நடப்பாண்டு விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளைக் கரைத்திட வரைமுறைகளை நிர்ணயித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தின் சார்பில் பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:-
இரசாயண வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு, நீர் நிலைகளில் கரைக்கும் வழமை உள்ளது. ஆனால், அண்மைக் காலமாக இரசாயண வர்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை, வழிபட்ட பின்னர் நீர் நிலைகளில் கரைப்பதால், அவை மாசு படுகின்றன. எனவே, பொதுமக்களுக்கு கீழ்க்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது:-
தூத்துக்குடி மாவட்டம் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளதால், முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
(1) களிமண்ணால் செய்யப்பட்டதும் / சுடப்படாததும் மற்றும் எவ்வித இரசாயணக் கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம்.
(2) இரசாயண வர்ணம் (பெயிண்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
(3) கடலோரத்தில் / ஏரிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்காமல், கடலினுள் குறைந்தது 500 மீட்டர் தொலைவுக்கு எடுத்துச் சென்று - மேற்கண்ட இடங்களில் கரைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி - சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடும் படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |