முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிர்வாகக் குழு கூட்டத்தில், மறைந்த நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, புதிய நிர்வாகிகளும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, அப்பள்ளியின் துணைச் செயலாளரும், மக்கள் தொடர்பாளருமான கே.எம்.டி.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிர்வாகக் குழுக் கூட்டம் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் தலைமையில் நடைபெற்றது. பள்ளி நிறுவனர்களுள் ஒருவரும், நடப்பு தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
மறைந்த நிர்வாகிகளுக்கு இரங்கல்:
பள்ளியின் நிறுவனர்களும், நிர்வாகிகளுமான - காலஞ்சென்ற
ஹாஜி எம்.எம்.உவைஸ்,
ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா,
ஹாஜி ஏ.எச்.ஷாஹுல் ஹமீத்
ஆகியோரின் பாவப் பிழைபொறுப்பிற்காக (மஃபிரத்திற்காக) துஆ இறைஞ்சப்பட்டதோடு, அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமும் இயற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு:
பள்ளிக்கு, பின்வருமாறு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்
துணைத் தலைவர்கள்:
ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர்
ஹாஜி ஏ.கே.செய்யித் அப்துல் காதிர்
தாளாளர்:
ஹாஜி ஏ.கே.கலீலுர்ரஹ்மான்
செயலாளர்:
ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் ஷம்சுத்தீன்
துணைச் செயலாளர்கள்:
கே.எம்.டி.சுலைமான்
என்.எம்.முஹம்மத் அப்துல் காதிர்
நன்றியுரைக்குப் பின், ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஸாஹிப் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் அதன் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |