தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாவட்ட அளவிலான - பள்ளி மாணவ-மாணவியருக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 06ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 08.00 மணி முதல், இளநிலை (ஜூனியர்) - முதுநிலை (சீனியர்) என இரு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது.
மழலையர் வகுப்பு முதல் 05ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர் இளநிலை (ஜூனியர்) பிரிவின் கீழும், 06 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர் முதுநிலை (சீனியர்) பிரிவின் கீழும், ஒற்றையர் (Singles) மற்றும் இரட்டையர் (Doubles) முறைப்படி விளையாடலாம்.
மேற்படி போட்டிகளில், ஒரு பள்ளியிலிருந்து ஒரு பிரிவில் ஒரு மாணவர் - மாணவி மட்டுமே கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ள மாணவ-மாணவியர் தம் பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து, பயிலும் பள்ளி - படிக்கும் வகுப்பு போன்ற விபரங்களுடன், நுழைவு விண்ணப்பத்தை,
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு,
தூத்துக்குடி - 628 001,
தொலைபேசி எண்: 0461 - 2321149
என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ-மாணவியர் போட்டி நாளான 06.09.2013 அன்று காலை 07.30 மணிக்கு, தூத்துக்குடி விளையாட்டரங்கத்திற்கு வருகை தர வேண்டும்.
போட்டிகளில் முதல் மூன்றிடங்களைப் பெறும் மாணவ-மாணவியருக்கு பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன், மாவட்ட அளவிலான இப்போட்டியில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர்.
இத்தகவலை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். |