காயல்பட்டினம் நகர்மன்ற பிரதான கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது. பஞ்சாயத் தகுதியில் இருந்தப்போது கட்டப்பட்ட இந்த கட்டிடம், தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது.
இக்கட்டிடத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடப்பு பட்ஜெட்டில் (2013-14), காயல்பட்டினம் நகராட்சிக்கு - உள்கட்டமைப்பு மற்றும் இயக்குதல் & வெற்றிடம் நிரப்புதல் (INFRASTRUCTURE GAP FILLING FUND) நிதியில் இருந்து, 1.5 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கான நிர்வாக அனுமதியும் (ADMINISTRATIVE SANCTION) - சென்னை நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA) அலுவலகத்தில் இருந்து வழங்கபட்டுள்ளது.
இப்பணிக்கு விரிவான திட்ட மதிப்பீடு (DETAILED ESTIMATE) மற்றும் வடிவமைப்பு (DESIGN) போன்றவற்றை தயார் செய்ய தகுதியான கலந்தரிதற்குரியர் (CONSULTANT) நிறுவனத்திடம் ஒப்பந்தப்புள்ளி கோரி இன்றைய தினத்தந்தி நாளிதழில் - காயல்பட்டினம் நகராட்சி சார்பாக - விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.ஒப்பந்தப்புள்ளிகள் செப்டம்பர் 20 வரை பெறப்படும் என்றும் விளம்பரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அடுத்த கட்டிடம் மாநகராட்சி ஆனபிறகுதான் posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[01 September 2013] IP: 113.*.*.* China | Comment Reference Number: 29908
பஞ்சாயத்து தகுதியில் இருந்தப்போது கட்டப்பட்ட பழைய கட்டிடம், நகராட்சி ஆன பிறகு இப்போதுதான் மாற்றப்பட இருக்கிறது. கட்டப்படவுள்ள இந்த புதிய கட்டிடம் , நம் ஊர் மாநகராட்சி ஆகும் வரை தாக்குபிடிக்கும்விதமாக, நன்கு தரமானதாக அமைக்கவும். ஏனெனில் அடுத்து ,நம் ஊர் மாநகராட்சி ஆனபிறகுதான் வேறு புதிய கட்டிடம் கட்டுவோம்.அதுவரை இது ஓடனும்.
4. Re:...புதிய கட்டடம் மட்டும் மக்கள் குறை தீர்க்குமா posted bymackie noohuthambi (kayalpatnam)[01 September 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29909
அது பெரிய பங்களா.
நண்பன் புதிதாக சொகுசாக கட்டி முடித்து, தன நண்பனை புதுமனை புகு விழாவுக்கு அழைத்தான். நண்பனும் சென்றான். விருந்துபசாரங்கள் முடிந்து வீட்டை பார்வை இட்டான். எல்லா சொகுசுகளும் நிறையவே உள்ளன. வீட்டின் பெயர் பலகையை பார்த்தான்.அது தங்கத்தால் மின்னியது, வீட்டின் பெயர் "அன்னை இல்லம்".
நண்பன் கேட்டான். இவ்வளவு பெரிதாக கட்டி முடித்து, உன் அன்னையின் பெயரையும் கூட எழுதாமல் எவ்வளவு கண்ணியமாக உன் வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறாய். அப்படிப்பட்ட சிறப்பு மிக்க உன் தாயை நான் பார்க்க வேண்டுமே என்றான். வீட்டின் உரிமையாளன் நண்பன் சொன்னான், அன்னை இங்கே இல்லை, அவளை முதியோர் இல்லத்தில் ஒப்படைத்து இருக்கிறேன். எந்த கவலையும் குறையும் இல்லாமல் அவளை அவர்கள் பாதுகாப்பார்கள். நண்பனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
வீட்டின் பெயரோ "அன்னை இல்லம்". ஆனால் அன்னை இருப்பதோ "முதியோர் இல்லம்".
இப்போது வாருங்கள், நமது நகர் மன்றம் சகல வசதிகளுடனும் கட்டப் பட்டு முடித்த பிறகு திறப்பு விழா, இங்கு மந்திரிகள் வருவார்கள், மன்ற உறுப்பினர்கள் வருவார்கள், அதிகாரிகள் வருவார்கள், மக்களும் வருவார்கள்.ஆனால் மக்கள் குறை கேட்க அவர்கள் குறை போக்க யார் இருப்பார்கள். வெளி நடப்புகளும் வெட்டி பேச்சுக்களும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசுவதும்தானே தொடரும்....
புதிய கட்டடம் கட்டினால் மட்டும் போதாது, அது மக்கள் குறை தீர்க்கும் மன்றமாக இருந்தால் மட்டுமே அதன் மகிமை உணரப்படும். இல்லா விட்டால் அன்னை இல்லத்தில் அன்னை இல்லை அவள் முதியோர் இல்லத்தில் என்று சொன்ன மாதிரிதான் இருக்கும்.
5. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[01 September 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29911
அரசாங்க விசயங்களைப் பொறுத்தவரை ஆளுபவர்கள் அதிகாரிகளே.
நம் நகராட்சியில் எத்தனை தீர்மானங்கள் போட்டாலும், தலைவி & உறுப்பினர்களுக்கிடையே சுமூக ஒத்துழைப்பு இருந்தாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. ஏட்டில் மட்டும் பதிந்து கொள்ளலாம், இத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம் என்று. அங்கு பணி புரியும் அதிகாரி மனம் இறங்கவில்லை என்றால் கொசு மருந்து கூட அடிக்க முடியாது.
நம்முடைய கவனம் எல்லாம் நகராட்சி கூட்டம், உறுப்பினர்களின் வெளிநடப்பு, ஒத்துழையாமை இதை ஒட்டியே தான் இருக்கின்றது.
செயல்வடிவம் செய்யக்கூடிய அதிகாரிகளைப் பற்றி ஒன்றும் கவலைபடுவது இல்லை. இத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளார்களே, எத்தனை தீர்மானங்களை செயல்வடிவம் கொண்டுவந்துள்ளீர்கள் என்று அதிகாரிகளை வினவுவது இல்லை.
ஆக, நமக்குள் உள்ள மோதலை ரசித்து விட்டு, அவர்களின் பணிக்காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். காரணம், அரசாங்க வேலை கொடுக்கும் "பணி பாதுகாப்பு". எந்த வேலையும் பார்க்காவிட்டாலும், பணியில் ஊழல்/ கையாடல் செய்தாலும், விசாரணை,விசாரணை.. என்றே காலம் ஓடி விடும். ஒரு புல்லையும் புடுங்க முடியாது.. அவ்வளவு பணி பாதுகாப்பு.
வல்ல ரஹ்மான், நம் ஊருக்கு நல்ல அதிகாரிகளையும் கொடுத்து, பணிகள் அனைத்தும் நன்றாக நடைபெற பிராத்திக்கின்றேன்.
ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிப் பயல்களுக்குத் தான் கொண்டாட்டம்! என்பதை மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோ. ஜியாவுத்தீன்!
உயர்தரமான தரக்கட்டுப்பாட்டு பெறுவதற்காக எதையும் காம்ப்ரமைஸ் செய்யத் துணியாத - நல்லதொரு தரமான திட்ட மேலாண்மைக் கன்சல்டன்சியின் [PMC – Project Management Consultancy] கண்காணிப்பு மூலம் ஒரு அரசுப் பணி நடைபெறுகிறது என்றால், தில்லுமுல்லு செய்யும் காண்ட்ராக்டர்களுக்கு தினம்தினம் ஜுரம் தான்.
ஆனால் இங்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டவரின் பணி, வெறுமனே படம் வரைந்து பாகங்கள் குறித்து அளவீடு செய்வது [Design and cost estimate] மட்டும் தான் என்பது போல் தெரிகிறது.
கட்டுமானக் காலத்தில், அதன் தரம் [quality], கால நிரல் [programme schedule], பாதுகாப்பு [health and safety of workers], செலவினங்கள் [approval of invoices and expenses] இவைகளையும் மேலாண்மை செய்யும் பணி எவரை சேர்ந்தது?
நகராட்சிப் பொறியாளர்கள் மட்டும் இப்பணியை செய்வார்கள் எனில், கணிசமாக ஊழல் நடைபெற வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. கற்பனையாகச் சொல்லவில்லை; வேறு நகராட்சி சார்ந்த கட்டுமானப் பணிகளில் கண்கூடாகக் கண்டவை தான் இக்கூற்றுக்கான சான்று! அதன் பின், மீண்டும் சென்னையிலுள்ள கிங் இண்ஸ்ட்டிடியூட், வேறு டெஸ்டிங் லெபரேட்டரிகளுக்கு தரக்கட்டுப்பாட்டுக்காக நகர் நலத் தன்னார்வலர்கள் அலையாமல் இருக்கும் சூழல் ஏற்பட்டால் மகிழ்ச்சி!
7. Re:... posted byVilack SMA (Zibo , Shandong , China)[01 September 2013] IP: 222.*.*.* China | Comment Reference Number: 29920
நல்ல விசயம் . யார் டெண்டர் எடுக்க போறது , யார் குழியை தோண்டி ஆழம் பார்க்க போறது ! ஹ்ம்ம் வேலை நடக்கும்போது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் . எங்களுக்கும் நல்லா பொழுது போகும் .
8. மக்கள் மன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[01 September 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29927
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்ட ஆயத்தமாகிறது நல்ல செய்தி – வாழ்த்துக்கள். விரைவில் புதிய கட்டடம் கட்டி முடித்து அதில் தொடங்குகிற கூட்டங்களும் , செயல்பாடுகளும் மக்களுக்கு நன்மையாக அமைய இறைவனிடம் வேண்டுவோமாக.
----------------------------------------------
புதிய கட்டடம் கட்டுவது முக்கியம் என்றாலும் தேவையான , அவசியமான வசதிகளை திட்டமிட்டு அமைப்பது சிறந்தது. அவசரக்கோலத்தில் ஒழுங்கான திட்டமின்றி , சம்பந்தபட்டவர்களின் ஆலோசனையின்றி யாராவது செயல்பட்டார்களானால் அது பிரயோஜனமற்றதாகிவிடும்.
அதன் பிறகு அவர் செய்தது தவறு, இவர் செய்தது தவறு என்று மற்றவர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை – இதில் அதிகாரிகளுடைய ஆலோசனையை பெற்று மக்கள் மன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்.
---------------------------------------------
தூரநோக்கோடு சிந்தித்து கட்டடம் அமைக்க வேண்டும் – அதல்லாது கட்டினால் – நம் நகராட்சியால் இப்பொழுது வாங்கி உபயோகத்தில் இருக்கும் குப்பை தொட்டிக் கதையாகத்தான் இருக்கும் – சுண்டக்கா கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற விதத்தில்.
ஊழல் இல்லாமல் பார்த்துக்கொண்டால் எல்லோருக்கும் நல்லது. இந்த காலத்தில் எதில்தான் ஊழல் இல்லை என்ற முட்டாள்களின் வாதத்திற்கு மயங்கினால் அது யாருக்குமே நல்லதல்ல.
இறைவனின் பயம் உள்ள எவரும் ஊழலுக்கு துணைப்போக மாட்டார்கள் - அப்படி துணைப்போகிறவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள் இது இறைவன் விதித்த விதி. இறைவனின் விதியை மீறியவர்களின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross