
ஒளிந்திருந்து சில்மிஷம்
செய்வதாக நீ நினைக்கலாம்..
உன்முகம் ஊருக்குத் தெரிவது
உனக்குத் தெரியாது.......
மமதை ஏன்?
மதில் மீதுதானே இருக்கிறாய் ...
எட்டாத் தொலைவில் இருப்பவைகளே
அவ்வப்போது பூமியில்
எரிகற்களாக நொறுங்கி விழும் போது
எம்மாத்திரம் நீ?
துண்டு கருவாடுக்காக
கடலை சுடுகாடாடாக்கும்
கனவு பலிக்குமா?
இங்கே எதுவும் நிதர்சனம் இல்லை...
இறைவன் நாடினால்
எலிப்பொறிக்குள் பூனைகள்
எக்குத்தப்பாய் சிக்கிவிடும்....
அந்த நாள் வரும்....அதுவரையில்
மியாவ் மியாவ் பூனைக்குட்டி.
3. புண்ணிய பார்வையை பெற விரும்பும்....... posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[26 April 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27079
பதுங்கி இருந்து பாருலகை பார்வையால் பதம் பார்க்கும் பூனைக்காரா-உன்
கண்ணுக்கு கெட்டிய கூட்டத்தில் காண்பவர்களிலுள்ள
கண்ணியமானவர்கள் யார்? கயமை வலை விரிப்பவர்கள் யார்?
இருட்டில் இவ்வூரை இரு கூறக சதிசெய்யும் சதிகாரர்கள் யார்?
எத் தீய சக்தியையும் இறைவன் உதவியால் உருத்தெரியாமல்
தகர்த்தெறிய துணிந்த தீரத் தாரகை யார்?
இவர்களையெல்லாம் இனம் கண்டு அறிவிக்கவா
இமய உயர சுவரில் எவருமறியா பார்வை பட்டியலைத்
தயாரிக்கிறாய் திருட்டுப்பூனைகாரா?உன் புண்ணியப்பட்டியலை
பாமரர்களாகிய எங்களுக்குடனேயே படைத்திடுவாயக!
4. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[27 April 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27089
தலைப்பை மாற்ற வேண்டும்.. காவல்காரனா..!! இவனா(ளா)..!
இந்த பூனைகள் பண்ணும் அநியாயம் கொஞ்சமா..?
* வீடுகளில் கோழி வளர்க்க முடிவதில்லை, ஏன் வாங்கிட்டு வந்த கோழியை தோட்டத்தில் விட்டுவிட்டு, அறுப்பதற்கு கத்தியை எடுத்து வருவதற்குள் அதை அடித்து தூக்கிக்கொண்டு சென்று விடுகிறது.
* கழுவி வைத்த மீனை சற்று திரும்புவதற்குள், சமையல் கட்டுக்கே வந்து ஆட்டையை போட்டுவிடுகிறது, அதுவும் சாளை மீனை விட்டுவிட்டு, சபருக்கு வந்துள்ள மருமகனுக்கு வாங்கி வைத்த துண்டு மீனை பார்த்து தூக்கி விடும்.
* ஆசையாக வளர்த்த முயலை கொன்று இரத்தம் குடிக்கும் கொடூரன், தன்னை விட மூன்று மடங்கு பருத்த முயலை அடித்து தோட்டத்து சுவர் மேல் எப்படி தான் தூக்கி சென்றதோ..அவ்வளவு பலசாலி.
* இரவிலோ தூங்க விடாமல் காம சப்தங்களும், குழந்தைகள் அழும் சப்தங்களும்.. பெரும் தொல்லை.
இவர்களை கட்டுப்படுத்தவோ, விரட்டவோ மிகவும் சிரமம். இதன் தொல்லைகள் அதிகம் சென்றதால் ஒரு விரக்த்தியில் இருந்தோம்.
ஒரு நாள் வந்தது, தோட்டத்தில் உள்ள அறையில் வசமாக மாட்டியது. ஆயுதங்களை எடுத்து ஆயத்தமானோம். இன்றுடன் தொல்லைகள் விட்டது. பலரும் பல ஆலோசனைகள் சொன்னார்கள், கூடுதலாக... அடைத்த அறையில் அதற்க்கு கூடுதல் புலி பலம் உண்டாம்.!
கதவை திறக்க எத்தனிக்கையில், ஒரு அம்மணியின் குரல்..
" பூனையை அடிக்காதீங்கப்பா..! யார் அடிக்கின்றார்களோ அவர்களுக்கு குழந்தை ஊமையாக பிறக்குமாம்.."
போட்டாங்கப்பா ஒரு பயத்துடன் கூடிய செண்டிமெண்ட். அப்புறம் என்ன.. யார் துணிச்சலுடன் அடிக்க...!?
திறந்து விட்டுவிட்டோம்.
ஒன்றும் அறியாதது போல, ஒரு பரபரப்பே இல்லாமால், சர்வ சாதாரணமாக வெளியில் மெதுவாக சென்றது,.
தூரத்தில் சென்றதும், எங்களை பார்த்து ஒரு நக்கல் பார்வை பார்த்தது.. அதில் " நாங்க அப்பவே.. அப்படி.." என்று சொன்னது புரிந்தது.
6. நாம் புரிந்துகொண்டால் சரி.....!!! posted bys.s.md meerasahib (TVM)[27 April 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 27093
பூனையாரே.......
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்" அது உம் முகத்திலும் தெரிகிறது. என்ன தெரியுமா?...... நான் சொல்லட்டா?
நம்ம ஊரு காவல் காரன். நான் இல்லையா........... நீதான் என்று சொல்வது புரிகிறது.
7. இது எந்தக் காலத்து பூனை ? posted byM.S.Kaja Mahlari (Singapore)[28 April 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27095
பூனை ! ஆம் ! ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலி ) அவர்களின் பெட்அனிமல். எப்போதும் தங்களின் சட்டை ஜெப் பையில் சிறிய பூனைக் குட்டியை வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள் . மிகவும் ஆவலுடன் பூனை குட்டியை அன்புடன் வளர்த்து வந்ததை அவதானித்த அண்ணல் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் அவர்களைப் பார்த்து " யா அபா ஹுரைரா ! சிறிய பூனைக் குட்டியின் தந்தையே ! என அன்புடன் செல்லமாக அழைக்க " அதுவே அவர்களின் நிக் நேமாக (பட்டப்பெயராக ) மாறி விட்டது . இவர்களின் இயற் பெயர் "அப்துர்ரஹ்மான் " என்பதே !
அது சரி ! பூனைகள் வீட்டில் வளர்ந்தாலும் " 1, 2, டாய்லேட் வெளியில் சென்றே நிறைவேட்டும் என கேள்விப்பட்டுள்ளோம் . ஆனால் அப்படியா செய்கிறது ? அதேல்லாம் அந்தக் காலப்பூனைகள் . இந்த காலமல்ல !
9. .எழுத்து மொழி posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[29 April 2013] IP: 119.*.*.* China | Comment Reference Number: 27111
எழுத்து மொழி "காவல்காரன்"
பேச்சு மொழி :காவக்காரன்"
1967 இல் MGR நடித்த "காவல்காரன்" திரைப்படம் வெளிவந்தது.அப்போது திமுக வினரின் பிரபலமான திரை படம்.இது. அறிஞர் அண்ணா, நாவலர் இருந்த நேரம் அது. தவறு இருந்தால் அப்போதே திருத்தி இருப்பார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross