பான்மசாலா, குட்கா, புகையிலை பொருட்களை அடைத்து விற்க பாலிதீன் பைகளை உற்பத்தி செய்து வழங்கும் நிறுவனங்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவி குமார் பின்வருமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்:-
தமிழக அரசு - பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்குத் தடை விதித்துள்ளது. அத்தகைய பொருட்களை அடைத்து விற்பதற்கு ஏதுவாக பாலிதீன் பைகளை உற்பத்தி செய்து தருவதற்கு தடை விதித்து, ப்ளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011 மூலம் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாலிதீன் பைகள் உற்பத்தியாளர்கள் எவரும் பான்மசாலா, குட்கா மற்றும் புகையிலை போன்ற பொருட்களை அடைத்து விற்பதற்கு பாலிதீன் பைகளை உற்பத்தி செய்து விற்கக் கூடாது என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.
மீறுவோர் மீது, தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய மேலாளர் அவர்களால் சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவி குமார் எச்சரித்துள்ளார். |