சவுதி அரேபியா - ஜித்தா, கடந்த 10.01.2014 வெள்ளிக்கிழமை ஜித்தாவில் நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 76-ஆவது செயற்குழு கூட்ட விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
எல்லாம் வல்ல ஏக நாயனின் பேரருளால், சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 76-ஆவது செயற்குழு கூட்டம் கடந்த 10.01.2014 வெள்ளிக்கிழமை மஃரிபுக்கு பின் ஜித்தா – ஷரஃபியாவில் அமைந்துள்ள இம்பாலா கார்டன் உணவகத்தில் இக்ராஃ தலைவரும், இம்மன்றத்தலைவருமாகிய சகோ. குளம் எம்.எ.அஹமது முஹிய்யதீன் தலைமை தாங்க, சகோ. எம்.ஐ.அப்துல் பாஸித் இறைமறை ஓதி துவக்க, சகோ. நஹ்வி எ.எம்.ஈசா ஜக்கரியா வந்திருந்த அனைவரையும் அக மகிழ வரவேற்றார்.
தொடர்ந்து தலைமையுரையாற்றிய இவ்வமர்வின் தலைவர் சகோ. குளம் எம்.எ.அஹமது முஹிய்யதீன் தாயகம் சென்று திரும்பியதில் தான் கலந்து கொண்ட உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தின் நிகழ்வுகளையும், அது சிறப்புடன் செயல்படும் முறைதனையும், மற்றும் மருத்துவ உதவிக்கென்று புதியதாக உதயமான ஷிஃபா வின் சீரான சேவைதனையும், அழகுடன் எடுத்துக்கூறிய தலைவர், அது பற்றி மன்ற உறுப்பினர்கள் தொடுத்த வினாக்களுக்கும் விரிவான விளக்கம் தந்து, நல்ல பல கருத்துகளையும் தந்து அமர்ந்தார்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த செயற்குழுக் கூட்ட அறிக்கைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மன்ற உறுப்பினர் சகோ. பி.எஸ்.ஜே.நூர்த்தீன் நெய்னா விபரமாக எடுத்துக்கூறினார். மன்றத்தின் சீரிய பணிகள் மற்றும் நடக்கவிருக்கும் பொதுக்குழு குறித்து அறியத்தந்த மன்றச்செயலாளர் சகோ.எம்.எ.செய்யிது இப்ராஹீம் குடும்ப சங்கமமாக நாம் நடத்தவிருக்கும் நம் மன்ற பொதுக்குழு குறித்த உறுப்பினர்களின் கருத்துக்களை கூறுமாறு வேண்டிக்கொண்டார். அப்பொதுக்குழு சம்பந்தமாக சிறப்பு துணைக்குழு அமைத்து, வரும் பொதுக்குழுவை மிகச்சிறப்பாக நாம் நடத்த வேண்டுமென்றும் கூறினார். அதற்கான பணிகளை நாம் இப்போதே துவக்கி உறுப்பினர்களை களப்பணிகளில் தயார் படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டு பேச்சை நிறைவு செய்தார்.
நிதி நிலை அறிக்கை:
வரவேண்டிய சந்தாக்கள், பெறப்பட்ட சந்தாக்கள், தற்போதைய இருப்பு மற்றும் விடுப்பு போன்ற முழு விபரங்களையும் நிதி நிலை அறிக்கையாக சமர்பித்தார் மன்ற பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவிகள்:
இணைக்கப்பட்ட மருத்துவ சான்றிதழுடன், மருத்துவ உதவி வேண்டி ஷிஃபா மூலமாக வந்திருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு, வந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டு; இரத்த புற்று நோய், கழுத்து புற்று நோய், நுரை ஈரல் பாதிப்பு, சிறுநீரகத்தில் கல், இருதய அறுவை சிகிச்சை, மூட்டு வலி, மற்றும் குறை பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளை பாதுக்காக்கும் கருவி வகைக்கு, என பாதிப்புக்குள்ளான எட்டு பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவுசெய்யப்பட்டு, அதற்கு ரூபாய் 44,500 நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் அவர்களின் பூரண உடல் நலத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
தீர்மானம்:
# இக்ராஃவிலிருந்து Meet the Toppers நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாக வந்த மின்னஞ்சல் குறித்து விவாதிக்கப்பட்டு கருத்து பரிமாற்றங்களுக்கு பின்
1. உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிதி செலவீனம் மற்றும் வேலைச்சுமை இல்லாத பட்சத்தில் MEET THE TOPPERS நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தலாம் என்றும்.
2. தற்போது நடத்தப்பட்டு வரும் MEET THE TOPPERS நிகழ்ச்சியை செம்மைபடுத்தும் விதமாக மதிப்பெண் ஒன்றையே குறிக்கோளுடன் இல்லாமல் பல்நோக்கு பார்வையுடன் பலதரப்பட்ட மாணவர்களுக்கும் வழிகாட்டும் செயல் திட்டங்கள் அமைப்பது குறித்து ஆராயவும் மேலும் மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் ஆளுமைத்திறன் (Personality Skill) ஆகியவற்றை மேம்படுத்தும்விதமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இக்ராஃ வை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
# ஷிஃபாவின் உள்ளூர் பிரதிநிதியாக சகோ.ஏ. எம். இஸ்மாயில் நஜிப் அவர்களை இம்மன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நியமிக்கிறது.
# அடுத்து இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 08:00 மணி முதல் மாலை 08:00 மணி வரை மன்றத்தின் 31-வது மகா பொதுக்குழு, காயலர் குடும்ப சங்கமம் நிகழ்ச்சியாக இப்பொதுக்குழுவை நல்ல முறையில் சிறப்பாக நடத்திட முடிவுசெய்யப்பட்டு, அதற்காக ஓர் துணைக்குழு அமைக்கப்பட்டது.
நன்றி நவிலல்:
சகோ. குளம் எம்.எ.அஹமது முஹிய்யதீன் நன்றி கூற சகோ. எஸ். எஸ். ஜாபர் சாதிக் பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
கூட்டத்திற்கான முழு அனுசரணையை சகோ. நஹ்வி எ.எம்.ஈசா ஜக்கரியா மற்றும் சகோ. மீரான் மூஸா நல்லபடி செய்து இருந்தார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.ஹெச். அப்துல்காதர்,
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
15.01.2014. |