குடியரசு நாள் மற்றும் பாரதியார் நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட உயர்நிலை - மேனிலை - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில், தண்டுப்பத்து அனிதா குமரன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில், 31.08.2013 அன்று விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து, சதுரங்க விளையாட்டுப் போட்டியில் 6 மாணவியர் பங்கேற்றனர். அவர்களுள், 11ஆம் வகுப்பு மாணவி யு.இசட்.கே.ஹலீமா மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார். அவரை, பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியை உள்ளிட்ட ஆசிரியையர் பாராட்டினர்.
இத்தகவலை, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் தெரிவித்துள்ளார். |