ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது (உள்ஹிய்யா கொடுப்பது) இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். உள்ஹிய்யா கொடுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியில் குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நடப்பாண்டு உள்ஹிய்யா ஏற்பாடுகள் குறித்தும், இதர விஷயங்கள் குறித்தும் முடிவெடுப்பதற்காக, காயல்பட்டினம் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியின் சார்பில், இம்மாதம் 05ஆம் தேதி வியாழக்கிழமை (நேற்று) காலை 11.00 மணியளவில், ஹாஜி ஷாஹுல் ஹமீத் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வழமை போல இவ்வாண்டும் ஒருங்கிணைந்த முறையில் உள்ஹிய்யாவை நிறைவேற்றிட அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, உள்ஹிய்யா ஏற்பாடுகளைப் பொறுப்பேற்று செய்வதற்காக,
எஸ்.ஏ.சுல்தான் (கைபேசி எண்: +91 94868 78118)
எஸ்.எம்.பி.மூஸா நெய்னா (கைபேசி எண்: +91 94432 05207)
ஜெ.எம்.காதர் (கைபேசி எண்: +91 99521 63734)
கே.எம்.ஸாலிஹ் (கைபேசி எண்: +91 99659 19156)
ஆகியோரடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டது.
நடப்பாண்டில், மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.2000/- என அக்கூட்டத்தில் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பங்கு சேர விரும்புவோர், ஏற்பாட்டுக் குழுவினரைத் தொடர்புகொண்டு, தம் பங்கை உறுதி செய்துகொள்ளுமாறு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
S.H.முஹம்மத் உமர் |