காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்து அணியின் முன்னாள் வீரர் - அண்மையில் காலமான எம்.எஸ்.எல்.ஜாமிஉல் அக்பர் நினைவாக, தனியார் நிறுவனமான பி.எச்.எம்.ரெஸ்டாரண்ட் அனுசரணையில், “மர்ஹூம் ஜாமிஉல் அக்பர் நினைவு கால்பந்துப் போட்டி”யை, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் ஆண்டுதோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு போட்டிகள் இம்மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) துவங்கியது.
நேற்று (ஜனவரி 14) நடைபெற்ற மூன்றாவது போட்டியில், முதல் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற தூத்துக்குடி ஃப்ரெண்ட்ஸ் கால்பந்து அணியும், காயல்பட்டினம் பி.எச்.எம். ரெஸ்டாரெண்ட் அணியும் மோதின.
ஆட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை ஈரணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி 0-0 என்ற நிலையில் சமனில் முடிவுற்றது. பின்னர் சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. அதில் ஈரணிகளும் சம அளவில் கோல் அடித்ததால், Sudden Death முறை கையாளப்பட்டது. இதில் பி.எச்.எம்.ரெஸ்டாரெண்ட் அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
நேற்றைய போட்டியின் இடைவேளையின்போது, காயல்பட்டினம் பி.எச்.எம். ரெஸ்டாரெண்ட் நிறுவன அதிபர் ஹாஜி பிரபு ஹபீப் முஹம்மதுக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இன்று (ஜனவரி 15) நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இவ்வணி - ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணியுடன் களம் காணவுள்ளது.
சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பாக..
தகவல் & படங்கள்:
‘PHM’ ஷேக்னா
முந்தைய போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |