காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றம் சார்பில், 10ஆம் மாத கலந்துரையாடல் இம்மாதம் 11ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அதில், தமிழக அரசின் நன்னூலகர் விருது பெற்ற காயல்பட்டினம் அரசு நூலகருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெறப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
ஜனவரி 11 சனிக்கிழமை மாலை 5:30 மணி அளவில் ரஹ்மானியா பள்ளியில் இஸ்லாமியர் தமிழ் இலக்கிய மாமன்றம் சார்பில் 10ஆம் மாத கலந்துரையாடல் இறையருளால் சிறப்பாக நடைபெற்றது.
முதலில் இதன் அமைப்பாளர் ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ் அவர்கள், இலக்கியப் பிரியர்களை வரவேற்ற பின்னர் தமிழக அரசின் நல்நூலகர் விருது பெற்ற காயல் நகர அரசு நூலகர் அ.முஜிப் அவர்களுக்கு, இந்த அமைப்பின் கௌரவ ஆலோசகர் திரு.க.வில்சன் அய்யா அவர்கள் பொன்னாடை போத்தி கௌரவித்தார்கள். அதன்பின், சென்னை மாநகராட்சியில் பணி ஓய்வு பெற்ற உயர் அதிகாரி மிஸ்டர் ஹமீது துரை அவர்கள் இஸ்லாம் சம்பந்தமான ஏழு நூல்களை இந்த அமைப்பின் சார்பில் பரிசாக வழங்கினார்கள்.
இலக்கிய பிரியர்களான திரு.க.வில்சன் அய்யா அவர்கள், கவிஞர் ஷேய்க் ஹாஜி, மிஸ்டர் ஹமீது துரை அவர்கள், ஏ.ஆர்.ஷேக் முஹம்மது, ஏ.கே.செய்யத் அஹமது, நல் நூலகர் அ.முஜிப் ஆகியோர்கள் தாங்கள் கொண்டு வந்த கருத்துகளை பேசினார்கள். முதலில் வந்து பத்து இலக்கிய வேந்தர்களுக்கு காயல் மக்பூப் எழுதிய இடஒதுக்கீடு என்ற 80 பக்க நூல் இலவசமாக வழங்கப்பட்டது. நல்நூலகர் அ.முஜீப் அவர்கள் பேசும் போது கல்வி கடன் எப்படி பெறுவது என்ற நீண்ட தகவல்களை எடுத்து வைத்தார்கள். ஏ.ஆர்.ஷேக் முஹம்மது இதை நமதூர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்புங்கள் என்று ஆலோசனை கூறினார். மஃhpபு பாங்கு சொன்னதால் கலந்துரையாடல் இனிதே நிறைவுபெற்றது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 09ஆம் மாத கலந்துரையாடல் செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |