காயல்பட்டினம் அல்அமீன் நர்ஸரி மற்றும் துவக்கப்பள்ளியில், மாணவ-மாணவியர் பங்கேற்பில் கண்காட்சி நடைபெற்றது.
காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சியில், காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி, ரஹ்மானிய்யா மழலையர் பள்ளி, ஏ.எல்.எஸ்.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ், அல்அமீன் நர்ஸரி மற்றும் துவக்கப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி , வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி ஆகியவற்றின் மாணவ-மாணவியர் தாங்கள் உருவாக்கிய பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தனர்.
காயல்பட்டினம் விஸ்டம் பப்ளிக் ஸ்கூல் அகடமிக் கவுன்சிலர் என்.ஹைருன்னிஸா நடுவராகக் கலந்துகொண்டு, சிறந்த காட்சிப் பொருளைத் தேர்வு செய்தார்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவை, பள்ளியின் அரபி ஆசிரியை எம்.நஜ்மா கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாகி ஏ.எஸ்.முஹம்மத் அஷ்ரஃப் அலீ வரவேற்றுப் பேசினார். பள்ளி முதல்வர் எம்.விஜயா முன்னிலை வகித்தார்.
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கும் பரிசுகளையும், கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவியருக்கும் சான்றிதழ்களையும் வழங்கி, வாழ்த்திப் பேசினார்.
பின்னர், கடந்த 33 ஆண்டு காலமாக, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் பணியாற்றி, நடப்பாண்டில் ஓய்வுபெறவிருக்கும் சிறப்பு விருந்தினர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபாவின் கல்விச் சேவையைப் பாராட்டி, காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரியின் சார்பில், அதன் முதல்வர் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினார்.
பள்ளி நிர்வாகி எஸ்.அப்துல் காதிர் பாதுஷா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
[செய்தி திருத்தப்பட்டது @ 2:00pm/25.4.2013]/font> |