காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவில், தனியார் தோட்டமொன்றில் நிற்கும் வேப்ப மரத்தின் பெரிய கிளையொன்று சாலைப் பகுதியில் சரிந்த நிலையில் வளர்ந்து இருந்துள்ளது.
இன்று மாலை 04.00 மணியளவில் வீசிய பலத்த காற்று காரணமாக, ஏற்கனவே சிறிதளவு முறிந்திருந்த அக்கிளை முற்றிலும் முறிந்து, மின் கம்பி வடங்களில் சாய்ந்தவாறு சாலையில் சரிந்து விழுந்து, சாலையை முற்றிலுமாக மறைத்துள்ளது. இதன் காரணமாக, மின் வினியோகம் இருந்த நிலையில் - சாலையோர மின் கம்பி வடங்களும் அறுந்து விழுந்தன.
நல்ல வேளையாக அந்நேரத்தில் அப்பகுதியில் யாரும் செல்லாத காரணத்தால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து உடனடியாக நிகழ்விடம் விரைந்து வந்த காயல்பட்டினம் மின் வாரிய அதிகாரிகள், அப்பகுதியின் மின் வினியோகத்தை உடனடியாக நிறுத்திய பின், மரக்கிளைகளை வெட்டியகற்றி, மின் கம்பி வடங்களைப் பழுது நீக்கி சரிசெய்து, பாதையையும் சீர் செய்யும் பணியைச் செய்து வருகின்றனர்.
தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப் |