துல்கஃதா (1434) மாத அமாவாசை செப்டம்பர் 5 வியாழக்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி மதியம் 11:36 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது
இந்திய நேரம் செப்டம்பர் 5 மாலை 6:06 மணி.
செப்டம்பர் 5 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:24 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:13. அன்று காயல்பட்டணத்தில் சூரியன்
மறைவதற்கு 11 நிமிடங்களுக்கு முன் சந்திரன் மறைகிறது. மேலும் சந்திரன் மறைவதற்கு 7 நிமிடங்களுக்கு முன் அமாவாசை நிகழ்கிறது. அன்று தென்
அமெரிக்காவின் தென் கோடியிலும், தென் பசிபிக் கடல் பகுதிகளிலும் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு பிறையை காணலாம்.
செப்டம்பர் 6 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:23 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:56. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது
24 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 33 நிமிடம் வரை பிறை இருக்கும். வானிலை சூழல் தெளிவாக இருந்தால் காயல்பட்டினத்தில் பிறையை
வெறுங்கண்ணால் காணலாம்.
வெறுங்கண்கள் கொண்டு எளிதாக ஆப்ரிக்கா கண்டத்தின் தென் பகுதியிலும், தென் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், வட அமெரிக்காவின் தென் பகுதியிலும்,
வானிலை சூழல் தெளிவாக இருந்தால் வெறுங்கண்கள் கொண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கிழக்கு ஆசியா, இலங்கை, இந்தியாவின் தெற்கு
மாநிலங்கள், அரேபியா தீபகற்பத்தின் தென் கோடி, ஆப்ரிக்கா கண்டத்தின் மத்திய பகுதி, வட அமெரிக்காவின் மத்திய பகுதி ஆகிய இடங்களிலும்,
தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு சீனா தவிர வட கிழக்கு ஆசியா நாடுகளிலும், இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் தவிர ஏனைய மாநிலங்களிலும், பாகிஸ்தான்,
இரான், மத்திய கிழக்கு ஆசியா, வட ஆப்ரிக்கா கண்ட நாடுகள், தெற்கு ஐரோப்பா நாடுகள், அமெரிக்க நாட்டின் இதர பகுதிகள், கனடா நாட்டின் பெருவாரியான
பகுதிகளில் - செப்டம்பர் 6 அன்று - பிறையை காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ள ஒரு சாராருக்கும் (Hijra Committee, Kerala), மற்றொரு விதிமுறை அடிப்படையில் பிறையினை
கணக்கிடும் Islamic Society of North America [ISNA], Fiqh Council of North America [FCNA], European Council for Fatwa and
Research [ECFR], Conseil Français du Culte Musulman அமைப்புகளை ஏற்றுக்கொள்ளும் சாராருக்கும் செப்டம்பர் 6 - துல்கஃதா 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு செப்டம்பர் 5 (அமாவாசை) அன்று ஷவ்வால் 29 பூர்த்தி
ஆகிறது. அன்று தென் அமெரிக்காவின் தென் கோடியிலும், தென் பசிபிக் கடல் பகுதிகளிலும் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு பிறையை காணலாம்.
அப்பகுதிகளில் செப்டம்பர் 5 அன்று பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றால் - அவர்கள் ஷவ்வால் 29 பூர்த்தி செய்து, செப்டம்பர் 6 அன்று துல்கஃதா மாதம் துவக்குவர். அவ்வாறு தகவல் கிடைக்கப்பெறவில்லை எனில் அவர்கள் - செப்டம்பர் 6 அன்று ஷவ்வால் 30 பூர்த்தி செய்து, செப்டம்பர் 7 - துல்கஃதா மாதம் துவக்குவர்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு செப்டம்பர் 5 (அமாவாசை) அன்று ஷவ்வால் 28 பூர்த்தி ஆகிறது. செப்டம்பர் 6 அன்று வானிலை சூழல் தெளிவாக இருந்தால் காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால் காணலாம். அவ்வாறு பிறையைக்கண்டால் செப்டம்பர் 6 அன்று அவர்கள் ஷவ்வால் 29 பூர்த்தி செய்வர். செப்டம்பர் 7 துல்கஃதா மாதம் துவக்குவர். வானிலை சூழல் காரணமாக அன்று பிறை தென்படவில்லை எனில் - செப்டம்பர் 7 அன்று ஷவ்வால் 30 பூர்த்தி செய்து, செப்டம்பர் 8 துல்கஃதா மாதம் துவக்குவர்.
ஷவ்வால் 1434 மாத பிறை விபரங்களை காண இங்கு அழுத்தவும் |