திருச்செந்தூர் பள்ளிவாசல் அருகில் அமைந்துள்ள மதுக்கடையை அகற்றிட, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் பேருந்து நிலையத்திற்கு எதிரில் - காயல்பட்டினம் மக்களால் நிர்வகிக்கப்படும் பள்ளிவாசல் உள்ளதாகவும், வழிபாட்டுத் தலத்திற்கும் - மதுபானக் கடைக்கும் 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்கிற நிலையில், 40 மீட்டர் இடைவெளியில் மதுபானக் கடை அமைந்துள்ளதாகவும், மது அருந்திவிட்டு அவர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வோருக்கும், பள்ளிவாசலுக்குத் தொழச் செல்வோருக்கும் இடையூறு அளிப்பதாகவும், எனவே மதுபானக் கடையை அவ்விடத்திலிருந்து அகற்றிடுமாறும், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் டாஸ்மாக் மாநில, மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அளித்துள்ள மனுவில் கோரியுள்ளார்.
தகவல்:
A.R.ஷேக் முஹம்மத் |