பேருந்து போக்குவரத்திற்கு சிரமமளிக்கும் வகையில் குண்டும் குழியுமாக இருக்கும் காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்தல்,
நகரின் அனைத்து வார்டுகளிலுமுள்ள தெருக்களில் தேங்கும் குப்பைகளை சரிவர சுத்தம் செய்தல்,
குறைபாடுள்ள சில வார்டுகளில் சுத்தமான குடிநீர் வினியோகித்தல்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கோரிக்கை விளக்கக் கூட்டம், இம்மாதம் 01ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) இரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
கட்சியின் நகர செயலாளர் ஹாஜி பி.அசன் மைதீன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். நகர துணைச் செயலாளர் பி.ஷேக் அப்துல் காதர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ஏ.மோகன்ராஜ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வி.நடேச ஆதித்தன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் இ.கிருஷ்ணராஜ், இ.கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் எம்.பரமசிவன், ஆறுமுகநேரி கிளை செயலாளர் பி.ஆனந்தவேல், அதன் பொருளாளரும் - கிராமிய பாடகருமான ஏ.இசக்கிமுத்து, ஆறுமுகநேரி நகர உதவி செயலாளர் எஸ்.சிவபெருமாள், திருச்செந்தூர் கிளை நிர்வாகி பி.ஜெயக்குமார், அதன் துணைச் செயலாளர் வி.ஆண்டி, ஆறுமுகநேரி மாதர் சங்கத்தைச் சேர்ந்த ஏ.சக்திகனி, காயல்பட்டினம் மாதர் சங்கத்தைச் சேர்ந்த ஐ.சரோஜா அம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
கூட்ட ஏற்பாடுகளை, கட்சியின் காயல்பட்டினம் கிளை நிர்வாகிகளான என்.மீரான் முகைதீன், ஏ.காதர், கே.ரிஃபாய், ஏ.எம்.மீரான் சாகிப், எஸ்.மன்ஸூர், எஸ்.பக்கீர், என்.முத்துக்குமார், அய்யங்கண்ணு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |