காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்து அணியின் முன்னாள் வீரர் - அண்மையில் காலமான எம்.எஸ்.எல்.ஜாமிஉல் அக்பர் நினைவாக, தனியார் நிறுவனமான பி.எச்.எம்.ரெஸ்டாரண்ட் அனுசரணையில், “மர்ஹூம் ஜாமிஉல் அக்பர் நினைவு கால்பந்துப் போட்டி”யை, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் ஆண்டுதோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு போட்டிகள் இம்மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) துவங்கியது.
இன்று (ஜனவரி 15) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், காயல்பட்டினம் பி.எச்.எம். ரெஸ்டாரெண்ட் அணியும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணியும் மோதின.
ஆட்டத்தின் முதற்பாதியில் ஒரு கோல், இரண்டாவது பாதியில் ஒரு கோல் என, ஆதித்தனார் கல்லூரி அணி இரண்டு கோல்களை அடித்த நிலையில், பி.எச்.எம். அணி கோல் எதுவும் அடிக்காததால், 2-0 என்ற கோல் கணக்கில் ஆதித்தனார் கல்லூரி அணி வெற்றிபெற்று, இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
இதுநாள் வரை நடைபெற்ற போட்டிகள் ‘ஏ’ பிரிவிற்கானதாகும். நாளை (ஜனவரி 16) முதல் ‘பி’ பிரிவிற்கான போட்டிகள் துவங்குகின்றன. நாளை மாலையில் நடைபெறும் துவக்கப் போட்டியில், காயல்பட்டினம் காலரி பேர்ட்ஸ் அணியும், புன்னைக்காயல் செயின்ட் ஜோஸப் அணியும் மோதுகின்றன.
சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பாக..
தகவல் & படங்கள்:
‘PHM’ ஷேக்னா
முந்தைய போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |