முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில், வரும் ஜனவரி மாதம் 28ஆம் நாளன்று ‘சிறை செல்லும் போராட்டம்’ நடத்தப்படவுள்ளது.
இப்போராட்டத்தில் காயல்பட்டினத்திலிருந்து பொதுமக்களைக் கலந்துகொள்ள அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
இன்று (16-01-2014) காலை 11 மணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக காயல்பட்டினம் மஸ்ஜிதுத் தவ்ஹீதில் வைத்து சிறை செல்லும் போராட்டம் சம்பந்தமாக செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் அப்பாஸ், மாவட்ட செயலாளர் அயூப் அவர்களும், மாநில துணை பொதுச் செயலாளர் நெல்லை யூஸுப், மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ் சுலைமான் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் அனைத்து கிளை நிர்வாகிகளும், உள்ளூர் மக்களும் கலந்துக்கொண்டார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|