வட்டியில்லா நிதித் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதை அடிப்படை செயல்திட்டமாகக் கொண்டு, இந்தியாவின் 12 மாநிலங்களில் 18 கிளைகளுடன் செயல்பட்டு வரும் அமைப்பு ‘ஜன்சேவா கூட்டுறவு சங்கம்’ ஆகும். வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி அது தன் பயணத்தைத் தொடர்கிறது.
இதுகுறித்த அறிமுகம் மற்றும் கலந்தாலோசனைக் கூட்டம், கடந்த டிசம்பர் 29ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
எம.என்.அஹ்மத் ஸாஹிப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - எல்.கே.மேனிலைப்பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் தலைமையுரையாற்ற, ஜன்சேவா அகில இந்திய செயற்குழு உறுப்பினரும், சென்னை கிளை தலைவருமான ‘ப்ரொஃபஷனல் குரியர்’ எஸ்.அஹ்மத் மீரான் வரவேற்றுப் பேசினார்.
பி.எஸ்.அப்துர்ரஹ்மான் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கல்விப் பிரிவு பேராசிரியர் முனைவர் செய்யித் மஸ்ஊத் ஜமாலீ துவக்கவுரையாற்றினார். ஜன்சேவா சென்னை கிளை செயலாளர் எஸ்.இம்தியாஸ் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
சென்னை க்ரஸென்ட் பள்ளி இயக்குநர் டாக்டர் எஸ்.தாவூத் ஷா, மைக்ரோகாயல் நிறுவனர் ஜெ.செய்யித் ஹஸன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் சிறப்புரையாற்றினார்.
பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு, ஜன்சேவா சென்னை கிளை துணைச் செயலாளர் எஸ்.இப்னு ஸஊத், ஜிஃப்ரீ காஸிம் ஆகியோர் விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஜன்சேவா சென்னை - வாணியம்பாடி கிளை நிர்வாகிகளும், மைக்ரோகாயல் அமைப்பினரும் இணைந்து செய்திருந்தனர்.
தகவல்:
M.N.அஹ்மத் ஸாஹிப்
ஜன்சேவா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |