இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள ஆண் - பெண் ஹாஜிகளுக்கு காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியில், வழமை போல இவ்வாண்டும் நேற்று (01.09.2013) மாலை 05.00 மணிக்கு, ஹஜ், உம்றா, ஜியாரத் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, இந்நிகழ்ச்சியில் ஹஜ் பயணியருக்கு வழிகாட்டு உரை நிகழ்த்தினார்.
ஆண் - பெண்களுக்கு தனித்தனியே இட வசதி செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள காயல்பட்டினம் நகரைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஹாஜி என்.டி.ஷெய்கு மொகுதூம், அப்துல்லாஹ், ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியையர் செய்திருந்தனர்.
தகவல்:
M.W.ஹாமித் ரிஃபாய்
முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) நடத்தப்பட்ட ஹஜ் வழிகாட்டு நிகழ்ச்சி குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |