காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்கத்தையொட்டி, சாலையோரத்தில் அமைந்துள்ள குடிநீர் வால்வு தொட்டியின் காட்சிகள்தான் இவை.
மழைக் காலங்களில், சாலையில் தேங்கும் மழை நீர் இத்தொட்டிகளை முழுமையாக மூழ்கடித்து விடும் என்பதால், தொட்டி இருக்குமிடம் தெரியாமல் போய், பெரிய விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
நகரில் பல தொட்டிகள் தரை மட்டத்திலேயே உள்ளதால், சாதாரண நாட்களிலும் கூட, இரவு நேரங்களில் பல முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும் தடுக்கி விழுந்த நிகழ்வுகள் நகரில் தொடர்கதை.
இதுபோன்ற - திறந்த நிலையிலுள்ள வால்வு தொட்டிகளுக்கு மூடி அமைப்பதற்காக, நகர்மன்றக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையிலும் இன்று வரை ஒரு தொட்டி கூட மூடப்படவில்லை.
இதுகுறித்து, காயல்பட்டினம் நகராட்சி பணி மேற்பார்வையாளர் செல்வமணியிடம் வினவியபோது, போதிய லாபம் கிடைக்காது என்பதைக் காரணங்காட்டி, ஒப்பந்தக்காரர்கள் இதுபோன்ற சிவில் (கட்டுமானப்) பணிகளை தனித்து எடுப்பதில்லை என்றும், சாலைப் பணிக்கான ஒப்பந்தம் ஏதேனும் பெற்றால், அத்துடன் இணைத்தே இதுபோன்ற வேலைகளை ஒப்புக் கொள்வதாகவும் கூறினார்.
படங்கள்:
சேனா செய்யித் முஹம்மத்
பாங்காக் - தாய்லாந்து
|