காயல்பட்டினம் சுற்றுப்புறத்தில், அன்றாடம் காலை 06.45 மணி முதற்கொண்டே வெயில் வீசி, பொதுமக்கள் சிரமப்படும் அளவிற்கு வெப்பத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அவர்களுக்கு மழை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 05ஆம் தேதி வியாழக்கிழமை) மாலை 06.25 மணியளவில், காயல்பட்டினம் வட திசையில் திடீரென கருமேகம் திரண்டு வானத்தின் மீது கருங்குடை பிடித்தாற்போல் காட்சியளித்தது. ஆறுதலுக்கு ஓரிரு துளிகள் சாரலையும் விட்டுத் தந்தது வானிலை.
இந்நிகழ்வின்போது, காயல்பட்டினம் கடற்கரையில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள்:-
(மேலேயுள்ள 5 படங்களையும் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!)
பெரிய அளவில் மழை பெய்து, வெப்ப வானிலையை மாற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் மாலைக் கனவில் பொதுமக்கள் மிதந்துகொண்டிருக்க, 30 நிமிடங்களில் கருமேகம் வந்த சுவடு தெரியாமல் கலைந்து சென்றுவிட்டது. |